தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தளபதி, இருவர், துப்பாக்கி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்திற்கும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இவரின் தந்தை சிவன் என்பவரும் பிரபல ஒளிப்பதிவாளர்தான்.
பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் அபயம், யாகம், கொச்சு கொச்சு மோகங்கள் உள்ளிட்ட மலையாள படங்களையும் இயக்கியுள்ளார்.
மூன்று முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சிவன் இன்று மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் காலமானார்.
இதனையடுத்து சந்தோஷ் சிவன் குடும்பத்தினர்களுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Famous cinematographer Santhosh Sivan father passed away