திருநங்கைகளை சேர்க்க வேண்டும்.; மிஷ்கின் வைத்த கோரிக்கையை ஏற்ற பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி

திருநங்கைகளை சேர்க்க வேண்டும்.; மிஷ்கின் வைத்த கோரிக்கையை ஏற்ற பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின், ராம், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்த சவரக்கத்தி என்ற படத்தை இயக்கியவர் ஆதித்யா. இவரது இரண்டாவது படமாக உருவாகியுள்ளது ‘டெவில்’.

இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் டைரக்டர் மிஷ்கின். இதன் மூலம் இவர் இசை அதைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஆதித்யா என்பவர் மிஷ்கினின் தம்பி என்றாலும் தன் அண்ணனிடம் முறையாக இயக்குனர் பயிற்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெவில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்தியம் திரையரங்கில் நேற்று நவம்பர் 3ம் தேதி மாலை நடைபெற்றது.

இதில் மிஷ்கினை வாழ்த்த பல திரை பிரபலங்கள் வந்திருந்தனர். தன் இசை குருவின் காலில் முத்தமிட்டு ஆசி பெற்றார் மிஷ்கின்.

மேலும் வெற்றி மாறன், பாலா, வின்சென்ட் செல்வா, கதிர், ஆர் கே செல்வமணி தயாரிப்பாளர் டி சிவா, முரளி உள்ளிட்ட பலரும் மிஷ்கினை வாழ்த்தி பேசினர்.

மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். அது பற்றி அவர் பேசும்போது.

“இந்த படத்திற்காக நிறைய திருநங்கைகளை தேடி அவர்களை நடிக்க வைத்தோம். அவர்களை பெப்சி அமைப்பில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் மிஸ்கின்.

அதற்கு உடனடியாக பதில் அளித்த ஆர் கே செல்வமணி.. “நடிப்புத் துறை மட்டுமல்லாமல் திருநங்கைகள் பெப்சியில் உறுப்பினராகலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.. அவர்கள் இயக்கம் மற்றும் எந்தத் துறையில் வேண்டுமானாலும் பயணிக்கலாம்” என தெரிவித்தார் ஆர் கே செல்வமணி.

Transgender can be member in FEFSI says RK Selvamani

மாணவர்களை தாக்கிய ரஜினி – விஷால் பட நடிகையும் பாலாவின் மகளுமான ரஞ்சனா கைது

மாணவர்களை தாக்கிய ரஜினி – விஷால் பட நடிகையும் பாலாவின் மகளுமான ரஞ்சனா கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் நேற்று பள்ளி மாணவர்கள் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு சென்றனர். இந்த பேருந்து பின்னால் காரில் சென்ற நடிகை ரஞ்சனா இதனை படம் பிடித்து உள்ளார்.

ஒரு கட்டத்தில் அவர் பேருந்தை நிறுத்த சொல்லி டிரைவரையும் கண்டக்டரையும் திட்டியுள்ளார். மாணவர்கள் இப்படி தொங்கிக் கொண்டே சென்றால் அவர்கள் மரணம் அடைந்தால் யார் பொறுப்பு? என்று திட்டினார்.

மாணவர்கள் சொல் பேச்சை கேட்பதில்லை என கண்டக்டர் சொல்ல தன்னை போலீஸ் என்று சொல்லிக் கொண்டு மாணவர்களை தாக்கியுள்ளார் நடிகை ரஞ்சனா.

மேலும் கண்டக்டரை நாய் நாய் என்று திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போதும் தன்னுடைய காரில் தான் வருவேன் போலீஸ் வாகனத்தில் ஏற மாட்டேன் என நடிகை ரஞ்சனா வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் ஒரு வழியாக போலீஸ் ஜீப்பில் ஏறி சென்றார் நடிகை ரஞ்சனா.

ரஞ்சனா குறித்த விவரங்கள் இதோ..

போலீஸ் என்று கூறிக்கொண்டு சென்னையில் அரசுப் பேருந்தை நிறுத்தி, பொது இடத்தில் பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக பாஜகவை சேர்ந்த திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இவர் தனது மகள் மீது மாமனார், மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்தாண்டு மாங்காடு காவல் நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு கொடுத்திருந்தார்.

