ENPT படம் நவம்பர்ல வரும் சொல்றாரு டைரக்டர்..; நம்பலாமா?

ENPT படம் நவம்பர்ல வரும் சொல்றாரு டைரக்டர்..; நம்பலாமா?

ENPT Dhanushகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இவர்களுடன் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.

தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

இந்த படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் 4 வருடங்கள் தள்ளிப் போனது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பேசும்போது

எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும். நானும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

இதை நம்பலாமா? சரி.. நவம்பர் வரை காத்திருப்போம்.

சிவாஜி 9.. கமல் 10.. யோகிபாபு 11… ‘காவி ஆவி நடுவுல தேவி’

சிவாஜி 9.. கமல் 10.. யோகிபாபு 11… ‘காவி ஆவி நடுவுல தேவி’

yogi babuஒரே படத்தில் இரட்டை வேடங்கள், மூன்று வேடங்கள் என நம் அபிமான நடிகர்களை பார்த்திக்கிறோம்.

ஆனால் 5க்கும் மேற்பட்ட வேடங்களில் சிவாஜி மற்றும் கமல் இருவரும் மட்டுமே நடித்துள்ளனர்.

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்திருத்தார். தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்தார் கமல்.

தற்போது இவர்களை மிஞ்சும் வகையில் 11 வேடங்களில் நடிக்கவுள்ளாராம் யோகிபாபு.

புகழ்மணி இயக்கும், காவி ஆவி நடுவுல தேவி படத்தில், ராம்சுந்தர் – பிரியங்கா ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை கதையை வி.சி.குகநாதன் எழுதியுள்ளார்.

இதில் ”காதலர்களை சேர்த்து வைப்பதற்காக, யோகிபாபு, 11 விதமான, ‘கெட் அப்’களில் தோன்றுகிறாராம்.

கேரளாவிலும் அசத்த போகும் அசுரன்; கைகொடுக்கும் சூப்பர் ஸ்டார்

கேரளாவிலும் அசத்த போகும் அசுரன்; கைகொடுக்கும் சூப்பர் ஸ்டார்

asuran movie posterவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அசுரன்.

ஜிவி, பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தானு தயாரித்துள்ளார்.

இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. இதனிடையில் இதன் கேரள வெளியீட்டு உரிமையை கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மேக்ஸ்லேப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தனுஷின் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருப்பது ஒரு காரணம் என்றாலும் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் என்பதும் இங்கே கவனித்தக்கது.

கேரளாவில் அதிக தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.

தளபதி & மக்கள் செல்வன் இணையும் படம் பூஜையுடன் தொடங்கியது

தளபதி & மக்கள் செல்வன் இணையும் படம் பூஜையுடன் தொடங்கியது

Vijay and Vijay sethupathiலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தளபதி 64 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீசும் நடிக்க உள்ளார்.

நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய வேடத்தில் சாந்தனு நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. இதில் விஜய், விஜய் சேதுபதி, அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்டண்ட் சில்வா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகும் அனில் கபூர்.?

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகும் அனில் கபூர்.?

Bollywood Actor Anil Kapoor joins the cast of Indian 2லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

ரூ.200 கோடி செலவில் தயாராகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங்கை சென்னையில் முக்கிய பகுதிகளில் படமாக்கி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலுக்கு வயதான சேனாதிபதி (கமல்) வருவது போன்ற காட்சியை அண்மையில் படமாக்கினர்.

அதுபோல தன் வர்ம கலையால் வில்லன்களை தாக்கும் கமல் காட்சிகளை சென்னை வளசரவாக்கத்தில் படமாக்கினர்.

இந்த நிலையில் ஹிந்தி நடிகர் அனில்கபூர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனில் கபூர் ஏற்கனவே முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தில் நடித்துள்ளார்.

இந்தியன்-2 சூட்டிங் ஸ்பாட்டில் அனில்கபூர் இருக்கும் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

Bollywood Actor Anil Kapoor joins the cast of Indian 2

BREAKING தளபதி 64: பேராசிரியர் மாணவனாக இணையும் விஜய்-சாந்தனு

BREAKING தளபதி 64: பேராசிரியர் மாணவனாக இணையும் விஜய்-சாந்தனு

Shanthanu team up with Vijay in Thalapathy 64பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என்று பெயரிட்டுள்ளனர்.

அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் விஜய் உடன் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் மற்றொரு முக்கிய கேரக்டரில் சாந்தனு இணைந்துள்ளார்.

விஜய் பேராசிரியர் கேரக்டரிலும் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சாந்தனு கூறியதாவது… “கனவுகள் நிஜமாகும். விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்றும், படத்தில் வாய்ப்பளித்ததற்காக நன்றி என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், தளபதி 64 படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளதாகவும், நிச்சயம் பிளாக் பஸ்டர் படமாக அமையும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார் என்பதையும் அறிவித்துள்ளது படக்குழு.

Shanthanu team up with Vijay in Thalapathy 64

https://twitter.com/imKBRshanthnu/status/1179329197115879424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1179329197115879424&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Fcinema-shanthanu-joins-thalapathy-64-movie-msb-212253.html

More Articles
Follows