ஒரு வழியாக பாய தயாரானது தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

ஒரு வழியாக பாய தயாரானது தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushs Enai Noki Paayum Thota censored with UA certificateகௌதம் மேனன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

வெகு நீண்ட காலமாக இப்படம் தயாரிப்பிலேயே இருந்தது.

அண்மையில் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்ற நிலையில், படம் சென்சாருக்கு அனுப்பட்டது.

தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் உடன் மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.

Dhanushs Enai Noki Paayum Thota censored with UA certificate

வன்முறையை மன்னிக்க முடியாது; முடிவு கட்டும் நேரமிது.. : ரஜினி

வன்முறையை மன்னிக்க முடியாது; முடிவு கட்டும் நேரமிது.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth condemns the barbaric act in Pulwama Terror attackஇந்தியாவில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் புலவாமா பகுதி உள்ளது.

இங்கு 2,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.

இந்திய ராணுவ வாகனத்தின்மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரைக் கொண்டு மோதினர்.

இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் இந்தியா மற்றும் உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

இந்த தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆதில் அகமது என்ற 23 வயது தீவிரவாதி நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொடூரத் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது…

காஷ்மீர் புல்வாமாவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பொறுத்தது போதும்…

இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த அனைத்து ஜவான்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரமரணமடைந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.’’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ரஜினி.

Rajinikanth condemns the barbaric act in Pulwama Terror attack

Rajinikanth condemns the barbaric act in Pulwama Terror attack

ஆரி-சாஷ்வி பாலா இணையும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’

ஆரி-சாஷ்வி பாலா இணையும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aaris next film titled Ellam Mela Irukuravan Pathupanபுரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் ‘ராவுத்தர் மூவிஸ்’.

இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் முதல் பார்வை (FirstLook)போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.

இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.

Aaris next film titled Ellam Mela Irukuravan Pathupan

ஜிவி. பிரகாஷை இயக்கும் விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டர்

ஜிவி. பிரகாஷை இயக்கும் விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Vijays Hit film director Ezhil team up with GV Prakashவிஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எழில்.

இவர் தற்போது ஜிவி. பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை இன்று துவங்கி  உள்ளார்கள்.

எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது. C.சத்யா என்பவர் இசையைமக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி  சப்ஜெக்ட். மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Ajith and Vijays Hit film director Ezhil team up with GV Prakash

Ajith and Vijays Hit film director Ezhil team up with GV Prakash

குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் “கண்களை மூடாதே“

குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் “கண்களை மூடாதே“

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kangalai moodathe stillsசெயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் K.E.எட்வர்ட் ஜார்ஜ் தயாரிக்கும் படம் “கண்களை மூடாதே“.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து,தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் “K.E.எட்வர்ட் ஜார்ஜ்“ நாயகியாக சித்ராய் நடித்துள்ளார்.

மற்றும் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், கிங்காங், சின்னதம்பி, மார்த்தாண்டம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – திஷாத் சாமி

எடிட்டிங் – தமிழ்மணி சங்கர்

துணை இயக்கம் – அந்தோணி பிச்சை, எஸ்.ராயப்பன்

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

முற்றிலும் வித்தியாசமான காதல் கலந்த குடும்பகதை தான் இந்த படம். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும், நம் பாரம்பரியம் என்ன என்பதை உணர்த்தும் கதை.

படம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் நமக்கு இது போல மனைவி கிடைக்காதா என்று மனதில் தோன்றும். அதே மாதிரி எல்லா பெண்களுக்கும் தங்களுக்கு இதுபோல் கணவன் அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஏங்குவார்கள் அப்படியான திரைக்கதை இது.

படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகிறது என்றார் இயக்குனர் K.E.எட்வர்ட் ஜார்ஜ்.

சின்னத்தம்பி படத்தயாரிப்பாளருடன் இணையும் விஷால்-கௌதம் மேனன்

சின்னத்தம்பி படத்தயாரிப்பாளருடன் இணையும் விஷால்-கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and gautham menonகௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள காக்க காக்க 2 படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.

இதனிடையில் விஷாலை வைத்து ஒரு படத்தை விரைவில் இயக்கவுள்ளாராம் கௌதம்.

இப்படத்தை கே.பி.பிலிம்ஸ் கே.பாலு தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முக்கியமான படமான சின்னதம்பி உட்பட பல படங்களை தயாரித்தவர் தான் இந்த கே.பாலு.

கடந்த சில வருடங்களாக படங்களை இவர் தயாரிக்கவில்லை. மாறாக படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பைனான்ஸ் மட்டும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows