ஜோஷ்வா படத்திற்கும் தர்புகா சிவாவை இசையமைப்பாளராக்கிய கௌதம்

ஜோஷ்வா படத்திற்கும் தர்புகா சிவாவை இசையமைப்பாளராக்கிய கௌதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

darbuka siva in joshuaகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா பட பாடல்கள் 2 வருடத்திற்கு முன்பே ரிலீசாகிவிட்டது.

தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆனால் படம் நாளை மறுநாள் நவம்பர் 29ல் வெளியாகிறது.

இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுவதால் தன் அடுத்த படத்திற்கு இதே தர்புகா சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கௌதம் மேனன்.

பப்பி நாயகன் வருண் நடிக்கும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்திற்கும் தர்புகா சிவா தான் இசை.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

தளபதி 64 படத்தில் சம்பவம்.? மறுப்பு தெரிவித்த படக்குழு

தளபதி 64 படத்தில் சம்பவம்.? மறுப்பு தெரிவித்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy vijayகைதி படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார்.

இதில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா, வர்கீஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் சம்பவம் என்ற பாடல் ரெடியாகிவிட்டதாகவும் அந்த சிங்கிள் டிராக்கை விரைவில் வெளியிடயிருப்பதாக செய்திகள் சில தளத்தில் வெளியானது.

ஆனால் அது உண்மையில்லை என்று படக்குழு மறுத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரும்வரை ரசிகர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லன் நடிகர் பாலாசிங் காலமானார்; நடிகர் சங்கம் இரங்கல்

வில்லன் நடிகர் பாலாசிங் காலமானார்; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil actor Bala Singh passes awayமலையாள படங்களில் நடித்து பிரபலமான பாலா சிங் அவர்கள் நாசரின் ‘அவதாரம்’ பட மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.

அதன்பின்னர் ’புதுப்பேட்டை’, ‘இந்தியன்’, ’பிரிவோம் சந்திப்போம்’, ‘கிரீடம்’, ’உதயா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
வில்லன், குணச்சித்திரம் என்று அனைத்து வேடங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான என்ஜிகே, மகாமுனி படங்களில் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் பாலாசிங்குக்கு தற்போது 67 வயதாகிறது. இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் ஆகும்.

இவரின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Tamil actor Bala Singh passes away

கழிவுகளைப் பிரித்து இயற்கை உரம்; சென்னை மாநகராட்சிக்கு பார்த்திபன் நன்றி

கழிவுகளைப் பிரித்து இயற்கை உரம்; சென்னை மாநகராட்சிக்கு பார்த்திபன் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Parthibans Thanks letter to Chennai Corporation சென்னை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்து பார்த்திபன் கடிதம் எழுதியுள்ளார். அதில்…

அன்பான வணக்கங்கள்

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய பனோராமா பிரிவில் எனது படம் ‘ஒத்த செருப்பு – சைஸ் 7’ தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை தந்தது என்றாலும், அதையும் மீறிய ஒரு பெருமகிழ்ச்சிக்கு காரணம், இன்றைய செய்திதாள்களில் இடம் பெற்றிருந்த ஒரு முக்கிய செய்தி.

அது விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், மாநகராட்சி நடைமுறைபடுத்த உள்ள ஒரு திட்டத்தைப் பற்றி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்த ஒரு செய்தி. சென்னை மாநகரின் திடக்கழிவுகளில் இருந்து, கரிம உரங்களை பெரிய அளவில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம்தான் அது.

விவசாயம் குறித்த எனது நேரடி அனுபவங்களையும், உரவிலை உயர்வால் விவசாயிகள் அடைந்து வரும் துன்பத்தையும் கருத்தில் கொண்டு, கடந்த 2015ம் ஆண்டில், நான் ஒரு வரைவுத் திட்டத்துடன் மாநகராட்சி தலைமை அலுவலகத்தை அணுகி, அவர்களுடன் இதன் நன்மை தீமைகள், நடைமுறை சிக்கல்கள் ஆகியன குறித்து ஆழமாக விவாதித்து, விரைவில் பெரிய அளவில் ஒரு இயற்கை உர தொழிற்சாலை அமைத்திட முயற்சிகள் மேற்கொண்டேன்.

இதன் மூலம், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்கு உரங்களை இலவசமாக வழங்கிட முடியும், வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தின் மற்றொரு அளப்பரிய பலன் சென்னை நகரும் சுத்தம், சுகாதாரம் அடையும்.

