தனுஷ்-கௌதம் மேனன் பட இளம் நடிகர் தற்கொலை

தனுஷ்-கௌதம் மேனன் பட இளம் நடிகர் தற்கொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Srivatsavகௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இதில் தனுஷ் & மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்திருந்தனர்

இப்பட மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீவஸ்தவ். இவர் சென்னையை சேர்ந்தவர.

மேலும் யூ-டியூப்பில் ஒளிப்பரப்பாகி வரும் ‘வல்லமை தாரோயா’ என்ற தொடரிலும் நடித்திருந்தார்.

கடந்த புதன்கிழமை பிப். 3 படப்பிடிப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினாராம்.

ஷூட்டிங்கில் இருந்தால் ஸ்ரீவத்ஸ்வ் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவது வழக்கம் என்பதால் பெற்றோர் அவரை தேடவில்லை.

இந்நிலையில் தன் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு வீட்டில் அவர் தூக்கில் தொங்கியுள்ளார்.

இரண்டு் நாட்களுக்கு பிறகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனால் அவருடைய குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே அவருக்கு மனநிலை சரியில்லை எனவும் தகவல்கள் வருகின்றன.

Actor Dhanush’s co-star Srivatsav Chandrasekar allegedly dies by suicide

இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி படம் இடம் பெறுமா..?; ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு.!

இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி படம் இடம் பெறுமா..?; ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய ரூபாய் தாள்களில் தேசத் தந்தை மஹாத்மா காந்தி படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டில் காந்தியை போல தேசிய தலைவர்கள் படங்களும் இடம் பெற வேண்டும் அடிக்கடி கோரிக்கை எழும்.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நேதாஜி படம் இடம்பெற வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்…

“பிரிட்டீஷ் அரசை எதிர்த்துப் போரிட, இந்திய தேசிய ராணுவத்தை – ஐ.என்.ஏ., நேதாஜி உருவாக்கினார்.

விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என நம்பப்பட்டாலும், அவரது உடல் மீட்கப்படவில்லை.

சுதந்திரத்திற்கு பாடுபட்ட அவருக்கு உரிய மரியாதை அளிக்க, மத்திய அரசு தவறி விட்டது.

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தியாகம் குறித்து தற்போதைய இளைஞர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.

எனவே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படத்தை, ரூபாய் நோட்டுகளில் இடம்பெறச் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன்.

இது தொடர்பான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள் ‘பிரதமர் மற்றும் நிதித்துறை செயலர், மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

Indian leader Netaji photo on currency note

பனையூர் ஆபிஸுக்கு தளபதி திடீர் விசிட்..; ஆனா ரசிகர்கள் இப்படி செஞ்சிருக்க கூடாது..!?

பனையூர் ஆபிஸுக்கு தளபதி திடீர் விசிட்..; ஆனா ரசிகர்கள் இப்படி செஞ்சிருக்க கூடாது..!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அருகே பனையூர் என்றொரு கிராமம் உள்ளது.

இங்கு விஜய் மக்கள் இயக்க அலுவலகம் அமைந்துள்ளது.

இங்கு விஜய் அடிக்கடி வந்து ரசிகர்களை விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களை சந்திப்பார்.

இந்த இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இதில் பங்கேற்பார்.

இன்று புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

எவரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென கூட்டத்திற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய்

விஜய்யின் வருகை தெரிந்ததும் ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்துள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பாராத விஜய் காரிலிருந்து இறங்காமலேயே வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

விஜய் சிக்கிய வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Vijay surprise visit to his office

விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ பட புரொடியூசர் மீது சிபிசிஐடி வழக்கு

விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ பட புரொடியூசர் மீது சிபிசிஐடி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்த ம் ‘மாஸ்டர்’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2020 மார்ச் மாதமே நடைபெற்றது.

(கொரோனா லாக்டவுனால் படம் 2021 ஜனவரியில் படம் ரிலீசானது)

இப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு விஜய் வரும் போது தெறி பட பாடலையும் விஜய் சேதுபதி வரும் போது விக்ரம் வேதா பட பாடல்களை ஒலிக்க செய்து பயன்படுத்தியுள்ளனர்.

இப்பாடல்களின் உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அதற்கான காப்புரிமையை நோவெக்ஸ் கம்யூனிகேசன் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாம்.

சட்டப்படி பாடல்களை காப்புரிமை பெற்றுள்ள நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என இந்திய காப்புரிமைச் சட்டம் சொல்கிறது.

எனவே மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதாம்.

ஆனால் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் இந்த புகாருக்கு பதிலளிக்காததால் சிபிசிஐடியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு பிரிவில் நோவெக்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என எக்மோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை முடிவில்‘மாஸ்டர்’ தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் காப்புரிமை சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் மீது அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

CBCID case filed against on Master producer

master producer

‘அம்மன்’ சீரியல் நடிகர் அவினாஷின் வருங்கால மனைவி இவர்தானா..??

‘அம்மன்’ சீரியல் நடிகர் அவினாஷின் வருங்கால மனைவி இவர்தானா..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Avinash Ashokஓடி விளையாடு பாப்பா & டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் அவினாஷ் அசோக்.

இவர் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான அழகு, சாக்லேட் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார்.

தற்போது தற்போது கலர்ஸ் டிவி தமிழில் ‘அம்மன்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் அவினாஷ்.

இந்த நிலையில் தனது வருங்கால மனைவியான த்ரேஷா ஜோசப் என்பவரின் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் தங்கள் காதலை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அவினாஷ்

Amman serial hero Avinash Ashok to tie knot with Tresa Joseph

தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு.? லதா ரஜினி கட்சி தொடங்க வாய்ப்பு..? சுதாகர் அறிக்கை

தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு.? லதா ரஜினி கட்சி தொடங்க வாய்ப்பு..? சுதாகர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கடந்த 2020 டிசம்பர் 3ல் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

தான் தொடங்கவுள்ள புதிய கட்சிக்கு கட்சிக்கு அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்திருந்தார் ரஜினிகாந்த்.

ஆனால் அதே மாதம் டிசம்பர் 29ல் தன் உடல்நிலையை காரணம் காட்டி “அரசியலும் கிடையாது கட்சியும் கிடையாது” என ட்விட்டரில் நீண்ட விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

அதுபோல் அர்ஜுன மூர்த்தியும் ரஜினி பெயரில் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு நிர்வாகி சுதாகர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில்…

“வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை.

இந்த சட்டமன்ற தேர்தலுக்கு 100% ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்.

அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பரவும் தகவல் பொய்யானது.

இவ்வாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

#Rajinikanth #TNElections2021 #LathaRajini

RMM press statement on Rajinikanths support in this election

More Articles
Follows