தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா இசையில் விக்ரம் நடித்த ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் பாலா.
நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன்… என வித்தியாசமான படைப்புகளை தந்து சிறந்த நடிகர்களை அடையாளம் காட்டினார்.
ஆனால் அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் படங்கள் தோல்வியை சந்திக்கவே பாலா துவண்டு போனார்.
அதுவரை ரீமேக் படங்களை இயக்காதவர் விக்ரமுக்காக தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தை துருவ் நடிப்பில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
ஆனால் இந்த படம் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை என்பதால் படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தும் ரிலீஸ் செய்யவில்லை.
அதன் பிறகு பாலா எந்த படத்தையும் இயக்கவில்லை.
தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக படம் இயக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் பாலா.
இதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை முடிந்துவிட்டதாகவும். விரைவில் அறிவிப்பு வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது.
Director Bala’s next film for OTT ?