தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதன் டீசர் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும், இந்த கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் பாடல்கள் காதலர் தின விருந்தாக பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் மணிரத்னம் இயக்கி, கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை படத்தின் ஒரு பாடல்கள் வெளியாகிறதாம்.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
எனவே இந்த தேதியை மாற்றி நாளை (பிப்ரவரி 10) தேதி வெளியிட தனுஷ் பட பாடல்களை வெளியிடவிருக்கிறாராம் கௌதம் மேனன்.