கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் ‘மாவீரா’ படத்தலைப்பு மாறியது

கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் ‘மாவீரா’ படத்தலைப்பு மாறியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார்.

அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்க “கவிப்பேரரசு” வைரமுத்து பாடல்கள் எழுத எஸ்.கோபிநாத் கேமராவை கையாள “ஸ்டண்ட்” சில்வா சண்டை காட்சியமைக்க தினேஷ் நடனம் அமைக்க பாலமுரளி வர்மன் வசனம் எழுத ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய நிகில் முருகன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார்.

விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில் விரைவில் “மாவீரா படையாண்டவன்” இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை தொடங்கவிருக்கிறது.

ஸ்டண்ட் சில்வா அவர்கள் படத்தில் வரும் உக்கிரமான மாஃபியா கேங்குகளோடு கௌதமன் மோதவிருக்கும் மிக முக்கிய சண்டைக் காட்சிக்காக மாஸ்டரின் உதவியாளர் சிவாவை வைத்து தினமும் அதிகாலை 3 மணி நேரம் மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட மிக கடுமையான பயிற்சியினை அளித்துக் கொண்டிருக்கிறார்.

அனைத்துவித வயதினரும் கொண்டாடும்படி ஒரு அதிரடியான ஆக்க்ஷன் திரைப்படமாக வெளிவந்து தமிழ் திரையுலகில் “மாவீரா படையாண்டவன்” ஒரு மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்தும் என உறுதிபட சொல்கிறார் இயக்குனர் வ. கௌதமன்.

Maaveera title changed to Maaveeran Padaiyandavan

பட்டைய கிளப்பும் பவர்ஸ்டார்.; இன்ஸ்ட்டாகிராமில் இமாலய சாதனை.!

பட்டைய கிளப்பும் பவர்ஸ்டார்.; இன்ஸ்ட்டாகிராமில் இமாலய சாதனை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பவன் கல்யாண்.

இவர் ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அரசியல் என பரபரப்பாக இயக்கி வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது ‘ப்ரோ’, ‘ஹரி ஹர வீரா மாலு’, ‘உசாத் பகத் சிங்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இவருக்கென பல லட்சம் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், பவம் கல்யாண் தற்போது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

இவர் இன்ஸ்டாவில் இணைந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் அவரை பின் தொடர தொடங்கினர்.

ஒரு மணி நேரத்தில் 15 லட்சம் ஃபாலோவர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

இது இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையாக கூறப்படுகிறது.

பவன் கல்யாண்

Pawan Kalyan makes Instagram debut to created a biggest record

தனுஷின் 50வது படத்தில் இணைந்த உலக பிரபல இசையமைப்பாளர்

தனுஷின் 50வது படத்தில் இணைந்த உலக பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘D50’ என பெயரிடப்பட்டுள்ளது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் ‘மரியான்’, ‘ராஞ்சனா’, ‘அந்த்ராங்கி ரே’ ஆகிய மூன்று படங்களில் தனுஷியுடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமான்

Ar Rahman joins Dhanush in his 50th film

‘மாமன்னன்’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘மாமன்னன்’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்னன்’.

இப்படத்தில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாமன்னன்’ திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளீல் வெளியாகிறதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

நாயகுடு

Udhayanidhi’s ‘maamannan’ movie is releasing in telugu too

பிரசாந்த் நீல் – பிரபாஸ் கூட்டணியின் ‘சலார்’ டீசர் படைக்கும் சாதனை

பிரசாந்த் நீல் – பிரபாஸ் கூட்டணியின் ‘சலார்’ டீசர் படைக்கும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சலார்’.

இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்து வருகிறது.

‘சலார்’ படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலார்

‘சலார்’ திரைப்படத்தின் டீசர் இன்று காலை 5.12 மணிக்கு படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகிய 12 மணி நேரத்தில் யூடியூபில் 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Salaar – Teaser

Prabhas’ Salaar Teaser Crosses 45 Million Views just 12 hours Of Its Release

3 வருடத்திற்குள் கணவனை விவகாரத்து செய்யும் சிரஞ்சீவி மகளும் நடிகையுமான நிஹாரிகா

3 வருடத்திற்குள் கணவனை விவகாரத்து செய்யும் சிரஞ்சீவி மகளும் நடிகையுமான நிஹாரிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா.

இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள்.

நிஹாரிகா தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்திருந்தார்.

சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு 2020-ம் வருடம் குண்டூர் ஐ.ஜி. மகன் சைதன்யாவுடன் திருமணம் நடந்தது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்தத் திருமணத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன் உட்பட பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கினார் நிஹாரிகா.

இதனால் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகச் செய்திகள் பரவின.

இந்நிலையில், ஹைதராபாத் அருகிலுள்ள குக்கட்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில் நிஹாரிகா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“நானும் சைதன்யாவும் பிரிய முடிவெடுத்துள்ளோம். பிரிவையும், புதிய வாழ்வையும் ஏற்க எங்களுக்கு தேவையான ப்ரைவசியை கொடுக்க வேண்டுகிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நடிகை நிஹாரிகா தன் கணவர் சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளது தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chiranjeevi daughter Niharika confirms divorced with husband Chaitanya

More Articles
Follows