சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் டப்பிங்கை முடித்த கௌதம் கார்த்திக்..!

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் டப்பிங்கை முடித்த கௌதம் கார்த்திக்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சில்லுன்னு ஒரு காதல்’ புகழ் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘பத்து தல’.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷியபுத்திரன் மற்றும் டீஜய் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் முடிவடைந்தது.

இந்த நிலையில், நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து படங்களைப் பகிர்ந்த கௌதம் கார்த்திக், “பத்து தல படத்துக்கான எனது பகுதிகளுக்கு டப்பிங் முடித்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கௌதம் கார்த்திக்

Gautham Karthik completes dubbing for simbu’s ‘Pathu Thala’

தளபதி 67 படத்திற்காக அர்ஜுன் பெற்ற சம்பளம் இவ்வளவா ?

தளபதி 67 படத்திற்காக அர்ஜுன் பெற்ற சம்பளம் இவ்வளவா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்காக இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர்.

மேலும் இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இப்படம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ‘தளபதி 67’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இது விஜய்யுடன் நடிக்கும் முதல் படமாக இருக்கும்.

இப்படத்தில் நடிக்க அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நெகட்டிவ்வாக பேசினால் யூடியூப்பில் பணம் வருது. ஆனால்… – விஜய்சேதுபதி

நெகட்டிவ்வாக பேசினால் யூடியூப்பில் பணம் வருது. ஆனால்… – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது.

இதன்படி சென்னை பிவிஆா் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், அண்ணா சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கு படங்கள் திரையிடப்பட்டன.

இந்த நிலையில் இந்த திரைப்பட விழாவின் நிறைவு விழா நேற்று டிசம்பர் 22 தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சீனு ராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்ற நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது…

“வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாக உருவாகின்றன; நம் வாழ்க்கையை புரிந்துக் கொள்ள திரைப்படங்களும் அதிகம் உதவுகின்றன.

ஒரு படத்தின், கதையின் மூலம் இயக்குநர்கள் தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துக் கொள்ளுங்கள்; சாதாரணமாக கடந்து போய்விடாதீர்கள்; அதுகுறித்து ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள்.

ஒரு படத்தை விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள்.

இப்போதெல்லாம் யூடியூப்பில் நெகட்டிவ்வாக பேசினால்தான் பணம் வருகிறது.

ஆனால் திரைப்படங்கள் விமர்சகர்கள் பார்வையில் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை.

நடிகர் பூ ராமு அவர்களுடன் இணைந்து இந்த விருதை பெருவதில் எனக்கு மகிழ்ச்சி” என்று பேசினார் விஜய்சேதுபதி.

விருதுக்கான பரிசுத்தொகையை விழாக் கமிட்டிக்கு நன்கொடையாக திருப்பி கொடுத்தார் விஜய்சேதுபதி குறிப்பிடத்தக்கது.

சந்தானத்தின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சந்தானத்தின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்திற்கும் படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.

சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் கதாநாயகியாக நடிக்க, புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஈ ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆதிரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த படம் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

மேலும், இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தை நாளை டிசம்பர் 23 ஆம் தேதி முதல் பிரபலமான SUN NXT டிஜிட்டல் தளத்தில் வெளியீட்டு செய்யப்படுகிறது.

Santhanam’s ‘Agent Kannayiram’ OTT release date announcement

வெளியான சில மணி நேரத்தில் ஆன்லைனில் லீக் ஆன விஷாலின் லத்தி

வெளியான சில மணி நேரத்தில் ஆன்லைனில் லீக் ஆன விஷாலின் லத்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லத்தி படம் திரையரங்குகளில் வெளியான சில மணிநேரங்களில், பல சட்டவிரோத வலைத்தளங்கள் லத்தி திரைப்படத்திற்கான திருட்டு இணைப்புகளை பரப்பத் தொடங்கின.

இந்த திருட்டு இணைப்புகள் இணையம் முழுவதும் உள்ளன, சமூக ஊடக தளங்கள் மற்றும் தனிப்பட்ட கணக்குகள் மூலம் பகிரப்படுகின்றன.

இணைப்புகள் ஒருவரை அவற்றில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க அல்லது முழு திரைப்படத்தையும் இலவசமாகப் பதிவிறக்க அனுமதிக்கின்றன.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஷால், தேவையான வெற்றியை கொடுக்கும் நோக்கில் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.

உதயநிதி விலகியதால் உஷாரான கமல்.; ரெண்டு டாப் ஸ்டார்களுடன் ஒப்பந்தம்.!

உதயநிதி விலகியதால் உஷாரான கமல்.; ரெண்டு டாப் ஸ்டார்களுடன் ஒப்பந்தம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விக்ரம்’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பிலும் தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் தயாரிக்கும் அடுத்த படங்களில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயனும் மற்றொரு படத்தில் உதயநிதியும் நடிக்க உள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையில் தான் தமிழக அமைச்சரவையில் ‘இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை’ அமைச்சராக பதவி ஏற்று கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘மாமன்னன்’ தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என அறிவித்து கமல்ஹாசன் படத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் உதயநிதி.

இந்த நிலையில் உதயநிதிக்கு பதிலாக இதில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் இருவர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

More Articles
Follows