OFFICIAL விக்ரம் இப்போ எப்படி இருக்கிறார்.? விக்ரம் தரப்பு & மருத்துவமனை அறிக்கை

OFFICIAL விக்ரம் இப்போ எப்படி இருக்கிறார்.? விக்ரம் தரப்பு & மருத்துவமனை அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிப்புகென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.

சினிமாவில் இவரின் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்தார.

மலையாளம் & தமிழ் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்தார்.

மேலும் பல பிரபல நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படத்தில் தனது முழு திறமையும் காட்டி மக்கள் மனங்களை வென்றார்.

இந்த படத்திற்கு பின் பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார் விக்ரம்.

தில், தூள், சாமி, ஜெமினி, காசி என ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வேடத்தில் அசத்தியிருந்தார் விக்ரம்.

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர் விக்ரம் என்று சொன்னால் அது மிகையல்ல.

தற்போது இவரது மகன் துருவ் சினிமாவில் நடித்து வருகிறார்.

அண்மையில் ஓடிடியில் வெளியான மகான் படத்தில் தந்தை மகன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘கோப்ரா’ படம் ஆகஸ்டில் ரிலீசாகவுள்ளது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ளார் விக்ரம். இந்த படம் செப்டம்பர் 30ல் ரிலீஸ்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விக்ரமின் மேலாளர் மற்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

விக்ரமுக்கு லேசான மார்பு அசவுகரியம் இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக்கேட்டு வேதனை அடைகிறோம்.

இந்த நேரத்தில் அவருக்கும் குடும்பத்திற்கும் தேவையான தனிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

இந்த அறிக்கை பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகிறோம்”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL How is Vikram now? Vikram side & hospital report

‘அஜித் 61’ பட போஸ்டரை ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியிட புரொடியூசர் ப்ளான்

‘அஜித் 61’ பட போஸ்டரை ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியிட புரொடியூசர் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேர் கொண்ட பார்வை’ & ‘வலிமை’ ஆகிய படங்களை தொடர்ந்து போனிகபூர் மற்றும் வினோத்துடன் மூன்றாவது முறையாக அஜித் கைகோத்திருக்கும் படம் AK61.

வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு க்ரைம் – த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யுவன் இசையமைக்க இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம்.

அன்றைய தினம் போனி கபூரின் மனைவி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Producer plan to release ‘Ajith 61’ poster on Sridevi’s birthday

JUST IN விக்ரமுக்கு உடல்நலக்குறைவு.; மருத்துவமனையில் அனுமதி! நடந்தது என்ன.?

JUST IN விக்ரமுக்கு உடல்நலக்குறைவு.; மருத்துவமனையில் அனுமதி! நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிப்புகென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.

சினிமாவில் இவரின் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்தார.

மலையாளம் & தமிழ் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்தார்.

மேலும் பல பிரபல நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படத்தில் தனது முழு திறமையும் காட்டி மக்கள் மனங்களை வென்றார்.

இந்த படத்திற்கு பின் பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார் விக்ரம்.

தில், தூள், சாமி, ஜெமினி, காசி என ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வேடத்தில் அசத்தியிருந்தார் விக்ரம்.

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர் விக்ரம் என்று சொன்னால் அது மிகையல்ல.

தற்போது இவரது மகன் துருவ் சினிமாவில் நடித்து வருகிறார்.

அண்மையில் ஓடிடியில் வெளியான மகான் படத்தில் தந்தை மகன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் விக்ரம்.

இந்த நிலையில் இவருக்கு சற்று முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விக்ரம்.

செய்திகளை தொடர்ந்து அறிந்துக் கொள்ள எங்களுடன் இணைப்பில் இருங்கள்..

Actor Vikram admitted to hospital ? what happened.?

சாய்பல்லவியின் கண்களை பின் தொடர்ந்தேன்.; இறுதியில் சம்மட்டி அடி.. – சக்திவேலன்

சாய்பல்லவியின் கண்களை பின் தொடர்ந்தேன்.; இறுதியில் சம்மட்டி அடி.. – சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி.

இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசும்போது…

என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்று தான் கூறுவீர்கள்.

ஜூலை 15ந் தேதி வெளியாகிறது. பார்த்து விட்டு கூறுங்கள். ஒளிப்பதிவு இப்படத்தில் சிறப்பாக செய்திருக்கிறார்கள். என்னுடைய நண்பர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் திருப்தி அடைந்தாலும் அவர் இன்னும் சிறப்பாக எடுக்கலாம் என்று நடிப்பார்.

இப்படம் பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் போராடிக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யலட்சுமி எங்களுடன் இணைந்து ஆதரவு கொடுத்தார். 2D ராஜசேகர் சாருக்கு நன்றி. இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் இல்லையென்றால் இப்படம் இல்லை என்றார்.

நடிகை சாய் பல்லவி பேசும்போது….

சாய் பல்லவியால் தான் இப்படம் சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், நான் வருவதற்கு முன்பே எல்லாமே தயாராக இருந்தது. அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனையை படமாக கொடுத்திருக்கிறார்கள்.

பொதுவாக இயக்குனருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குனர் கெளதம் எந்த வித அழுத்தமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தார்.

படத்தில் பணியாற்றியாவர்கள் என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அல்லாமல் படத்திற்கு எது தேவையோ அதை செய்திருக்கிறார்கள்.

ஒரு நாள் நடிகர் சூர்யாவுடன் எடுத்த புகைப்படம் அனுப்பினார்கள். அப்போது அவரும் இதில் பகுதியாக இருக்கிறார் என்று நினைத்தேன்.

