வெற்றிமாறன் தயாரிக்கும் ‘பேட்ட காளி’ வெப் தொடரில் ஷீலா

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘பேட்ட காளி’ வெப் தொடரில் ஷீலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார்.

அழகும் நடிப்பு திறமையும் நிறைந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நாயகியாக மாறியுள்ளார் .

பல சர்வேதேச விருதுகளை பெற்ற டூ லெட், விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற மண்டேலா என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்றால் ஷீலா ராஜ்குமாரை கூப்பிடுங்கள் என சொல்லும் அளவுக்கு யதார்த்த நடிப்பால் ரசிகர்களை மட்டுமல்ல, இயல்பான படைப்புகளை தர விரும்பும் படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளார் ஷீலா.

அதற்கேற்ற மாதிரி திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் தனது முத்திரையை பதிக்க துவங்கியுள்ளார். தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.

“வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட காளி’ என்கிற வெப் சீரிஸில் நடிக்கிறேன்.. ‘அண்ணனுக்கு ஜே’ படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த வெப்சீரிஸை இயக்குகிறார்.

மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராகும் இந்த வெப்சீரிஸ்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசை என திரைப்படத்திற்கு இணையாக இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது.

‘பேட்ட’ காளி என்கிற ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்

கோலி சோடா உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்த எடிட்டர் ராஜா சேதுபதியின் முதல் தயாரிப்பான ஜோதி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன் 8 தோட்டாக்கள் ஹீரோ வெற்றி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் க்ரிஷா குரூப், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கிருஷ்ணா அண்ணாமலை இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

இதுதவிர தமிழில் இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.. அவற்றை பற்றிய தகவல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் மலையாளத்தில் ஏற்கனவே கும்பலாங்கி நைட்ஸ் என்கிற படத்தில் நடித்ததற்காக நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. தற்போது மீண்டும் மலையாளத்தில் பெர்முடா என்கிற படத்தில் நடித்து வருகிறேன்.. ராஜீவ்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்…

மண்டேலா படத்தை தொடர்ந்து நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் தேடி வருகின்றன. அந்தவகையில் ஒரு நல்ல படத்தில் நானும் முக்கிய பங்களிப்பை கொடுத்திருந்தது என் திரையுலக பயணத்தில் வெளிச்ச புள்ளியாக மாறியுள்ளது.

பார்ப்பவர்கள் அனைவருமே மண்டேலாவுக்கு பிறகு உங்களது படங்களை பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம் என்று கூறுவதை கேட்பதற்கே பெருமையாக உள்ளது. அவர்களை போல நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன். கொரோனா இரண்டாவது அலை சமயத்தில் தயாரான படங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன” என்கிறார் ஷீலா ராஜ்குமார்.

Sheela to star in Petta Kaali web series produced by Vetrimaaran

அஜித்தின் அடுத்த ப்ளான்.; தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் திறப்பு

அஜித்தின் அடுத்த ப்ளான்.; தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் திறப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ படத்தை தொடந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இதில் அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் ’அஜித் 61’படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் எனவும் தெரிகிறது.

அதில் ஒரு கேரக்டர் கொள்ளைக்காரனாகவும் மற்றொரு கேரக்டர் போலீஸ் ஆபிசராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ‘அஜித் 62 படத்தின் கதை கசிந்துள்ளது.

இதில் தொழிலதிபராக நடிக்கிறாராம் அஜித்.

ஒரு கடும் உழைப்பாளியான அஜித் திறமையாக உழைத்து படிப்படியாக உயர்ந்து தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் நடத்தும் ஒரு முதலாளியாக உயர்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

எனவே இதில் இளமையான அஜித் முதல் முதுமையான அஜித் வரை பல கெட் அப்புகள் இருக்கும் என நம்பலாம். ரசிகர்களுக்கும் அதானே வேண்டும்.

இதையும் படிங்க – ‘மங்காத்தா’ பாணியில் அஜித்-61.; ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட் வைக்கும் வினோத்

Ajith Kumar’s AK 61 story leaked?

‘பீஸ்ட்’ கொடுத்த ட்விஸ்ட்; ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்..?

