காலாவால் 2.0 படத்திற்கு ஆபத்து.? தனுஷ்-ரஞ்சித்திடம் ஷங்கர் கோரிக்கை

rajini kaala ranjith30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு வருடத்திற்கு அரை டஜன் படங்களில் வரை ரஜினி நடித்துக் கொண்டிருப்பார்.

அந்த எண்ணிக்கையை படிப்படியாக குறைத்துக் கொண்டு வருடத்திற்கு ஒன்று. இரண்டு வருடத்திற்கு ஒன்று என நடித்தார்.

ஆனால் 2.0 படத்தில் நடிக்கும் போதே கபாலி படத்திலும், அதன்பின்னர் காலா படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

2.0 படத்தை அடுத்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியில் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் தற்போது காலா படத்தின் செய்திகள் மற்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனால் 2.0 படத்தின் புரமோசன் பாதிக்கப்படும் என கருதிய 2.ஓ பட இயக்குநர் ஷங்கர், காலா படத்தின் விளம்பரங்களை குறைத்துக் கொள்ள கூறினாராம்.

இது தொடர்பாக காலா பட தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் இயக்குனர் ரஞ்சித்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Director Shankar request Kaala team to stop their Promotions

Overall Rating : Not available

Related News

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து…
...Read More
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில்…
...Read More
ஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…
...Read More
லைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட…
...Read More

Latest Post