கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா

கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director sathyaநெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2, இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா.

இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.

‘விழுத்திரு
தனித்திரு
வரும் நலனுக்காக
நீ தனித்திரு’
என்ற இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார்.

பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், அபி (கனடா), சுதர்சனன் அசோக்(அமெரிக்கா), கணேசன் மனோகரன், இன்ஜாமம் ஆகியோருடன் இசை அமைப்பாளர் சி.சத்யாவும் இணைந்து பாடியுள்ளார்.

பாடல் உருவாக்கம் பற்றி சி.சத்யா கூறியதாவது…
“முன்பு அறிவியல் வளர்ச்சி குறைவு.
அதனால் இசைக் கலைனஞர்கள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இணைந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இப்போது அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது.

தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தில்
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இசையமைப்பாளராக என்னுடைய பங்களிப்பை வழங்க முடிவு செய்தேன்.

இதில் பாடியவர்கள், பாடல் எழுதியவர் அனைவரும் ஆன்-லைன் மூலம் பாடியும், எழுதியும் கொடுத்தார்கள்.

தொடர்ந்து சில ஆல்பங்களை வெளியிடவுள்ளேன்” என்றார்.

இவர் தற்போது எழில் இயக்கியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’, சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை -3’, ‘ராங்கி’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Hope all safe .
This song is my small contribution to create an awareness to the people with co-musicians. Here is the link of YouTube channel.

https://www.youtube.com/channel/UCGRAiGR09SGw6ViRVybIlyQ

மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி

மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pushpa film தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்று உலகளவில் மொழிகளைத் தாண்டி பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக ரூபாய் 1.25 கோடியை மத்திய மாநில அரசுகளுக்கும், கொரோனா வைரஸ் பரவலால் வேலை இழந்து வாடும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 25 லட்சமும் வழங்கி அனைத்து ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் நடிகர் அல்லு அர்ஜுன்.

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தமிழ் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்த்த தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியளித்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் “புஷ்பா” . இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.

ஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக நவீன், ரவி இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் டி.எஸ்.பி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவான ஆர்யா மற்றும் ஆர்யா 2 படத்திற்கு இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

போலாந்து நாட்டை சேர்ந்த கியுபா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

உலகளவில் அனைத்து திரைப்பட ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

அரசியல் மிரட்டல்களை மீறி கொரோனாவின் தாக்கத்தை சொல்லும் ‘மூடர்’

அரசியல் மிரட்டல்களை மீறி கொரோனாவின் தாக்கத்தை சொல்லும் ‘மூடர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

moodar pilot filmசில நேரங்களில், சில படங்கள் உண்மை தன்மைக்கு பக்கத்தில் ஜெராக்ஸ் எடுத்தது போல அமைந்து விடும்.

அப்படி சம காலத்தில் கொரோனா நோயினால் உலகமே துவண்டு கிடக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட “மூடர்” பைலட் பிலிம், சிலர் சொந்த சுயலாபத்திற்காக வைரஸ் கிருமிகளை பரப்புவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

சமகாலத்தில் இன்றைய காலகட்டத்திற்கு இந்த படம் உண்மையை உலகிற்கு உரக்க சொல்வது போல இயக்கியிருக்கிறார் தாமோதரன் செல்வகுமார்.

பல அரசியல் கட்சிகளின் மிரட்டல்களுக்கு பிறகு இணையத்தில் வெளியான இந்த “மூடர்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து இயக்குனர் தாமோதரன் செல்வகுமார் முழு நீள படமாக இயக்கப் போகிறார்.

அதற்கான அடுத்தகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

மூடர் பைலட் பிலிமில் நடித்தவர்கள் கார்த்தி, அனிஷா, சசிதரன், ஆர்த்தி சுபாஷ், மதன் கோபால், வினோத் லோகிதாஸ், பிர்லாபோஸ், சக்திபோஸ், உறியடி 2 சசிக்குமார், சிவக்குமார் ராஜ், சிவக்குமார் T.

