விஜய் சொன்னப்படியே விக்ரமுக்கு நடந்தது; கொண்டாடும் ரசிகர்கள்!

விஜய் சொன்னப்படியே விக்ரமுக்கு நடந்தது; கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram vijayதனது முதல் படமான ‘சேது’வில் தேசிய விருதை பெற்றவர் இயக்குனர் பாலா.

இதில் நடித்த விக்ரமுக்கு கிடைக்கவில்லை.

எனவே அடுத்து விக்ரம், சூர்யாவை வைத்து இயக்கிய பிதாமகனில் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் ஆனதால் விக்ரமுடைய ரசிகர்கள் #13YearsOfPITHAMAGAN என்ற ஹேஷ்டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

இப்படத்தை அப்போது பார்த்த நடிகர் விஜய், நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று முதலில் விக்ரமிடம் சொன்னாராம்.

அவர் சொன்னப்படியே நடந்ததால், இருவரது ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

‘சிவகார்த்திகேயனை பார்த்து கண் சிமிட்டும் தேவதை..’ – விவேக்

‘சிவகார்த்திகேயனை பார்த்து கண் சிமிட்டும் தேவதை..’ – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் தமிழகம் தாண்டியும் வசூலை வாரி குவித்து வருகிறது.

கேரளாவிலும் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வெற்றிக் குறித்து நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

திறமை, உழைப்பு, சரியான வழிகாட்டிகள் மற்றும் அதிர்ஷ்ட தேவதையின் கண்சிமிட்டல்! இவைகளின் காம்போ சிவகார்த்திகேயன்! என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரெமோவின் அக்கா நான்தான் சுமோ என்று விவேக் பதிவிட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஜய்சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகையின் கணவர்

விஜய்சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகையின் கணவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nazriya_nazim_fahadh_faasil_marriageஜாக்கி ஷெரஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’.

இப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சிறந்த புதுமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார்.

மேலும் சிறந்த எடிட்டிங்கான விருதை இப்படம் வென்றது.

இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தனது அடுத்த படத்தை தானே தயாரித்து இயக்க தயாராகிவிட்டாராம்.

இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க, பிரபல மலையாள நடிகரும் நஸ்ரியாவின் கணவருமான ஃபஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மோகன்ராஜா இயக்கும் சிவகார்த்திகேயனின் படத்தின் மூலம் பஹத்பாசில் தமிழில் அறிமுகமாகிறார்.

இதனை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவின் சக்தியை உலகுக்கு காட்ட போகும் ’2.O’ டீம்!

இந்திய சினிமாவின் சக்தியை உலகுக்கு காட்ட போகும் ’2.O’ டீம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2pointO teamலைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் ‘2.0’.

ஷங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினியுடன் அக்‌ஷய் குமார், எமிஜாக்சன், ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்த நவம்பர் மாதம் 20-ந்தேதி வெளியிட உள்ளனர்.

இத்துடன் இப்படத்தின் டீசரும் வெளியாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து லைக்கா நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில்…

‘‘இந்திய சினிமா எப்படி பட்டது என்பதை உலகுக்கு காட்டும் நேரம் நெருங்கி விட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியும், கில்லாடியும் இந்திய சினிமா என்ன என்று உலகுக்கு தெரிவிப்பார்கள். அதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது’ என்று கூறியுள்ளார்.

வடிவேலுக்கு ’நெருப்புடா’ சாங்… அடுத்த ‘கபாலி’கான்..?

வடிவேலுக்கு ’நெருப்புடா’ சாங்… அடுத்த ‘கபாலி’கான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vadiveluவடிவேலுவின் காமெடியைப் போலவே படத்தில் அவர் ஏற்கும் கேரக்டர்களின் பெயர்களும் காமெடியாக இருக்கும்.

கைப்புள்ள, ஸ்னேக் பாபு, கபாலி கான், தீப்பொறி திருமுகம் ஆகிய பெயர்கள் பிரபலமானது.

தற்போது இந்த கபாலிகானுக்கு பலமாக நெருப்புடா பாடல் இன்ட்ரோ சாங்க் ஆக அமைந்துள்ளது.

ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் உலகளவில் பிரபலமானது.

தற்போது விஷாலின் ‘கத்தி சண்டை’ படத்தில் வடிவேலு சிறையிலிருந்து விடுதலை ஆகும்போது இப்பாடல் இடம் பெறுகிறதாம்.

வேதாளத்தை ‘தெறி’க்க விட்ட ரெமோ

வேதாளத்தை ‘தெறி’க்க விட்ட ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ (அக். 7ல் ரிலீஸ்) வெளியாகி மூன்று வாரங்களை கடந்துள்ளது.

அடுத்த வாரம் தீபாவளி வரும் வரை இப்படத்திற்கு அமோக வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது வரை சென்னையில் மட்டும் ரூ. 6.45 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்குமுன் வெளியான மற்ற படங்கள் சென்னை வசூல் விவரம்…. (காட்சிகளின் விவரம்)

1. கபாலி – ரூ. 10,45,29,825 (காட்சிகள் – 209)
2. ஐ – 8,70,47,097 (காட்சிகள் – 201)
3.தெறி – 8,56,97,198 (காட்சிகள் – 269)
4. கத்தி – 6,69,89,724 (காட்சிகள் – 159)
5. ரெமோ – 6,45,69,289 (காட்சிகள் – 231)
6. வேதாளம் – 6,31,64,379 (காட்சிகள் – 181)
7. இருமுகன் – 5,61,56,219 (காட்சிகள் – 117)

More Articles
Follows