‘அந்தாதூன்’ ஹாட் அப்டேட்..: பியானோ வாசிக்கும் பிரசாந்த்.. புத்தாண்டில் டைட்டில் லுக்

‘அந்தாதூன்’ ஹாட் அப்டேட்..: பியானோ வாசிக்கும் பிரசாந்த்.. புத்தாண்டில் டைட்டில் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhadhunகடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹிந்தியில் வெளியான படம் ‘அந்தாதுன்’.

இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அப்பட ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்தார்.

பிரசாந்த் & சிம்ரன் & கார்த்திக் நடிக்கின்றனர்.

ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

இப்படத்தின் டைட்டில் ஜனவரி 1-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாம்.

இரண்டு நிமிடங்கள் 12 நொடி நீளமுள்ள வீடியோ வெளியிட்டு இந்த டைட்டில் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் பியானோ வாசித்தபடி பிரசாந்த் அமர்ந்திருக்கிறார்.

நடிகர் பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Andhadhun title look on Jan 1st

‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி & மாதவன் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்கள் தான்..

‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி & மாதவன் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்கள் தான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Vedhaவிஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்டோர் நடித்த படம் ‘விக்ரம் வேதா’.

சஷிகாந்த் தயாரிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கியிருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து சஷிகாந்த் இதனை ரீமேக் செய்ய முன் வந்தார்.

மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிப்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் விஜய்சேதுபதி கேரக்டரில் யார் நடிக்கிறார்? என்பதற்கு விடை இல்லாமல் நீடித்தது.

அமீர்கான், ஷாரூக்கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தற்போது ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Here is official confirmation for Hindi remake of Vikram Vedha

ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் ஆவாரா? உடல்நலம் விசாரித்த முதல்வர் & துணை முதல்வர்

ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் ஆவாரா? உடல்நலம் விசாரித்த முதல்வர் & துணை முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஉடல் நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று வந்தது.

இன்று அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவரின் ரத்த அழுத்தம் நேற்றை விட தற்போது சீராக உள்ளது.

அவருடைய ரத்த அழுத்தத்தை பொறுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.

மேலும் அவரது உடல்நிலை சீராகும் வரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

#GetWellSoonThalaiva மருத்துவமனையில் ரஜினி அனுமதி.; எப்படியிருக்கிறார் தலைவர்?

ரஜினிகாந்த் உடல்நலம் பெற அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் ரஜினியிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இது தொடர்பான செய்தி குறிப்பில்…

ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை இன்று (டிசம்பர் 26) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தன் ட்விட்டரில்…

“உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Rajinikanth’s Blood Pressure Continues to Stay High, Decision on His Discharge today evening

3 மொழிகளில் ஒரே நாளில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..; ஹிந்தியில் வெறித்தனமான டைட்டில் வைத்த படக்குழு

3 மொழிகளில் ஒரே நாளில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..; ஹிந்தியில் வெறித்தனமான டைட்டில் வைத்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Hindiலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ் & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

தற்போது இந்தி டப்பிங்கும் தயாராகியுள்ளது.

ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

விஜய்யின் ‘மாஸ்டர்’க்கு யுஏ சர்ட்டிபிகேட் கொடுத்த சென்சார்..? இதன் காரணம்.?

எனவே ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர்.

கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அங்கு கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் திறக்க அனுமதியில்லை.

official confirmation about Master in Hindi

#GetWellSoonThalaiva மருத்துவமனையில் ரஜினி அனுமதி.; எப்படியிருக்கிறார் தலைவர்?

#GetWellSoonThalaiva மருத்துவமனையில் ரஜினி அனுமதி.; எப்படியிருக்கிறார் தலைவர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans prayers and Rajini health condition updatesரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்தது.

படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் எனவே தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என அண்ணாத்த பட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரஜினிகாந்த்தை தீவிரமாக கண்காணித்துவருகிறோம்.

அவருடைய ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான மருந்துகள் மிகக்கவனமாக கொடுக்கப்படுகிறது.

‘அண்ணாத்த’ சூட்டிங்கில் நால்வருக்கு கொரோனா..; காதலி நயன்தாராவை பத்திரமாக அழைத்து வந்த விக்கி

சில பரிசோதனைகள் நாளை மேற்கொள்ளப்படும். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு உள்ளார்.

அவருடைய நலம் விரும்பிகள் யாரும் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம். அவரது உடல்நலம் கருதி யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று அவருடைய குடும்பத்தினரும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். அவருடைய மகள், அவருடன் இருக்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ரஜினியின் உடல்நலம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

மேலும் அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும் ரஜினி உடல் நலம் குறித்து மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு விசாரித்து அதனை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இனி போர் நேரம்… பாரபட்சம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்..; ரஜினிக்கு ஆதரவாக ராணா அதிரடி

ரத்த அழுத்த அளவில் சீரின்மை மற்றும் உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்னைகளும் இல்லை என்றும் இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருப்பதாகவும் ரத்த அழுத்தம் சீராகி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை தரப்படும் என மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் விசாரித்துள்ளார். அதேபோல் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டவர்களும் நலம் விசாரித்துள்ளனர்.

மேலும் நண்பர் ரஜினி நலம் பெற வாழ்த்துக்கள் என கமல் பதிவிட்டுள்ளார்.

#GetWellSoonThalaiva என ரஜினி ரசிகர்கள் தங்கள் பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

Rajini fans prayers and Rajini health condition updates

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் ‘தூங்கா கண்கள்’

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் ‘தூங்கா கண்கள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Christmas release Thoonga Kangal movie news updatesவினு இயக்கத்தில் மைக்கேல், நிக்கி, நேகா, நிகிதா, ஆதி நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “தூங்கா கண்கள்”.

புதையலைத் தேடி காட்டுக்குள் பயணிக்கும் சிலர், அங்கு இருக்கும் அமானுஷ்யம் கொண்ட தீய சக்தியிடம் மாட்டிக் கொண்டு பலியாகின்றனர்.

இறுதியாக அந்த அமானுஷ்ய சக்தியை அழித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகிறது.

சீட்டின் நுனியில் ரசிகர்களை அமர வைக்கும் விதமாக காட்சிகளை மிக அருமையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இமயவன்

இசையில் மிரட்டியிருக்கிறார் இளங்கோ கலைவானன்.

அனைத்து ரசிகர்களையும் எளிதாக கவரும் வகையில் தூங்கா கண்களை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வினு.

Christmas release Thoonga Kangal movie news updates

More Articles
Follows