‘தீராத வெறி; சேராத வெற்றி…’ 26 வருட விக்ரம் ஒரு பார்வை!

‘தீராத வெறி; சேராத வெற்றி…’ 26 வருட விக்ரம் ஒரு பார்வை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiyaan vikram stillsகோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் சினிமாவில் ஆயிரக்கணக்கான ஹீரோக்கள் உள்ளனர்.

ஆனால், அதில் ஒரு சிலரே சினிமாவிற்காக தன்னை வருத்திக் கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றனர்.

அதில் தமிழ் சினிமாவில் சிவாஜிகணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு விக்ரம் முதன்மையானவராக வருகிறார்.

இவர் நடித்த முதல் படம் ‘என் காதல் கண்மணி’ 1990ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் (இதே நாளில்) வெளியானது.

இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இவரது ஆரம்ப கால படங்கள் அனைத்தையும் ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், போன்ற முன்னணி இயக்குனர்களே இயக்கினர்.

ஆனால் வெற்றி என்பது இவருக்கு வெறும் கனவாகி போனது.

ஆனால் சினிமா மீதுள்ள தீராத வெறியால், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு பாலாவுடன் இணைந்து சேது என்ற மாபெரும் காவியத்தை கொடுத்தார்.

இப்படியொரு நடிகர், தமிழ் சினிமாவில் இருக்கிறாரா? என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

இவரது சினிமா வாழ்க்கையையே அப்படம் புரட்டி போட்டது.

இப்படத்தின் கேரக்டர் பெயரான சீயான் என்பதையே இவரது ரசிகர்கள் தற்போது அன்போடு அழைத்து வருகின்றனர்.

இதனையடுத்து “காசி, ஜெமினி, சாமுராய், கிங், தூள், சாமி உள்ளிட்ட பல படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக உயர்ந்தார்.

இதில், அந்நியன், காசி, பிதாமகன், தெய்வத் திருமகள், ஐ, இருமுகன் ஆகிய படங்களில் இவர் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி பலருக்கும் பாடமாக அமைந்தது.

பிதாமகன் படத்திற்காக தேசிய விருதை வென்றார்.

ஷங்கர் இயக்கிய ஐ படத்திற்காக தன் நிஜ உருவத்தையே உருமாற்றிக் கொண்டார்.

சிறந்த இயக்குனர்கள் தங்கள் வித்தியாசமான படைப்புகளை இவர் மூலமே பரிசோதித்து வருகின்றனர்.

முயற்சியும் திறமையும் இருந்தால், வெற்றி வெகு தொலைவில் இருக்காது என்பதற்கு விக்ரமே சிறந்த உதாரணம்.

வாசகர்களுடன் இணைந்து ஃபிலிமி ஸ்ட்ரீட் சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம்.

பின்குறிப்பு… இதே நாளில் (17/10/1952) சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி படமும் வெளியானது. அடடே… மிகச் சிறந்த கலைஞர்களுக்குள்தான் என்ன ஒரு அரிய ஒற்றுமை.

‘கொடி’யை உயரத்தில் பறக்க விட தனுஷ் திட்டம்

‘கொடி’யை உயரத்தில் பறக்க விட தனுஷ் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kodi dhanushதனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான மாரி, தங்கமகன், தொடரி ஆகிய 3 படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

எனவே முழு பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற தன்னுடைய கொடி படம் பெற வேண்டும் என நினைக்கிறார்.

இதன் முதற்கட்டமாக இதன் புரோமோசன் நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் தமிழ்நாடெங்கும் இருக்கும் ரசிக மன்றங்களின் மாவட்ட செயலாளர்களை நேற்று அழைத்துப் பேசியிருக்கிறாராம்.

அப்போது கொடி படத்தை மாபெரும் ஹிட்டாக்க என்ன செய்யலாம் என ஆலோசனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதிக்கு நோ; சூர்யாவுக்கு எஸ் சொன்ன பிரபல நடிகை

விஜய்சேதுபதிக்கு நோ; சூர்யாவுக்கு எஸ் சொன்ன பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya vijay sethupathiதர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்துள்ளவர் விஜய்சேதுபதி.

