‘பிக்பாஸ்’ ஆரிக்கு வில்லனாகும் ‘ஜிமிக்கி கம்மல்’ நடிகர்

‘பிக்பாஸ்’ ஆரிக்கு வில்லனாகும் ‘ஜிமிக்கி கம்மல்’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AppaniSarathமோகன்லால் நடித்த ‘வெளிப்பாண்டிடே புஸ்தகம்’ படத்தில் இடம் பெற்ற ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் மூலம் பிரபலமானவர் அப்பாணி சரத்.

அப்பாடலும் அந்த படமும் பிரபலமானதால் தமிழில் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், விஷாலின் சண்டக்கோழி-2 ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவையில்லாமல் ஆட்டோ சங்கர் கேரக்டரில் அந்த வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன்-4 வின்னர் நடிகர் ஆரி நடிக்கவுள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் அப்பாணி சரத்.

இதில் ஆரி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ள இப்படத்தை முருகதாஸின் உதவி இயக்குனர் அபின் ஹரிஹரன் இயக்குகிறார்.

Appani Sarath playing antogonist in Aaari’s next film

ஆகாயத்தில் பறக்கும் ‘அண்ணாத்த’ மகள் கீர்த்தி சுரேஷ்

ஆகாயத்தில் பறக்கும் ‘அண்ணாத்த’ மகள் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshதமிழ் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து வருகிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகே அண்ணாத்த சூட்டிங்கில் ரஜினி கலந்துக் கொள்வார் என கூறப்படுவதால் மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி.

இதன் படப்பிடிப்பு ஜனவரி25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.

தற்போது துபாயில் தொடங்கவுள்ள நிலையில் இதற்காக அந்த நாட்டிற்கு பறந்துள்ளார் கீர்த்தி.

இப்படத்தை கீதா கோவிந்தம் பட புகழ் பரசுராம் பெட்லா இயக்குகிறார்.

குட்லக் சகி, மிஸ் இந்தியா, ஆகிய படங்களுக்காக உடல்எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy suresh to go abroad for her next film shoot

சிவகார்த்திகேயனின் ‘மனம் கொத்தி பறவை’-க்கு கேரளாவில் திருமணம்

சிவகார்த்திகேயனின் ‘மனம் கொத்தி பறவை’-க்கு கேரளாவில் திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

manam kothi paravaiஎழில் இயக்கிய மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா.

மலையாள நடிகையான இவர் தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’, விரைவில் வெளியாகவுள்ள ‘வெள்ளை யானை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த கேரளாவை சேர்ந்த சனூப் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறாராம் ஆத்மியா. மணமகன் கப்பலில் பணிபுரிகிறாராம்.

இவர்களது திருமணம் ஜனவரி 25ல் கேரளா கன்னூரில் நடைபெறவுள்ளது.

அடுத்த நாளே ஸ்டார் ஓட்டலில் திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளதாம்.

திருமணம் நடந்தாலும் நடிப்பதை நிறுத்த மாட்டேன் என தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டாராம் இந்த மனம் கொத்தி பறவை.

Wedding bell for Sivakarthikeyan’s heroine

ரஜினி விஜய் சூர்யாவுக்கு அடுத்து சமந்தாவுக்கு கிடைத்த பெருமை

ரஜினி விஜய் சூர்யாவுக்கு அடுத்து சமந்தாவுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்விட்டர் பக்கத்தில் தங்கள் படங்களுக்கு எமோஜி கிடைப்பது ஒரு பெருமையாக தமிழ் திரையுலகினர் பார்க்கின்றனர்.

கோலிவுட்ல் ‘மெர்சல், காலா, சூரரைப் போற்று மாஸ்டர்’ ஆகிய படங்களுக்காக அந்தந்த ஹீரோக்களுக்கு டுவிட்டரில் எமோஜிக்கள் கிடைத்தன.

இதுவரையில் ஹீரோக்களுக்கு மட்டுமே இந்த எமோ பெருமை கிடைத்தன.

தற்போது முதன்முறையாக ஒரு நடிகையான சமந்தாவுக்கும் எமோஜி கிடைத்துள்ளது.

சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கும் எமோஜி கிடைத்துள்ளது.

இவருக்கு முன்பு வட இந்தியாவில் பிரியங்கா சோப்ரா நடித்த ‘த ஸ்கை இஸ் பின்க்’ படத்திற்கு எமோஜி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha is the first actress to get emoji in india

ஆபாச வீடியோ வைரல்…; அஜித்தின் ரீல் மகள் அனிகா அழுகை

ஆபாச வீடியோ வைரல்…; அஜித்தின் ரீல் மகள் அனிகா அழுகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி அனிகா.

தற்போது குமரியாக வளர்ந்து நாயகியாக நடிக்க காத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் தனது ஹாட்டான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களையும் இணையத்தையும் சூடேற்றி வருகிறார்.

இந்த நிலையில் அரைகுறை உடையில் அனிகா ஆபாசமாக நடனம் ஆடுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.

இதனை சிலர் ரசித்தும் சிலர் கண்டித்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

தற்போது அந்த பாச வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார் அனிகா.

அவர் கூறும்போது, “கருப்பு உடையில் நடனம் அந்த பெண் நான் அல்ல. அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. நிஜத்தில் என்னை பார்ப்பதுபோலவே அதை மார்பிங் செய்துள்ளனர்.

அந்த வீடியோ எல்லை மீறும் வகையில் உள்ளது. அந்த வீடியோவை இணைய தளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார் அனிகா.

Actress Anikha Surendran about her alleged morphed video thats gone viral

anika fake image

ரஜினி விஜய்யை அடுத்து டாப் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி

ரஜினி விஜய்யை அடுத்து டாப் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi‘மாஸ்’ ஹீரோவாக வலம் வரும் போதே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் விஜய்சேதுபதி.

இதற்கு முன்பே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் பிரபல ஹீரோவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எஃப் 2 படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

இதையடுத்து பிரபாஸை ஹீரோவாக வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்

இந்தப் படத்தை கே.ஜி.எஃப் படங்களை தயாரித்த, ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க, விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

மக்கள் செல்வனும் அதில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Vijay Sethupathi to play antogonist in prabhas next film

More Articles
Follows