விக்ரமுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த விஜய் நண்பர் ஸ்ரீமன்

விக்ரமுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த விஜய் நண்பர் ஸ்ரீமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sketchவிஜய்யின் நண்பராக பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீமன்.

இவர் தற்போது 18 வருடங்களுக்கு பிறகு விக்ரமுடன் இணைந்து ஸ்கெட்ச் படத்தில் நடித்து வருகிறார்.

இதுபற்றிய தன் அனுபவத்தை இங்கே பகிர்கிறார்.

சேது’ படத்துக்கு முன்பே நானும், விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு நான் நடனத்தையும், எனக்கு அவர் நடிப்பையும் கற்றுக் கொடுத்தார்.

இதை நாங்கள் கலா மாஸ்டர் பள்ளியில் இருக்கும் போது பழகுவோம்.

‘சேது’வுக்கு முன்பாகவே எங்களுக்கு இருவருக்குமே ஒரு பெரிய வாய்ப்பு ‘புதிய மன்னர்கள்’ படம் மூலமாக அமைந்தது. எனக்கு அது தான் முதல் படம். கிட்டதட்ட அண்ணன் – தம்பி போலத் தான் பழகுவோம்.

நிறைய விஷயங்கள் பேசிக் கொள்வோம்.

நாம் இருவரும் இணைந்து நடிப்பதற்கு சரியான கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று சொல்வார். எங்கள் இருவருக்குமே ‘சேது’ ஒரு முக்கியமான படமாக அமைந்தது.

அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய படம் ‘தில்’. அதில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

மீண்டும் விக்ரமுடன் நடிக்க நல்ல வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். அது விஜய் சந்தர் சாருடைய ‘ஸ்கெட்ச்’ படம் மூலமாக அமைந்துள்ளது.

எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதற்காக கொஞ்சம் உடல் எடையை அதிகரித்துள்ளேன். இத்தனை வருடங்கள் கடந்தாலும் விக்ரமிடம் எந்ததொரு மாற்றமுமில்லை.

‘சேது’வுக்கு முன்னால் கென்னி என்ற பெயரில் தான் அழைப்போம். அப்போது எப்படியிருந்தாரோ அப்படித் தான் இப்போது இருக்கிறார். அவருடைய பெயருக்கு பின்னால் தேசிய விருதுகள் இணைந்திருப்பதை எல்லாம் பேச்சில் காட்டிக் கொள்ளவே இல்லை.

’சேது’ படப்பிடிப்பு நடத்திய வீட்டில் தான் ‘ஸ்கெட்ச்’ படமும் படமாக்கி வருகிறார்கள். ஆகையால் இருவருமே இங்கு தானே படப்பிடிப்பு செய்தோம் என்று பழைய நினைவுகளில் நிறைய மூழ்கினோம்.

எங்கள் இருவரையுமே நல்ல நடிப்பார்கள், கண்டிப்பாக கதாபாத்திரங்கள் கொடுக்கலாம் என்று மற்ற இயக்குநர்களுக்கு நம்பிக்கை அளித்த படம் ‘சேது’. முதலில் அந்த வீட்டுக்குச் சென்றவுடன் எங்கள் இருவரிடமும் மெளனம் தான் இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

படப்பிடிப்பில் நான் இந்தக் காட்சியை இப்படி மாற்றி பண்ணட்டுமா என்று கேட்டு நடிப்பேன். அப்போது அது எனக்கு பெயர் வரக்கூடிய காட்சியாக இருந்தாலும், விக்ரமும் இப்படி செய்யுங்கள் இன்னும் நன்றாக இருக்கும் என்பார். நடிகர்களை ஊக்குவிப்பது என்பது அவரிடம் இருக்கும் மிக முக்கியமான குணமாகப் பார்க்கிறேன்.

நல்ல மெச்சூர் ஆயிட்டா.. நிறைய கதாபாத்திரங்களில் நடிக்கிற என்று ரொம்ப பாராட்டினார். இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் விஜய் சந்தர் சாருக்குத் தான் நன்றி சொல்லணும். என்றார் ஸ்ரீமன்.

Vijay friend Actor Sriman taught dance movements to Vikram

sriman with vijay

விஜய்-ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தில் 3 ஹீரோயின்கள்

விஜய்-ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தில் 3 ஹீரோயின்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay 62 Project may have 3 heroinesஅட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யாமேனன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தை அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்க, லைக்கா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்த படத்திலும் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஏற்கெனவே ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இவருடன் டாப்சி மற்றும் எமிஜாக்சன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay AR Murugadoss Project may have 3 heroines

ஏஆர். ரஹ்மான் இசையமைத்த ‘சச்சின்’ படத்தின் ட்ரைலர் தகவல்

ஏஆர். ரஹ்மான் இசையமைத்த ‘சச்சின்’ படத்தின் ட்ரைலர் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sachin a billion dreams trailerதி காட் ஆப் கிரிக்கெட் என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.

இவரின் வாழ்க்கை வரலாறு ஆனது, ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளர்.

‘200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில், இதன் டிரைலர் நாளை ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 7 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர் பாண்டிக்காக தன் நிகழ்ச்சியை பறிகொடுத்த டிடி

பவர் பாண்டிக்காக தன் நிகழ்ச்சியை பறிகொடுத்த டிடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

power paandi teamவிஜய் டிவியில் பெரும்பாலான சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளை டிடி என்கிற திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பவர் பாண்டி நிகழ்ச்சியை இவருக்கு பதிலாக ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார்.

டிடி யே இப்படத்தில் நடித்துள்ளதால் அவருக்கு பதிலாக மற்றொருவர் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

அந்த நிகழ்ச்சியின் போது அவர்கள் எடுத்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘தெறி’க்க விட இது பத்தாது… அடம் பிடிக்கும் விஜய் ரசிகர்கள்

‘தெறி’க்க விட இது பத்தாது… அடம் பிடிக்கும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theri movie 365 days celebrations by Vijay fansகடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி ரிலீஸ் ஆனது.

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவால் இப்படம் மாபெரும் ஹிட்டடித்த்து.

இந்நிலையில் இதன் ஓராண்டை கொண்டாடும் வகையில், தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள் விஜய் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுக்கள் ஒருசில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தது.

எனவே இன்னும் கூடுதலாக காட்சிகளை திரையிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு திரையரங்குகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.

Theri movie 365 days celebrations by Vijay fans

பாரதிராஜாவுக்காக கை கோர்க்கும் ரஜினி-கமல்..?

பாரதிராஜாவுக்காக கை கோர்க்கும் ரஜினி-கமல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal Bharathirajaஇயக்குனர் சிகரம் பாலசந்தர் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகிய இருவரின் பேரன்பை பெற்றவர்கள் ரஜினி மற்றும் கமல்.

இந்த இயக்குனர்கள் இயக்கும் படம் என்றால் இணைந்து நடிக்க, ஆர்வத்துடன் இருப்பார்கள்.

இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பு தேடும் புதியவர்களுக்காக திரைப்பட கல்லூரி ஒன்றை தொடங்கவிருக்கிறார் பாரதிராஜா.

இதற்கு ‘பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா’ என்ற பெயரிட்டுள்ளார்.

இதில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து துறை சம்பந்தான பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளதாம்.

இந்த கல்லூரியின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினி-கமல் ஆகிய இருவரையும் பாராதிராஜா அழைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Rajini and Kamal may participate in Bharathiraja Film Institute opening ceremony

More Articles
Follows