செல்வராகவனுடன் பிரபல நட்சத்திரங்கள் கூட்டணி.; ராஜீவ்மேனன் மகள் அறிமுகமாகிறார்

செல்வராகவனுடன் பிரபல நட்சத்திரங்கள் கூட்டணி.; ராஜீவ்மேனன் மகள் அறிமுகமாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர்.

பாக்யராஜ் நடிப்பு இயக்கத்தில் 90களில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் பான்-இந்தியா கதையம்சம் கொண்டவை என்பதால் அவை மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அந்த மொழிகளிலும் வெற்றி பெற்றன. அப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட திரைப்படமாக இது அமையும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன் இப்படத்தின் கதையை வெகுவாக ரசித்து இதில் நடிக்க சம்மதித்தார்.

யோகி பாபு, ‘புஷ்பா’ மற்றும் ‘ஜெயிலர்’ புகழ் சுனில், ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன்…

“விறுவிறுப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம்.

கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி,” என்று கூறினார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகில் சுமார் 1000 துணை நடிகர்கள் பங்களிப்போடு நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

இத்திரைப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு டி பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். நிர்வாக தயாரிப்பாளர்: சதீஷ் சுந்தர்ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர்.

Telugu and Malayalam stars joins with Selvaraghavan

சினிமாக்காரன் வீடு மடமா.? துக்கம் கேலிச் சித்திரமா.? மீடியாக்களை கண்டிக்கும் பாரதிராஜா குழு

சினிமாக்காரன் வீடு மடமா.? துக்கம் கேலிச் சித்திரமா.? மீடியாக்களை கண்டிக்கும் பாரதிராஜா குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிறப்பு இறப்பு இரண்டுமே அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது.. இதில் இறப்பு என்பது ஒரு குடும்பத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இதில் சினிமாக்காரர்களும் விதிவிலக்கல்ல.

பிரபலங்கள் வீட்டில் மரணம் நடைபெற்றால் அதை செய்தியாக வெளியிடுவது தவறில்லை. ஆனால் சமீப காலமாக யூடியூப் சேனல்களின் அதிகப்படியான வருகையால் செய்தி சேனல்களின் பொறாமை நிறைந்த போட்டிகளால் அளவுக்கு மீறி நடைபெற்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நடிகை மீனாவின் கணவர் மரணத்தின் போது அவரது உடல் எரிக்கப்படும் வரை மீடியாக்கள் நுழைந்து அதனை படம் பிடித்து காட்டிய போது மீனா வருத்தமுற்றார்.

மேலும் நடிகர் அஜித்தின் தந்தை மரணம் அடைந்த போதும் இதே போன்றே நடைபெற்றது. அதுபோல சமீப காலமாக மனோபாலா, மாரிமுத்து, விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் மீடியாக்களின் வரம்பு மீறிய படப்பிடித்தலை காண்கிறோம்.

இதை ஒரு சில நபர்கள் கண்டித்த நிலையில் தற்போது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..

செப்டம்பர் 21, 2023:

மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது.

அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள்..உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும்.

அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது.

உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீபகால மீடியாக்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது.

வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது.

முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று.

இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது ஊடகங்கள். மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா?

நேற்றும்..இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது.

குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்… காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள்… மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும்.

அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும்.

ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

நன்றி

பாரதிராஜா
தலைவர்,
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

Bharathiraja team condemns Media at death funerals

‘விடாமுயற்சி’ அப்டேட் : அஜித்துடன் இணையும் விஜய்யின் ‘லியோ’ வில்லன்

‘விடாமுயற்சி’ அப்டேட் : அஜித்துடன் இணையும் விஜய்யின் ‘லியோ’ வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் ‘துணிவு’ படத்திற்குப் பிறகு புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.

‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்ட இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதை அடுத்து மகிழ் திருமேனி இயக்குவார் என லைக்கா நிறுவனம் அறிவித்தது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் த்ரிஷா, ஹூமா குரேஷி என இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கின்றனர்.

இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், துபாயில் சஞ்சய் தத்தும் அஜித்தும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

இதனால் இந்தப் படத்தில் சஞ்சய் தத்தும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும், விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி

Sanjay dutt to be villain in ajith kumar’s vidamuyarchi

வசூலில் 100 கோடியை டார்கெட் செய்யும் ‘மார்க் ஆண்டனி’ டீம்

வசூலில் 100 கோடியை டார்கெட் செய்யும் ‘மார்க் ஆண்டனி’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படத்தில் ரித்து வர்மா, அபிநயா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘மார்க் ஆண்டனி’ படம் இதுவரை ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விரைவில் ரூ 100 கோடியை ‘மார்க் ஆண்டனி’ வசூலிக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vishal and SJ Suryah starrer mark antony movie grosses 65 crore in 7 days

‘பார்க்கிங்’ செய்ய முடியாமல் தள்ளிப் போகும் பட ரிலீஸ்

‘பார்க்கிங்’ செய்ய முடியாமல் தள்ளிப் போகும் பட ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’.

இதில் நாயகியாக இந்துஜா நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘பார்க்கிங்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Harish Kalyan starrer ‘Parking’ release postponed

பன்னி வாசு தயாரிப்பில் மீண்டும் இணைந்த நாக சைதன்யா – சாய்பல்லவி

பன்னி வாசு தயாரிப்பில் மீண்டும் இணைந்த நாக சைதன்யா – சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்கும் படம் தான் #NC23.

இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவர, சாய் பல்லவி இப்படத்தில் இணைந்துள்ளார்.

இயக்குனர் சந்து மொண்டேடியுடன் “யுவ சாம்ராட்” நாக சைதன்யாவின் பான்-இந்தியா திரைப்படமான #NC23-ன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கிய படக்குழு, விரைவில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பன்னி வாசு இப்படத்தை தயாரிக்கிறார், அல்லு அரவிந்த் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல வெற்றிகரமான படைப்புக்களை உருவாக்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பெருமையுடன் வழங்குகிறார்.

கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் NC23 தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை மிக உயர்ந்த தரத்துடன் உருவாக்கப்படுவதை உறுதி செய்கிறது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளின் ஒரு பகுதியாக, இப்படத்தின் முன்னணி நாயகியாக இணைந்தார் சாய் பல்லவி.

NC23

சாய் பல்லவி இணைந்த புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரம்மாண்டமான படத்தில் கதாநாயகியாக நடிக்க மிகவும் அழகான மற்றும் திறமையான நடிகை சாய் பல்லவி வருகிறார் என்று தெரிவித்தது.

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இதற்கு முன்பு ‘சூப்பர்ஹிட் லவ் ஸ்டோரி’ படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#NC23 நாக சைதன்யா மற்றும் சந்து மொண்டேடி இணையும் இப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் உயர் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

தயாரிப்பாளர்கள் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளுக்கே நல்ல பட்ஜெட்டை செலவு செய்கிறார்கள். மேலும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விரைவில் தயாரிப்பு குழு அறிவிக்கவுள்ளது.

நடிகர்கள்: நாக சைதன்யா, சாய் பல்லவி

தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர், இயக்குனர்: சந்து மொண்டேட்டி
பேனர்: கீதா ஆர்ட்ஸ்
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாசு
PRO: யுவராஜ்
மார்க்கெட்டிங் : பர்ஸ்ட் ஷோ

NC23

Sai Pallavi Joins The Voyage Of Naga Chaitanya Shoot Begins Soon

More Articles
Follows