நயன்தாராவை ரஜினிக்கு ஜோடியாக்கும் ஏஆர். முருகதாஸ்.?

நயன்தாராவை ரஜினிக்கு ஜோடியாக்கும் ஏஆர். முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara may pair up with Rajinikanth in Thalaivar 166 movieரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

விரைவில் தனது அடுத்த படத்தை துவங்கவுள்ளார்.

வருகிற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் அந்த சமயம் தமிழகத்தில் இல்லாமல் வெளிநாட்டிலோ அல்லது வேறு மாநிலத்திலோ தலைவர் 166 பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடிக்கவுள்ளார்.

இப்படத்தை முருகதாஸ் இயக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என தகவல்கள் வருகின்றன.

ஏற்கெனவே ரஜினியுடன் சந்திரமுகி, சிவாஜி, குசேலன் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara may pair up with Rajinikanth in Thalaivar 166 movie

தளபதி-யை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் சந்தோஷ் சிவன்

தளபதி-யை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் சந்தோஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and santhosh sivanரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 166 படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதை பல முறை பார்த்து விட்டோம்.

இப்படத்திற்கு முருகதாஸின் ‘துப்பாக்கி’, ’ஸ்பைடர்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என தெரிவித்திருந்தோம்.

இப்போது அந்த தகவலை சந்தோஷ் சிவன் உறுதி செய்துள்ளார்.

அவர்… ‘தளபதி’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி படத்தில் பணிபுரிய உள்ளேன்’’ என்று ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ 1991-ல் வெளியானது.

இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சந்தோஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது

ஜோதிகா-யோகி பாபு இணையும் படத்தை இயக்கும் ’குலேபகாவலி’ இயக்குனர்

ஜோதிகா-யோகி பாபு இணையும் படத்தை இயக்கும் ’குலேபகாவலி’ இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jyothika and yogi babuசூர்யாவின் ‘2D ENTERTAINEMT’ நிறுவனம் தயாரிக்க, ஜோதிகா நடிக்கும் புதிய பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சூர்யா கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

வழக்கம்போல இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்திய கதை தான்.

இப்படத்தை ’குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார்.

காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.

கலை இயக்கத்தை வீரசமர் கவனிக்க, படத்தொகுப்பை விஜய் கவனிக்கிறார்.

இவையில்லாமல் அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா.

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலத்தில் பட பிடிப்பை முடித்த கூர்கா பட குழுவினர்

குறுகிய காலத்தில் பட பிடிப்பை முடித்த கூர்கா பட குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gurkhaதீவிரமான திட்டமிடுதலே ஒரு இலக்கை அடைவதற்கான மிகச்சரியான வழிமுறை. முக்கியமாக சினிமாவிற்கு இதுபொருந்தும். குறிப்பாக யோகிபாபுவின் “கூர்கா” திரைப்படத்தை நிலையான வேகத்தில் , சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்தனர்.

” இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. “கூர்கா” கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர். நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா ,மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா , கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்” என்றார் படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன்.

காமெடி மற்றும் action கலந்த திரைப்படமாக வளரும் “கூர்கா”, ஒரு கடத்தப்பட்ட காரை , ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.

சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை, தனது நண்பர்களோடு இணைந்து “4 மங்கீஸ்” ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசையமைக்க , கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்

Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா

Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Untitled-2தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெறுகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா.

“இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் இயக்குனர் பாலய்யா. இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மேலும், இந்த பெயரிடப்படாத படம் ‘டார்க் காமெடி த்ரில்லர்’ வகையைச் சேர்ந்தது. யோகிபாபு மற்றும் முனிஷ்காந்த் (அ) ராமதாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க ஒரு சில பிரபலமான மற்றும் முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்.

ஷமந்த் (இசை), ஏ.விஸ்வநாத் (ஒளிப்பதிவு), எம்.முரளி (கலை இயக்குநர்) மற்றும் தினேஷ் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

சௌந்தர்யா ரஜினி வாழ்க்கையில் முக்கியமான 3 ஆண்கள் இவர்கள்தான்

சௌந்தர்யா ரஜினி வாழ்க்கையில் முக்கியமான 3 ஆண்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanthதன் வாழ்க்கையில் 3 முக்கியமான ஆண்கள் என 3 பேரை குறிப்பிட்டுள்ளார் செளந்தர்யா ரஜினி.

அவரது ட்விட்டர் பதிவில்…

”வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய அன்பு அப்பா, தேவதை போன்ற மகன், இப்போது என்னுடைய விசாகன் ஆகியோர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 3 ஆண்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினி திருமணம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்தவருமான விசாகனை திருமணம் செய்துகொண்டார்.

அமெரிக்காவில் படித்த விசாகன், தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

More Articles
Follows