சென்டிமீட்டருக்காக யோகி பாபுவை இயக்கும் தர்பார் பட ஒளிப்பதிவாளர்

yogi babu and santhosh sivanரோஜா, தளபதி, இருவர், துப்பாக்கி, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான ரஜினியின் தர்பார் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

12 முறை தேசிய விருகளையும் வென்றிருக்கிறார் இவர்.

இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்திற்காக மஞ்சுவாரியர் மற்றும் காளிதாஸ் ஜெயராமை இயக்கி வருகிறார்.

இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது.

தமிழில் சென்டிமீட்டர் என்ற பெயரிட்டுள்ளார்.

இதில் யோகிபாபு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம்.

யோகி பாபு கேரக்டரை மலையாளத்தில் சௌபின் சாஹிர் என்பவர் செய்துள்ளார்.

இப்படம் கொரோனா லாக் டவுன் முடிந்த பிறகு ரிலீசுக்கு தயாராகும் எனத் தெரிகிறது.

Overall Rating : Not available

Latest Post