மேலும் தற்போது சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிப்பு கிடங்குகளாகச் செயல்படும் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகியவற்றால் ஏற்படுகின்ற மாசுக்குறைபாட்டையும் தவிர்க்க முடியும் என்பதாலும், எனக்கு இத்திட்டம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. அந்த முயற்சிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று பலன் கிடைத்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜி. பிரகாஷ், ‘கிராமப்புற விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்களுடன் சென்னை மாநகராட்சி இணைந்து, சென்னை நகரத்தில் தினசரி உருவாகுகின்ற 5000 டன் கழிவுகளில் இருந்து, மக்கும் கழிவுகளைப் பிரித்து, அதிலிருந்து தரமான இயற்கை உரத்தைத் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் 30,000 ஏக்கர் நிலங்கள் வளம் பெறும் என்றும், மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த திட்டமாகவும் அமைகிறது.

இந்தியாவிலேயே இது முதன்முதலாக நிறைவேற்றப்படும் ஒரு முன்மாதிரி திட்டம் என்பதால் தமிழகத்திற்கே பெருமிதம்’ என்றார்.

இந்த திட்டம் மகத்தான வெற்றியடைய வேண்டும் என மனதார வாழ்த்தும் இந்த வேளையில், உரிய முயற்சிகளை மேற்கொண்டு இத்திட்டத்தை சீரிய முறையில் நடைமுறைப் படுத்த உதவியாக இருந்த, இருக்கின்ற, இருக்கப் போகின்ற அத்தனை உள்ளங்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜி. பிரகாஷ் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

Actor Parthibans Thanks letter to Chennai Corporation

அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கனும் – MLA விஜயதாரணி பேச்சு

அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கனும் – MLA விஜயதாரணி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MLA VijayathariniRPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் கருத்துக்களைப் பதிவுசெய். இப்படத்தின் சாராசம்சம் செல்போன்களால் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளைப் பற்றியது. மேலும் இளைஞர்களுக்கு பல நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ள படமாகவும் உருவாகி இருக்கிறது. அதனாலே இப்படக்குழுவை தொல்.திருமாவளவன் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
ராகுல் பரமகம்சா இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு
இணைத்தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி பேசியதாவது,

“இந்தப்படம் ஒரே நைட்டில் முடிவான படம். இந்தப்படம் இந்தளவிற்கு வந்ததற்கான காரணம் இயக்குநர் மற்றும் அவரது டீமும் தான். ஒருகாலத்தில் படம் எடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. பின் படம் எடுத்துவிடலாம் ஆனால் வெளியிட முடியாது என்றார்கள். இப்போது இசை வெளியீட்டு விழா நடத்த முடியாது என்றார்கள். இது அத்தனையும் சாத்தியமானது இப்படத்தில் தான். அதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி” என்றார்

இயக்குநர் ராகுல்பரமகம்சா பேசியதாவது,

“வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கருத்துக்களை பதிவுசெய் படம் தயாரிப்பாளர் சொன்னது போல ஓர் இரவில் முடிவு செய்தபடம். பட்ஜெட் என்பதை மனதில் வைத்து நாட்டுக்குத் தேவையான கருத்துள்ள படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படத்தின் இயக்குநர் மட்டும் தான் நான். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எல்லாம் ராஜசேகர் தான். இந்தப்படத்தில் ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. அதன்பிறகு அதைச் சரிசெய்தவர் மோகன் சார் தான். இந்தப்படத்தை சக்சஸ் புல்லா எடுக்க முடிந்ததிற்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது. இப்படத்தை சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். நாம் நிறைய படங்களை பார்க்கிறோம். அப்படங்களில் ஹீரோ என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் செய்கிறோம். அதேபோல் இப்படத்தில் நிறைய நல்ல விசயங்களை சொல்லியுள்ளோம். தயவுசெய்து அதையெல்லாம் பாலோ பண்ணுங்கள். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் இப்படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது,