‘பீஸ்ட்’ கொடுத்த ட்விஸ்ட்; ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் கடந்த ஏப்ரல் 13ல் வெளியானது. இந்த படம் நெகட்டிவ் விமர்சனத்தால் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் ‘தலைவர் 169’ படத்தை இயக்கவுள்ள நெல்சனுக்கு ரஜினி ரசிகர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். தலைவர் படத்திற்கு கால அவகாசம் எடுத்து நல்ல திரைக்கதை அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது ரஜினியுடன் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், வடிவேலு, பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் நெல்சன் எழுதிய திரைக்கதையில் சில மாற்றங்களை சொன்னாராம் ரஜினிகாந்த்.

அதன்படி கேஎஸ் ரவிக்குமாரிடம் ஆலோசனை கேட்டு அவரிடம் திரைக்கதைக்கு உதவ வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth and KS Ravikumar to work together again ?

சிரஞ்சீவி சல்மான்கான் நயன்தாரா கூட்டணியில் உதயநிதி பட நடிகை

சிரஞ்சீவி சல்மான்கான் நயன்தாரா கூட்டணியில் உதயநிதி பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’.

தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது.

‘காட்பாதர்’ என தலைப்பிட்டு மோகன்ராஜா இயக்கி வருகிறார்.

இதில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க மற்றொரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கிறார். இவர்கள் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட அந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கிறார்.

காட்பாதர்‘ படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

இவர்களுடன் பிருத்விராஜ் , நயன்தாரா, ‘லைகர்’ பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதில் மற்றாரு முக்கிய கேரக்டரில் ‘கருப்பன்’ பட நடிகை தான்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதியுடன் தான்யா நடித்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படம் மே 20ஆம் தேதி ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tanya

Udhayanidhi film heroine to star in Chiranjeevi – Salman Khan’s new film

‘ஆடை’ பட இயக்குநருடன் இணைந்த ‘குலு குலு’ சந்தானம்

‘ஆடை’ பட இயக்குநருடன் இணைந்த ‘குலு குலு’ சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘மேயாதமான்’, ‘ஆடை‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா, சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘ லொள்ளு சபா’ மாறன், ‘லொள்ளு சபா’ சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராஜ் நாராயணன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

‘குலு குலு’ படத்தின் படபிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி நிறுவனமான சோனி மியூஸிக் கைப்பற்றியிருக்கிறது.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் சந்தானத்தின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அத்துடன் சந்தானத்தின் ‘குலு குலு’ ஜுன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Santhanam’s Gulu Gulu first look released

எம்ஜிஆர் கலைஞர் நடுவில் கார்த்தி.. அரசியலுக்கு அழைப்பு?.; ரசிகர் மன்றம் திடீர் அறிக்கை

எம்ஜிஆர் கலைஞர் நடுவில் கார்த்தி.. அரசியலுக்கு அழைப்பு?.; ரசிகர் மன்றம் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தலைமை நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்!

வரும் மே-25ம் தேதி கார்த்தி அண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரத்ததானம், அன்னதானம், கண்தானம், நீர்மோர் பந்தல்கள், குடிதண்ணீர் பந்தல்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கு நோட்டு,புத்தகம், பைகள் வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

அதை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டுவதும், முறையான முன் அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்வதும் ஒவ்வொரு வருடமும் நடந்துவரும் நிகழ்வுகள் ஆகும். இத்தகைய செயல்கள் யார் மனதையும் புண்படுத்தாத வகையிலும், கார்த்தி அண்ணன் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காத வகையிலும் இருக்கவேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நேற்று மதுரை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் இரண்டு மாபெரும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் கார்த்தி அண்ணன் இருப்பது போல டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து விளக்கம் கேட்டபோது “கார்த்தி அண்ணன் அவர்கள் மேல் இருந்த அன்பின் காரணமாக இவ்வாறு செய்துவிட்டதாகவும், இனிமேல் இவ்வாறு நடக்க மாட்டோம்” என்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக போஸ்டர்கள், பேனர்கள் டிசைன் செய்யுபோது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், அந்த போஸ்டர்களில் எந்தவிதமான அரசியல், சாதி, மத, இன அடையாளங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்றும்; யாருக்கும் எந்தவித மன வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தாத வகையில் போஸ்டர் டிசைன்கள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த அறிவிப்பை மீறி நடக்கும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி!

(ஆ.பரமு) – அகில இந்திய தலைவர். (இரா.வீரமணி) – அகில இந்திய செயலாளர்..

Official Statement from All india Karthi fans club

More Articles
Follows