கமலை ஃபாலோ செய்து *அண்ணனுக்கு ஜே* போட வரும் தினேஷ்

கமலை ஃபாலோ செய்து *அண்ணனுக்கு ஜே* போட வரும் தினேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dinesh Mahima Nambiyar starring Annanukku Jai release dateராஜ்குமார் இயக்கத்தில் அரசியல்வாதியாக தினேஷ் நடித்துள்ள படம் `அண்ணனுக்கு ஜே’.

தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்துது வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

கமல் தயாரித்து நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம்2 படம் இதற்கு முந்தைய வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Dinesh Mahima Nambiyar starring Annanukku Jai release date

மாஸ் காட்டும் *சர்கார்* விஜய்; அனுமதியோடு போட்டோ போட்ட வரலட்சுமி

மாஸ் காட்டும் *சர்கார்* விஜய்; அனுமதியோடு போட்டோ போட்ட வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi released Vijays Sarkar shooting spot photoவிஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் `சர்கார்’.

இப்படக்குழு அடுத்த கட்ட சூட்டிங்குக்காக விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவங்கியுள்ளது.

சென்னையிலுள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் விஜய், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் வைத்து கையில் குடையுடன், காதில் கடுக்கனுடன் நிற்கும் விஜய்யின் புகைப்படம் ஒன்றை வரலட்சுமி வெளியிட்டுள்ளார்.

அதை அவர் படக்குழுவின் அனுமதியுடன் வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

Varalakshmi released Vijays Sarkar shooting spot photo

sarkar vijay shoot

பர்ஸ்ட் லுக் ரிலீஸ்; வெங்கட் பிரபு-சிம்பு இணைந்து நடத்தும் *மாநாடு*

பர்ஸ்ட் லுக் ரிலீஸ்; வெங்கட் பிரபு-சிம்பு இணைந்து நடத்தும் *மாநாடு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR and Venkat Prabhus new movie titled Maanaaduசில தினங்களுக்கு முன் சிம்புவின் அடுத்த பட தகவல்கள் குறித்து வெளியிட்டு இருந்தோம்.

சிம்புவின் அடுத்த படத்தை வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார்.

இதன் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்திற்கு `மாநாடு’ என்று தலைப்பு வைத்து அதன் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

அரசியலை மையப்படுத்தி இந்த படம் உருவாகவுள்ளதால் இது எஸ்.டி.ஆரின் மாநாடு என்றும், வெங்கட் பிரபுவின் அரசியல் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படத்தை அடுத்த 2019ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர்.

STR and Venkat Prabhus new movie titled Maanaadu

maanadu str vp sk

நயன்தாரா-விக்கி ஜோடியை போல ஊர் சுற்றும் ஓவியா-ஆரவ்

நயன்தாரா-விக்கி ஜோடியை போல ஊர் சுற்றும் ஓவியா-ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aarav and Oviya in Thailand photos goes viralகமல் நடத்திய பிக்பாஸ் சீசன் 1ல் ஆரவ்விடம் தனது காதலை தெரிவித்தார் ஓவியா.

ஆனால் இந்த காதலை ஆரவ் மறுக்கவே, நிகழ்ச்சியில் தற்கொலை செய்டு கொள்ளுமளவுக்கு சென்றார் ஓவியா.

அதன்பின்னர் நடந்தது எல்லாம் தமிழகமே அறிந்ததே.

பின்னர் தற்போது இருவருக்குமான காதல் முறிந்துவிட்டது என்றனர்.

ஆனால் நடக்கும் நடவடிக்கைகளை பார்த்தால் அவர்களின் நெருக்கம் தற்போது கூடியுள்ளதாக தெரிகிறது.

தாய்லாந்த் நாட்டில் ஆரவ் மற்றும் ஓவியா கைகோர்த்தபடி செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அவர்கள் இந்த படங்களை எடுக்காவிட்டாலும், இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த ஜோடியை போல நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றிக் கொண்டு புகைப்படங்கள் பகிர்வது வழக்கம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Aarav and Oviya in Thailand photos goes viral

வீடியோ : பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் எல்லை மீறி நடந்து கொண்டனர் – மமதி

EXCLUSIVE சிவகார்த்திகேயன்-கௌதம் மேனன் புதிய கூட்டணி

EXCLUSIVE சிவகார்த்திகேயன்-கௌதம் மேனன் புதிய கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and Gautham menon join hands for single track launchவிக்ரம் மற்றும் தனுஷ் ஆகியோரது படங்கள் இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

சீமராஜா படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது இவர்கள் இருவரும் ஒரு படத்திற்காக கை கோர்க்கின்றனர்.

நாளை மறுநாள் ஜீலை 11ஆம் தேதி வெளியாகவுள்ள ஒரு படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளார்கள்.
அது ஒரு புதிய படத்தின் பாடல் என கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான ஒரு படத்தில் நடித்து சர்ச்சையான பெயரை எடுத்த ஒரு நடிகை அந்த படத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

அது ஒரு பறவை பற்றிய படம் என சொல்லப்படுகிறது. மேலும் அதன் போஸ்டரில் ஒரு கூண்டுக்குள் ஒரு பறவை உள்ளது.

Sivakarthikeyan and Gautham menon join hands for single track launch

மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள் எங்களுடன்…

siva and gautham

 

தூத்துக்குடி விவகாரம்; ரஜினி மீது வழக்கு பதிய சிலம்பரசன் மீண்டும் மனு

தூத்துக்குடி விவகாரம்; ரஜினி மீது வழக்கு பதிய சிலம்பரசன் மீண்டும் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் பற்றி ரஜினிகாந்த் அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.

போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துக் கொண்டதன் காரணமாகவே துப்பாக்கி சூட்டை போலீசார் நடத்தினர் என பேசியிருந்தார்.

இதற்கு அப்போதே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு குரல் எழுப்பினர்.

ஆனால் அங்குள்ள ஒரு பிரிவினரே இதற்கு காரணம் என மீனவ மக்கள் புகார் அளித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, ரஜினி அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஓசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிலம்பரசன் என்பவர் கடந்த ஜூன் 11ம் தேதி ஓசூர் நகர காவல்நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் அளித்திருந்தார்.

காவல்துறையினர் இதுதொடர்பாக சி.எஸ்.ஆர் வழங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கடந்த ஜூன் 27ம் தேதி ஓசூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை அவதூறாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதாகவும், இதனால் நியாயத்திற்கு போராடியவர்களை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையின் மேலதிகாரிகளை அணுக அறிவுறுத்தினார்.

இந்நிலையில் மேல் அதிகாரிகளை அணுகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என இன்று ஜீலை 9ஆம் தேதி மீண்டும் ஓசூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் 2வது முறையாக சிலம்பரசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணையை 11-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க – காலா திரை விமர்சனம்

 

More Articles
Follows