“குறிப்பாக கைத்தட்டல் எல்லாம் கெஞ்சி வாங்குவது போல் ஆகிவிட்டது. ஒரே ராத்திரியில் டிசைட் ஆன படம் இது என்றார்கள். இங்கு கவர்மெண்டே ஒரே ராத்திரியில் டிசைட் ஆகிறது. இன்னைக்கு டிக்டாக்ல கொலை செய்றதை எல்லாம் போடுறாங்க. செல்போனை எந்தளவிற்கு யூஸ் பண்ணணும் என்று சொல்கிறார்கள். சினிமா என்பது பெரிய கேம். யார் என்ன கேமில் ஆடி ஜெயிக்கிறார்களோ ஜெயிக்கட்டும் அதை நாம் விமர்சனம் செய்யத்தேவையில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜின் ரசிகனாம். அதனால் தான் அவர் ஒல்லியாக இருக்கிறார் போல. பாக்கியராஜ் படங்கள் நம் வாழ்வின் விசயங்களை பதிவுசெய்தது. கருத்துக்களைப் பதிவு செய் படமும் அப்படியான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். பெரிய படங்கள் எல்லாம் இன்று எப்படியாவது தப்பித்து விடுகிறது. சின்னப்படங்கள் தான் மாட்டிக்கொள்கின்றன. ஒரு படத்தை தியேட்டரில் தான் வந்து பார்க்க வேண்டும் என்று ரசிகன் முடிவெடுக்க வேண்டும் என்றால் நம் படம் அப்படி இருக்க வேண்டும். செலவு செய்வது படத்தில் தெரியவேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த எட்டரை கோடி ரூபாய் இருந்தது. இப்போது 75 லட்சம் இருந்தது. இப்போது அதையும் சர்வீஸ் டாக்ஸ் என்று பிடித்து வைத்திருக்கிறார்கள். இப்போது தயாரிப்பாளர்களுக்கு இன்சூரன்ஸ் போட வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்களால் வளர்ந்த பெரிய நடிகர்கள் எல்லாம் அதற்கு சப்போர்ட் பண்ணணும். இல்லாவிட்டால் எட்டரை கோடி ரூபாயை இல்லாமல் செய்தவர்கள் வீட்டு முன் போராட்டம் செய்ய வேண்டிய இருக்கிறது. வாழ்வில் எந்தப் பாவமும் பார்க்காத இடங்கள் மூன்று உண்டு. ஒன்று சுடுகாடு, இன்னொன்று கால்யாண வீடு. மூன்றாவது சினிமா. சினிமா எடுப்பவர்கள் டெடிகேட்டா இருங்க. அப்படி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அடுத்த வருசம் சினிமாவில் பெரிய அதிசயம் நடக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன் பேசியதாவது,

“வெற்றியை மட்டும் அல்ல குறைகளையும் மீடியாவிடம் சொல்ல வேண்டும். இந்த சினிமாவை ரொம்ப பொத்தி பொத்தி வச்சி பலரும் இப்போது தரையைப் பார்ப்பதே இல்லை. கருத்துக்களைப் பதிவுசெய் படம் ஒரு அற்புதமான ஒரு விசயத்தை தொட்டிருக்கிறது. இன்று செல்லம் கொடுத்த வளர்த்த பெண்ணை ஒரு அப்பன் செல்போன் வாங்கி கெடுத்துள்ளான். சென்சார் போர்டு என்ற ஒன்றை வைத்து எங்களை சித்ரவதை செய்கிறார்கள். நாயை நாய் என்று சொல்லக்கூடாது என்கிறார்கள். அப்புறம் எப்படிடா சொல்ல வேண்டும். இன்று சென்சார் எங்களுக்கு இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்களே. டிவியில் சீரியல் எவ்வளவு கேவலமாக வருகிறது. அதையெல்லாம் ஏன் கேட்க மாட்டேன்கிறீர்கள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என் கருத்துக்களை நான் பதிவு செய்கிறேன். இந்தப்படம் செல்போனால் வரும் பிரச்சனைகளை பேசியுள்ளது. இன்று நம்முடைய கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை மது கெடுத்து வருகிறது. இந்த இயக்குநரை நான் தலை வணங்குகிறேன். என்னிடம் ஒரு சேனலில் இரண்டு பெரிய ஹீரோக்கள் பெயரைச் சொல்லி அந்த நடிகர்கள் கால்ஷீட் தந்தால் படம் தயாரிப்பீர்களா? என்று கேட்டார்கள். சத்தியமாக எடுக்க மாட்டேன் என்றேன். அதற்குப் பதில் இப்படியான இளைஞர்களை வைத்து நல்ல படங்களை எடுப்பேன். உதட்டோடு உதடு ஒட்டுவது போல் ஒரு காட்சி இப்பட ட்ரைலரில் வந்தது. ஆனால் டக்கென்று மறைத்து விட்டார். சந்தோஷம். இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் கூட ஹீரோயின் உதட்டை கிழித்துவிடுகிறார்கள். குருதிப்புனல் படம் ஹீரோயினின் உதட்டை இன்னும் காணவில்லை. இந்த இயக்குநரின் வெளிப்படையான பேசிய விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்தது. போஸ்டர் ஒட்டுபவர்களிடம் உள்ள கட்டுப்பாடு கூட தயாரிப்பாளர்களிடம் இல்லை. இப்படத்தின் நடிகர்கள் டெக்னிஷியன்ஸ் எல்லாம் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் நல்ல கருத்துக்களை பதிவுசெய்ய வருகிறது. அது மக்களின் இல்லங்களையும் உள்ளங்களையும் கவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ” என்றார்

