பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ்; உருவாகுகிறார் ஜூனியர் சீயான்

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ்; உருவாகுகிறார் ஜூனியர் சீயான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bala and vikramதெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’.

இதன் ரீமேக் உரிமைக்கு தென்னிந்திய அளவில் பலத்த போட்டி உருவானது. தமிழ், மலையாளம் மொழி உரிமையை கேரள நிறுவனமான இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனம் பெற்றது.

இதில் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார்.

இதன் இயக்குநர் யார் என்பது இதுவரை சஸ்பென்ஸாக இருந்தது.

தற்போது அந்த சஸ்பென்ஸை உடைத்திருக்கிறார் விக்ரம்.

தனக்கு முதல் படமான சேது படத்தில் திருப்புமுனையை கொடுத்த இயக்குநர் பாலாவிடம் தன் மகனை ஒப்படைத்துள்ளார் விக்ரம்.

இதில் சேது படத்தில் ஏற்ற சீயான் கேரக்டரே இன்று விக்ரமின் அடைமொழியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலா இயக்கிய பிதாமகன் படம் மூலம் விக்ரம் தேசிய விருதை வென்றார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Bala to direct Vikram son Dhruv in Arjun Reddy Tamil remake

மோடியிடம் ரஜினி-கமல் பேசினால் சினிமா காப்பாற்றப்படும்… பிரபல இயக்குனர்

மோடியிடம் ரஜினி-கமல் பேசினால் சினிமா காப்பாற்றப்படும்… பிரபல இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

alphonse puthrenஇந்திய தலைநகர் புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டன.

அப்போது சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இப்பிரச்சினை குறித்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துக்கு என் சந்தேகங்கள்

1 . ஏன் ஜிஎஸ்டியில், சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருக்கின்றன?

2 . எப்படி சினிமாவும் சூதாட்டமும் ஒன்றாகும்?

3 . தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா? சீட்டாட்டம் ஆடினால் சினிமா எடுத்துவிட முடியுமா?

4 . தாயம் உருட்டும் நேரத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இரண்டுக்கும் ஒரே நேரம் முயற்சி போதுமா?

தமிழ் சினிமா துறையில் நீங்கள்தான் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகள். பிரதமர் நரேந்திர மோடியிடம், பட்ஜெட்டில் இருக்கும் இந்த தவறை குறித்து பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் செய்யும் பேச்சுவார்த்தை மொத்த திரைத்துறையை காப்பாற்றும்.

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் விக்ரம் மகன் ஜோடியாக கமல் மகள்..?

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் விக்ரம் மகன் ஜோடியாக கமல் மகள்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and dhruvதெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி.

இதன் தமிழ், மலையாள மற்றும் கன்னட டப்பிங் மற்றும் ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தின் இயக்குனர் யார்? நாயகி யார்? என்ற விவரங்கள் இதுவரை தெரியாமல் இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் நாயகியாக கமல் மகள் அக்ஷராஹாசன் நடிக்க வாய்ப்பிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அவர் இல்லையெனில் ஷ்ரியா ஷர்மாவும் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

இவர் சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு மகளாக நடித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

விக்ரம்-சிவகார்த்திகேயன் இணைந்து தரும் கிறிஸ்துமஸ் ட்ரீட்

விக்ரம்-சிவகார்த்திகேயன் இணைந்து தரும் கிறிஸ்துமஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and sivakarthikeyanவிக்ரம், தமன்னா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச்.

இதன் டீசரை வருகிற அக். 18ல் தீபாவளி விருந்தாக வெளியிடுகின்றனர்.

இது மெர்சல் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் காண்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை நவம்பரில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.

எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை 25ஆம் தேதி வருகிறது. எனவே அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான 22ஆம் தேதி வெளியிட வாய்ப்புகள் உள்ளதாம்.

இதே நாளில்தான் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

மெர்சல் அப்டேட்ஸ்; நெல்லை ரசிகர்கள் மட்டும் செம லக்கி

மெர்சல் அப்டேட்ஸ்; நெல்லை ரசிகர்கள் மட்டும் செம லக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal posterபல பிரச்சினைகளை தாண்டி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸ் ஆகவுள்ளது.

எனவே அதன் புரமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் சினிமாஸ் நிறுவனம் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரவிருக்கிறது.

முதல்நாள் முதல் காட்சியன்று ஆளப்போறான் தமிழன் மற்றும் மெர்சல் அரசன் ஆகிய இரு பாடல்களை மட்டும் இரண்டு முறை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்களாம்.

இப்போ சொல்லுங்க அந்த ரசிகர்கள் லக்கிதானே…

Double treat for Nellai district Vijay fans on Diwali

விஜய் ரசிகர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி தரும் ஜிவி. பிரகாஷ்

விஜய் ரசிகர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி தரும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashs Mersal treat for Vijay fansவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் தென்னிந்திய அளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் நேரிடை தமிழ் படமாகவே வெளியாகிறது.

தெலுங்கில் அதிரிந்தி என்று பெயர் மாற்றம் செய்து, டப் செய்து வெளியிடுகின்றனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள வில்லு வில்லு என்ற பாடலை தெலுங்கில் தன் சொந்த குரலில் ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார்.

இப்பாடலை இன்று அக். 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட போவதாக தெரிவித்து அந்த புரோமோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

GV Prakashs Mersal treat for Vijay fans

https://www.youtube.com/watch?time_continue=1&v=iAsEdlqZXtc

More Articles
Follows