தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் நடிப்புகென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.
சினிமாவில் இவரின் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.
மலையாளம் & தமிழ் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்தார்.
மேலும் பல பிரபல நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.
பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படத்தில் தனது முழு திறமையும் காட்டி மக்கள் மனங்களை வென்றார்.
இந்த படத்திற்கு பின் பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார் விக்ரம்.
தில் தூள் சாமி ஜெமினி காசி என ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வேடத்தில் அசத்தியிருந்தார் விக்ரம்.
அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர் விக்ரம் என்று சொன்னால் அது மிகையல்ல.
தற்போது இவரது மகன் துருவ் சினிமாவில் நடித்து வருகிறார்.
அண்மையில் ஓடிடியில் வெளியான மகான் படத்தில் தந்தை மகன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.
தற்போது மணிரத்ன இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ளார் விக்ரம். மேலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான கோபுரா திரைப்படமும் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.
இந்த நிலையில் ஜூலை 9ம் தேதி இவருக்கு நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட அசவுகர்யத்தால் 2 நாட்களாக ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் விக்ரம்.
தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலையறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீடு திரும்பியவுடன் விக்ரம் பேசுவதாக ஒரு வீடியோ வெளியானது. இதை சில நபர்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஆனால் இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது அல்ல.. 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை இப்படி எடிட்டிங் செய்து பரப்பி வருகின்றனர்.
செய்திகளை தொடர்ந்து அறிந்துக் கொள்ள எங்களுடன் இணைப்பில் இருங்கள்..
Vikram returned home.; But that video of Chiyaan talking is very old.