இப்போது அவரே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்…
சட்டம் எதற்கு? போலீஸ் எதற்கு?
நீதிமன்றம் எதற்கு? நிர்வாகம் எதற்கு? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் நடிகை ரஞ்சனா நாச்சியார்.

இவர் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

டைரி படத்தில் இவர் பேசிய, “போலீஸ்னா அடிப்பீங்களா” என்ற வசனமும் பிரபலமானது.

*நடிகை ரஞ்சனா செய்தது சரியா தவறா கமெண்டில் பதிவு செய்யுங்கள்.?*

Attack on Students Actress Ranjana arrested

மீண்டும் பழங்குடி பெண்ணாக மாறி விக்ரமுடன் போட்டி போட்ட மாளவிகா

மீண்டும் பழங்குடி பெண்ணாக மாறி விக்ரமுடன் போட்டி போட்ட மாளவிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.

சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள “தங்கலான்” திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான “பியாண்ட் தி க்ளவுட்ஸ்”, படத்திலேயே மிக கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்றாகும்.

தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா ரஞ்சித்துடன் இணைந்து பணிபுரிவது, சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். பா ரஞ்சித் உடனான கூட்டணியில், அவரை வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்குச் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். “தங்கலான்” படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அவரது பன்முக திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

திரைப்படத் துறையில் பல்வேறு பாத்திரங்களில் அசத்தி வரும், மாளவிகா மோகனனின் திறமை அவரது ரசிகர்கள் பாராட்டக்கூடிய ஒன்றாகவுள்ளது, மேலும் இது அவரது வரவிருக்கும் திரைப்படங்களுக்குப் பார்வையாளர்களை ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது.

மாளவிகா மோகனன்

Malavika character in Thangalaan movie

தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜப்பான்’ பட சென்சார் அப்டேட் இதோ…

தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜப்பான்’ பட சென்சார் அப்டேட் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.

இப்படத்தில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடித்துள்ளார்.

ஜப்பான்

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

ஜப்பான்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஜப்பான்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜப்பான்

இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

மேலும், ‘ஜப்பான்’ திரைப்படம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான்

japan movie gets U/A certificate by Censor Board

ஜெய்பீம் : முதல்வருக்கு சூர்யா நன்றி.; ‘துணை சேரும் கோடி கரம்’ என ‘தலைவர் 170’ பட இயக்குனர் பகிர்வு

ஜெய்பீம் : முதல்வருக்கு சூர்யா நன்றி.; ‘துணை சேரும் கோடி கரம்’ என ‘தலைவர் 170’ பட இயக்குனர் பகிர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு.. “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம்.

ஜெய்பீம்

நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். #JaiBhim

ஜெய்பீம்

இப்பதிவை பகிர்ந்துள்ள படத்தின் இயக்குநர் ஞானவேல், “உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்..அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி கரம்.” என தெரிவித்துள்ளார்.

ஞானவேல் தற்போது ரஜினிகாந்த் & அமிதாப்பச்சன் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

gnanavel

Jaibhim completed 2 years Suriya Thanks note to CM Stalin

புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி.; நேரில் சென்ற விஜய்

புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி.; நேரில் சென்ற விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனவே விஜய்க்கு அரசியலின் நுழையும் எண்ணம் ஏற்பட்டது.

அதன்படி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்களும் பல இடங்களில் வெற்றி பெற்றனர்.

விஜய்யின் அரசியலை எண்ணத்திற்கு பக்க பலமாக பாலமாக இருந்து வருபவர் புஸ்ஸி ஆனந்த்.

இந்த நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை எடுத்து இன்று நவம்பர் 3ம் தேதி நள்ளிரவில் விஜய் மருத்துவமனைக்கு சென்று ஆனந்த்தை பார்த்து நலம் விசாரித்தார்.

தற்போது புஸ்ஸி ஆனந்த் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஸ்ஸி ஆனந்த்

Bussy Anand hospitalized Vijay met him at hospital.

More Articles
Follows