விரைவில் இவரது நடிப்பில் ‘மெல்லிசை’ மற்றும் ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இமான் இசையமைக்க, இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.

இதில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்தில் நடிக்க முடியாமல் போன கீர்த்தி, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கமல் ரசிகர்கள் மீது ஏன் கம்ப்ளைண்ட் பண்ணல..?’ சிவகார்த்திகேயன் விளக்கம்

‘கமல் ரசிகர்கள் மீது ஏன் கம்ப்ளைண்ட் பண்ணல..?’ சிவகார்த்திகேயன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal sivakarthikeyan hanshikaகடந்த வருடம் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன், ஹன்சிகா மற்றும் சிவகார்த்திகேயன் மதுரை சென்றனர்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயன் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.

தாக்கியவர்கள் கமல் ரசிகர்கள் என அப்போது சொல்லப்பட்டது.

இந்நிலையில், நேற்று தந்தி டிவியின் ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

அப்போது அந்த தாக்குதல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது…

“என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் கொடுத்திருந்தால் அவர்களை போலீசார் அரெஸ்ட் செய்திருப்பார்கள்.

இதனால் அவர்களது வாழ்க்கையும் குடும்பமும் பாதிக்கப்பட்டு இருக்கும்.

அதனால்தான் நான் கம்ப்ளைண்ட் பண்ணல.” என்றார்.

‘விஜய்க்கு ஜோடியாக ஆசை… ஆனா ‘பைரவா’வில் கிடைச்சது இதுதான்’ – சிஜா ரோஸ்

‘விஜய்க்கு ஜோடியாக ஆசை… ஆனா ‘பைரவா’வில் கிடைச்சது இதுதான்’ – சிஜா ரோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sija roseகோழி கூவுது, மாசாணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தாலும் றெக்க படம்தான் சிஜா ரோஸ்க்கு நல்ல முகவரியை கொடுத்துள்ளது.

இதில் விஜய்சேதுபதியுடன் மாலா அக்கா கேரக்டரில் அருமையாக நடித்திருந்தார்.

தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் ஹரீஷ் உத்தமன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது….

“விஜய் சாருடன் ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்பது என் கனவு.

ஆனால் தற்போது அவர் படத்தில் நான் இருக்கிறேன் என்பதே சந்தோஷமாக இருக்கிறது.

என் கேரக்டர் பற்றி இப்போ சொல்ல முடியாது. ஆனால் படத்தின் முக்கியமான கேரக்டர் இது.

மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. எனவே, விரைவில் ஒரு படம் இயக்குவேன்” என்கிறார் இந்த மாலா அக்கா.

தனுஷ்-கார்த்தியுடன் மோதும் நதியா-மா.கா.பா. ஆனந்த்

தனுஷ்-கார்த்தியுடன் மோதும் நதியா-மா.கா.பா. ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nathiya makapa anandhவருகிற 2016 தீபாவளிக்கு பல படங்களில் போட்டியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தனுஷ் நடித்துள்ள கொடி மற்றும் கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா ஆகிய படங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தற்போது, மேலும் இரு படங்கள் களத்தில் குதிக்கின்றன.

மலையாள சினிமாவின் முன்னனி இயக்குநர் துளசிதாஸ் இயக்கிய “திரைக்கு வராத கதை” படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

ஆண்களே நடிக்காத இப்படத்தில் நதியா, இனியா, ஈடன், கோவைசரளா, ஆர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை MJD புரொடக்‌ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரித்துள்ளார்.

இத்துடன் மாகாபா. ஆனந்த் நடித்துள்ள கடலை படமும் வெளியாகிறது.

சகாய சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்பாபு, பொன்வண்ணன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

nathiya

 

????????????????????

More Articles
Follows