சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ பட ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ…

சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ பட ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் என்.கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான படம் ‘மாயோன்’.

இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்க, ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.

இப்படம் கடந்த வருடம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

பழங்கால கோவில் ஒன்றை சுற்றி நடக்கும் கதைக்களமாக உருவாகியிருந்த ‘மாயோன்’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘மாயோன்’ படம் வருகிற 11ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்படம் வெளியாகும் ஓடிடி தளம் குறித்து அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மாயோன்

Sibiraj’s ‘Maayon’ on OTT release after one year of its theatrical release

‘ஜென்டில்மேன் 2’ பட டைட்டில் வீடியோவை வெளியிட்ட குஞ்சுமோன்

‘ஜென்டில்மேன் 2’ பட டைட்டில் வீடியோவை வெளியிட்ட குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’.

இப்படத்தில் மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனா இதையடுத்து ‘ஜென்டில்மேன்-2’ படத்தை தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இப்படத்தை இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.

இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார்.

கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

‘ஜென்டில்மேன்-2’ திரைப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

‘Gentleman2’ movie title video released

ரஜினி படத்தை பார்க்க வந்த தனுஷை தாராள மனதுடன் வரவேற்ற ரசிகர்கள்

ரஜினி படத்தை பார்க்க வந்த தனுஷை தாராள மனதுடன் வரவேற்ற ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்துள்ளார்.

ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த தனுஷை ஆரவாரம் செய்து ரசிகர்கள் வரவேற்றனர்.

dhanush watched rajini’s jailer fdfs in chennai rohini theatre

முதல் அமைச்சர் வாழ்க்கை படத்தில் முதல்வராக நடிகர் அஜ்மல்

முதல் அமைச்சர் வாழ்க்கை படத்தில் முதல்வராக நடிகர் அஜ்மல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜ்மல் ‘கோ’, ‘நெற்றிக் கண்’ படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். தொடர்ந்து தமிழில் குறிப்பிடும்படியான படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் புதிய படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியாக அஜ்மல் நடிக்க உள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக இது உருவாகிறது.

இதுகுறித்து அஜ்மல் கூறும் போது…

“முதலில் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு பல தரப்பில் இருந்தும் பயங்கர எதிர்ப்பும் மிரட்டல்களும் வந்தது.

ஆனாலும் அவரைப் பிடித்தவர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து உள்ளனர். என்னால் முடிந்த வரை அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முயற்சிக்கிறேன்.

ராம் கோபால் வர்மாவும் எனக்கு இந்த விஷயத்தில் உதவியாக இருக்கிறார். இது எனது திரை வாழ்வில் மிகவும் முக்கியமான படம். மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான படமாக 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது.

நிச்சயம் படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று தெரிவித்துள்ளார்.

அஜ்மல்

Ajmal in Andhra CM Jagan Mohan Reddy biopic

இயக்குனர் சித்திக் மறைவையொட்டி துல்கர் சல்மான் படக்குழு எடுத்த திடீர் முடிவு

இயக்குனர் சித்திக் மறைவையொட்டி துல்கர் சல்மான் படக்குழு எடுத்த திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’.

இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

கிங் ஆஃப் கோதா

‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மலையாள இயக்குனர் சித்திக் இஸ்மாயில் மறைவையடுத்து இன்று வெளியாக இருந்த துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டிரைலர் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

கிங் ஆஃப் கோதா

Dulquer’s ‘King Of Kotha’ Trailer release of postponed due to Siddique’s demise

ரஜினி பாராட்டால் ‘மாவீரன்’ படக்குழு மகிழ்ச்சி.; நன்றி சொல்லி ஜெயிலரை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

ரஜினி பாராட்டால் ‘மாவீரன்’ படக்குழு மகிழ்ச்சி.; நன்றி சொல்லி ஜெயிலரை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினி ‘மாவீரன்’ படத்தை பார்த்துவிட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ரஜினிக்கு நன்றி சொல்லி ‘ஜெயிலர்’ படத்தை வாழ்த்தினார் சிவகார்த்திகேயன்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan Wishes Rajinikanth For Jailer Release

More Articles
Follows