*சர்கார்* விஜய்யுடன் மோதும் தனுஷ்; இது 4வது முறை

Vijays Sarkar and Dhanushs ENPT movies will clash on 2018 Diwaliகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுசுக்கு அண்ணனாக சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதால், தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

`கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நன்றி தனுஷ், எங்களுடன் இந்த பயணத்தில் இணைந்த சசிகுமாருக்கு மிக்க நன்றி.

இனி தர்புகா சிவா, எடிட்டர் பிரவீன் படத்தை பார்த்துக் கொள்வார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதே நாளில்தான் விஜய்யின் சர்கார் படமும் வெளியாகிறது.

எனவே இரு படங்களுக்கும் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பே 3 முறை விஜய் மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Vijays Sarkar and Dhanushs ENPT movies will clash on 2018 Diwali

Overall Rating : Not available

Latest Post