இயக்குநர் பாக்கியராஜ் பேசியதாவது,

“என்னுடைய வெற்றிக்கு காரணம் என் கருத்துக்களை சினிமாவில் பயமில்லாமல் பதிவு செய்ததால் தான். என் இயக்குநரிடம் இந்தக்காட்சி நல்லால்லை என்று ஓப்பனாக சொல்லிடுவேன். அவர் கோபப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன். அதுபோல் இந்தப்படத்தில் குறிப்பாக இந்த விழாவில் பெண்களை கெளரவித்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்.எல். ஏ விஜயதரணி வந்திருக்கிறார். அவர் எதாவது கோரிக்கை இருந்தால் சொல்லுங்கள் என்றார். ஒரே கோரிக்கை தான். எல்லாத்தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே சின்னப்படங்களும் ஓட வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் படம் நல்லாருந்தால் நிச்சயமாக பாராட்டிவிடுவார்கள். இந்தப்பட டீம் சின்சியராக உழைத்திருக்கிறார்கள். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்காக தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு தேவை. இப்போது சினிமாவிற்கே விழிப்புணர்வு தேவைப் படுகிறது.” என்றார்

சட்டமன்ற உறுப்பினர் திருமதி.விஜயதரணி அவர்கள் பேசுகையில்

சமூக சிந்தனை கொண்ட படத்தை எடுத்ததற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன். இப்போது சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பதை எல்லோரும் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனால் தமிழ்நாடு அரசால் முன்பு தொடங்கி கைவிடபட்ட அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி திரையுலகம் பயன்படும் வகையில் அதை அமைக்க கோரி சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்ப போகிறேன். மலேசியா மற்றும் கேரளாவில் உள்ளது போல் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கட்டாயம் 15நாள் தியேட்டர்கள் தரப்படவேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்றத்தில் அமைச்சய் கடம்பூர்.ராஜீ அவர்களிடம் கேட்க போவதாக அறிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் ” கருத்துக்களை பதிவு செய் “

சமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் ” கருத்துக்களை பதிவு செய் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress upasanaRPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ” கருத்துக்களை பதிவு செய் ”
இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக உபாசனா நடித்துள்ளார். மற்றும் சௌடா மணி, E.V.கணேஷ்பாபு, சிந்துஜாவிஜி, நேத்ரா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் ராகுல்பரமகம்சா கூறியதாவது..
முகநூலால் ஒரு அப்பாவி கிராமத்து பெண் பாதிக்கப்பட்டு அவள் எப்படி அதிலிருந்து மீண்டு வந்து தன் வாழ்வை கேள்விக்குறியாக்கி அந்ந கயவர்களை தண்டிக்கிறார்கள் என்பதே இந்த கருத்துகளை பதிவு செய் படம். இந்த காலத்து பெண்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு தரும் பாடமாக இந்த படம் இருக்கும்.

சமீபத்தில் பொள்ளாச்சியில் இது போல் ஒரு சம்பவம் நடந்தது. அது நடப்பதற்கு முன்பே இப்படம் எடுக்கப்பட்டு விட்டது. இதில் வரும் காட்சிகள் அந்த சம்பவங்ளோடு ஒத்து போவதால் எனக்கு பல மிரட்டல்களும் வந்தன ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றய சமூக இளைஞர்கள், பெண்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் அதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி சம்பவம் ஒன்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போல் இன்னும் நிறைய நடந்து கொண்டுதான் இருக்கிறது. மூகநூல் பயன்படுத்தும் அனைத்து பெண்களுக்கும் இந்த படம் ஒரு விழிப்புணர்வைத்தரும் என்ற நம்பிக்கையில்தான் எடுத்துள்ளேன் என்கிறார் இயக்குனர் ராகுல்பரமகம்சா.
சென்ஸார் அதிகாரிகள் படத்தை பார்த்து பாராட்டினர். அதுமட்டுமல்லாது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். அது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவாளர்: மனோகரன்
இசை: கணேஷ் ராகவேந்திரா,
பின்னணி இசை: பரணி,
பாடல்கள் – சொற்கோ
எடிட்டர்: கணேஷ்.D
ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
கலை – மனோகர்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – வெங்கடேஷன்
நிர்வாக தயாரிப்பு – வி.கே.மதன்
தயாரிப்பு – RPM சினிமாஸ்
இணை தயாரிப்பு – JSK.கோபி
இயக்கம் – ராகுல் பரமகம்சா
கதை, திரைக்கதை, வசனம் – ராஜசேகர்
ஸ்ரீ சிவ சாய் ஆர்ட்ஸ் கே.மோகன் தமிழகமெங்கும் படத்தை வெளியிடுகிறார்.

More Articles
Follows