ஒளிப்பதிவு: கலைசக்தி

இசை: JC ஜோ

எடிட்டிங்: M.K.விக்கி

2 Attachments

BREAKING கமலுக்கு குட்டு; அஜித்துக்கு பாராட்டு தெரிவித்த தமிழக அமைச்சர்

BREAKING கமலுக்கு குட்டு; அஜித்துக்கு பாராட்டு தெரிவித்த தமிழக அமைச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister Kadambur Raju talks about Kamal and Ajithகொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க உலகில் உள்ள பல நாடுகள் போராடி வருகின்றன.

இந்திய அரசும் ஊரடங்கு உத்தரவு அளித்து மக்களை தற்காத்து கொள்ள நிறைய வழிமுறைகளை வலியிறுத்தி வருகின்றன.

ஊரடங்கு உத்தரவு சரியாக திட்டமிடப்படவில்லை என மோடி மீது பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார் கமல்ஹாசன்.

இந்த நிலையில் இது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியதாவது..

’விமர்சனம் செய்யும் நேரம் இது கிடையாது. முடிந்தால் நல்ல ஆலோசனை வழங்கலாம் என்று கமலஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதே சமயத்தில் கொரோனோ நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய முன் வரவேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக் கொண்டுள்ளார்.

TN Minister Kadambur Raju slams Kamal and Supports Ajith

ஊரடங்கால் மது கிடைக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட்ட மனோரமா மகன்

ஊரடங்கால் மது கிடைக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட்ட மனோரமா மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aachi Manaroma son Boopathy admitted in hospital ஆச்சி என்று தமிழக ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா. இவர் சில வருடங்களுக்கு முன் காலமானார்.

இவரின் மகன் பூபதி. இவரும் சில படங்களில் நடித்துள்ளார்.

பூபதிக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளது.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு நீடிப்பதால் மது எங்கும் கிடைக்கவிலை.

இதனால் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

இதனால் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்தவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நமக்கு கிடைத்த தகவல் தெரிவிப்பதாவது…

மனோரமாவின் பேரனும், பூபதியின் மகனுமான டாக்டர் ராஜராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது…

அப்பா மது அருந்துவது உண்மை தான், 144 தடை உத்தரவால் மது கிடைக்கல. எனவே ஓரிரு தூக்க மாத்திரை சாப்பிட்டு அமைதியாக ஓய்வெடுத்து வந்தார்.

இப்போது இந்த மாத்திரைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

திடீரென குடியை நிறுத்தும் போது குடிப்பவர்களுக்கே வரும் நடுக்கம் அப்பாவுக்கு வந்தது.

எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

அப்பா ஏதோ தற்கொலை செய்ய முயன்றது சிலர் வீண் வதந்திகளை பரப்புகிறார்கள். அது தவறு. அப்பா நலமாக உள்ளார்” என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aachi Manaroma son Boopathy admitted in hospital

கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுக்கும் ரஜினி-வைரமுத்து

கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுக்கும் ரஜினி-வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Vairamuthu offers their Marriage hall for Corona treatment இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் 14 வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

அதற்கு பிறகும் நீடிக்குமா? என்பது விரைவில் தெரிய வரும். ஒரு சில மாநில முதல்வர்கள் இந்த ஊரடங்கை நீடிக்குமாறு கேட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதுபோல நடிகர்கள் விஜயகாந்த், கமல் ஆகியோர் தங்கள் இடங்களை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

கமல் தன் அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ள அறிக்கை அளித்திருந்தார்.

அதுபோல் விஜயகாந்த் தன் கட்சி ஆபீஸ் மற்றும் காலேஜ்ஜை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை நடிகர் ரஜினி அவர்கள் தற்போது கொரோனா வைரஸ் சிகிசைக்காக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஏற்கனவே, கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மக்கள் தங்குவதற்காக (துப்புரவு பணியாளர்கள்) அந்த மண்டபத்தில் இடம் அனுமதிக்கப்பட்டு உணவளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவும் சூளைமேடில் இருக்கும் தன் பொன்மணி மாளிகையை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Rajini and Vairamuthu offers their Marriage hall for Corona treatment

More Articles
Follows