தளபதி-யை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் சந்தோஷ் சிவன்

rajini and santhosh sivanரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 166 படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதை பல முறை பார்த்து விட்டோம்.

இப்படத்திற்கு முருகதாஸின் ‘துப்பாக்கி’, ’ஸ்பைடர்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என தெரிவித்திருந்தோம்.

இப்போது அந்த தகவலை சந்தோஷ் சிவன் உறுதி செய்துள்ளார்.

அவர்… ‘தளபதி’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி படத்தில் பணிபுரிய உள்ளேன்’’ என்று ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ 1991-ல் வெளியானது.

இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சந்தோஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது

Overall Rating : Not available

Related News

மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி.…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மெகா…
...Read More
ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில்…
...Read More

Latest Post