எதிர்பாராத விதமாக சூர்யா சாரையும் ஜோதிகாவையும் பார்த்ததில் எனக்கு பேச்சு வரவில்லை. அன்றைய படப்பிடிப்பில் நான் எப்படி நடித்தேன் என்று கூட தெரியவில்லை. ஏனென்றால், நான் சூர்யா சாரின் மிகப்பெரிய விசிறி. அவரைப் பார்த்து உறைந்து போனேன் என்றார்.

நடிகை ஐஸ்வர்யலட்சுமி பேசும்போது…

3 வருடங்களாக கார்கியுடன் பயணித்து இருக்கிறேன். ஆனால், இயக்குனர் கெளதம் ராமசந்திரன் 4 வருடங்கள் போராடியிருக்கிறார். சாய் பல்லவி இல்லாமல் கார்கி இல்லை. இப்படம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான படம். அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

2D ராஜசேகர் பேசும்போது…

கார்கியோட இணைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. சாய்பல்லவி ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சி வரை புத்திசாலிதனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். சூர்யா இப்படத்தைப் பார்த்து விட்டு சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு இப்படத்தை நாமே வெளியிடுவோம் என்றார். இப்படத்தை சாதாரணமாக எடுக்கவில்லை. குறைந்த செலவிலும் எடுக்கவில்லை என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன் பேசும்போது…

“நாம் ஒரு தொழிலில் இருக்கிறோம். அதில் பயணித்து கொண்டு இருக்கும் போது பெரிதாக தெரியாது. ஆனால், இடையில் எதிர்பாராத மகிழ்ச்சியான தருணம் வந்தால் அதை சாதாரணமாக கடந்து விட முடியாது. அப்படிதான் இப்படம் பார்த்த போது இருந்தது. படம் ஆரம்பித்ததில் இருந்து, நான் பின் தொடர்ந்தது சாய் பல்லவியின் கண்கள் தான். இப்படத்தின் இறுதி காட்சியில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

இப்படத்தை 2D நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய பேராசையாக இருந்தது. ராஜசேகரும் சூர்யாவும் பார்த்து ஒப்புக் கொண்டார்கள்.

ஆகையால், இப்படம் தரமானதாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை சாதாரணமாக கடந்து விட முடியாது. ஒரு திகில் படத்தில் கூட இந்தளவுக்கு தாக்கம் இருக்குமா என்று தெரியாது என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது…

, முதலில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி. இப்படம் மக்களிடம் எப்படி சேரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 2D-க்கு சென்ற பிறகு தான் நிம்மதியாக இருந்தது. இப்படத்தின் கதையைக் கேட்கும் போது பதட்டமாக இருந்தது.

ஏனென்றால், இது மற்ற படங்களைப் போல் இருக்காது. இறுதிக் காட்சியைக் கேட்கும் போது இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் சிறப்பாக நடித்து விட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருவேன். ஆனால், ஒரே ஒரு பாவனையில் சாய் பல்லவி வென்று விடுவார் என்றார்.

I followed Sai Pallavi’s eyes. Producer Sakthivelan At Gargi press meet

‘லத்தி’ படத்திற்குப் பின் விஷாலின் அடுத்த படங்கள் குறித்த அப்டேட்

‘லத்தி’ படத்திற்குப் பின் விஷாலின் அடுத்த படங்கள் குறித்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் ‘லத்தி’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வினோத் குமார் இயக்குகிறார்.

விஷாலின் நெருங்கிய நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் பட சூட்டிங்கின் போது விஷாலுக்கு ஏற்பட்ட விபத்துக்கள் குறித்து வீடியோவும் செய்திகளையும் பகிர்ந்து வருகிறது விஷால் தரப்பு.

இதனிடையில் ஆந்திராவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வந்தன.

இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் நடிகர் விஷால்.

‘லத்தி’ படத்தை முடித்துவிட்டு துப்பறிவாளன் 2 என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளார் விஷால்.

இந்த படங்களை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Latest update on Vishal’s next film after ‘Lathi’

லவ் பண்ணிட்டு இருக்கேன்.; தன் காதல் திருமணம் குறித்து விஷால் ஓபன் டாக்

லவ் பண்ணிட்டு இருக்கேன்.; தன் காதல் திருமணம் குறித்து விஷால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால்.

நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை காட்டி வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

பின்னர் சில காரணங்களால் அந்த தேர்தலில் விஷால் போட்டியிடவில்லை.

ஆனாலும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரையுலக சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். 40 வயதை தாண்டிய விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பே தனக்கு திருமணம் எனவும் சபதம் போட்டார்/ கூறிவந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவருக்குள்ளே மனக்கசப்பு ஏற்பட்டதால் பிரேக் அப் ஆனது.

இதன்பின்னர் லட்சுமி மேனனுடன் காதல் என விஷால் கிசு கிசுக்கப்பட்டார்.

இதனையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருடன் கடந்த 2019ல் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

ஆனாலும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை கூட செல்லவில்லை.

இந்த நிலையில் திருமணம் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் விஷால்.

அதில்…

“பெற்றோர் பாக்குற பொண்ணு செட் ஆகுமான்னு தெரியல.

அதனால நிச்சயம் லவ் மேரேஜ் தான். இப்போ லவ் பண்ணிட்டு தான் இருக்கேன். விரைவில் கல்யாண பொண்ணு யார்ன்னு சொல்றேன்” என தெரிவித்துள்ளார்.

Vishal opens up about his love marriage

More Articles
Follows