விஐபி2 படத்தில் ரஜினி கேரக்டரில்தான் அவர் நடித்தாரா?

விஐபி2 படத்தில் ரஜினி கேரக்டரில்தான் அவர் நடித்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vip2 teamசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இம்மாதம் ஜீலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கஜோல் கேரக்டரில் தன் தந்தை ரஜினியை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்து வைத்திருந்தாராம் சௌந்தர்யா.

அதற்காகவே ரஜினி கேரக்டரை பட்டைத் தீட்டி வைத்திருந்தாராம்.

ஆனால் தன் அப்பாவும் அக்கா கணவரும் முறைத்துக் கொண்டு மோதிக் கொள்வது போல் இருந்தால், அது சரியாக வராது என்று பின்னர் முடிவு செய்து, அந்த திட்டத்தை சௌந்தர்யா கைவிட்டு விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Did Kajol role written for Rajinikanth in VIP2

பிக்பாஸ்க்கு முன்பே பிரபலமான நடிகை ஜுலி; ஆதார வீடியோ சிக்கியது

பிக்பாஸ்க்கு முன்பே பிரபலமான நடிகை ஜுலி; ஆதார வீடியோ சிக்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jallikattu and BigBoss fame Julie acted in Album Secret leakedகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் சினிமாவை சேர்ந்த 14 பிரபலங்கள் மற்றும் சாதாரண பெண் என்று அறியப்பட்ட ஜல்லிக்கட்டு போராளி ஜுலியானாவும் கலந்துக் கொண்டார்.

அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பேசும்போது, தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், நர்ஸ் என்றும் சாதாரண பெண் என்றும் அடிக்கடி கூறி வந்தார்.

இதற்கு முன் கேமரா முன் தான் தோன்றியதில்லை என்றும் கூறிவந்தார்.

இந்நிலையில், என் காதல் சொல்ல வந்தேன் என்ற ஒரு ஆல்பம் பாடலில் அவர் தோன்றி நடித்திருக்கிறார் என்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இப்பாடல் கடந்த 2015ஆம் ஆண்டு ஜீன் மாதமே யூடிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jallikattu and BigBoss fame Julie acted in Album Secret leaked

இதோ அந்த வீடியோ பாடல்…

நாசர் வீட்டுக்கு சென்று மகன் ஆசையை நிறைவேற்றிய விஜய்

நாசர் வீட்டுக்கு சென்று மகன் ஆசையை நிறைவேற்றிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay nassar son faizalதன்னை நேசிக்கும் ரசிகர்களின் நிறைவேறாத ஆசையை பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்றி வைப்பவர் விஜய்.

இந்நிலையில் பிரபல நடிகர் நாசர் மகன் பைசல் அவர்களின் ஆசையை ஒரு சந்தர்ப்பத்தில் நிறைவேற்றினாராம்.

அந்தப் புகைப்படத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நாசரின் மனைவி கமீலா.

சில ஆண்டுகளுக்கு முன்பு பைசல் ஒரு விபத்தில் சிக்கியிருந்தார். தற்போது குணமடைந்து வருகிறார்.

அவரை நலம் விசாரிக்க நாசர் வீட்டுக்கு விஜய் சென்றிருந்தாராம்.

அந்த சந்திப்பின் போதுதான் விஜய்யுடன் செல்ஃபி எடுக்க விரும்பி, ஒரு படத்தை எடுத்துள்ளார் பைசல்.

இதை தன் ட்விட்டர் பக்கத்தின் புரொபைல் படமாக வைத்துள்ளார் நாசர் மனைவி கமீலா.

Vijay fulfilled actor Nassar son Faizals long time wish

நேற்று சிம்பு; இன்று தனுஷ்; கெளதம் மேனனுடன் தொடரும் மோதல்

நேற்று சிம்பு; இன்று தனுஷ்; கெளதம் மேனனுடன் தொடரும் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush gautam menonபவர் பாண்டி படத்திற்கு முன்பே, கௌதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார் தனுஷ்.

இதில் பவர் பாண்டி படம் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டது.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் படம் இதுவரை தொடங்கவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கிவிடும் எனத் தெரிகிறது.

இதனிடையில் கெளதம் மேனன் இயக்கி வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் சூட்டிங் கலந்துக் கொண்டார் தனுஷ்.

இடையில் என்ன நடந்ததோ? விஐபி2, வடசென்னை, ஹாலிவுட் பட என பிஸியாகிவிட்டார் தனுஷ்.

தனக்கு பேசிய சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் கௌதம் மேனன் இழுத்தடிப்பதால், தனுஷ் அப்படத்தை முடித்துக் கொடுக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், கௌதம் மேனன் தயாரித்து இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கும் சிம்புவுக்கும் சம்பள பாக்கி வைக்கப்பட்டு, பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரே அப்படத்தை சிம்பு முடித்துக் கொடுத்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Do you Know Why Enai Noki Paayum Thota getting delay

விரைவில் டிடிஎச்சில் புதுப்படங்கள் ரிலீஸாகும்… விஷால் அறிவிப்பு

விரைவில் டிடிஎச்சில் புதுப்படங்கள் ரிலீஸாகும்… விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New movies will be released in DTH says Actor Vishalஜிஎஸ்டி உடன் தமிழக அரசின் வரி விதிப்பும் சேர்ந்துள்ளதால், சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர்.

எனவே இன்றுமுதல் தமிழகத்தில் உள்ள 1,100 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளதாவது…

பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

தயாரிப்பாளர்களை கலந்து ஆலோசித்துவிட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அவர்களின் முடிவை அறிவித்திருக்கலாம்.

பெரிய நடிகர்களின் படங்கள் ஓடிக் கொண்டிருந்தால் இதுபோன்ற முடிவை அவர்கள் எடுத்திருக்க மாட்டார்கள்.

வருங்காலத்தில் டிஜிட்டல் மற்றும் டிடிஎச்சில் புதிய படங்களை வெளியிட முடிவெடுத்துள்ளோம்.

எந்தவொரு தயாரிப்பாளரும் பாதிக்கப்படக்கூடாது.” என்றார்.

New movies will be released in DTH says Actor Vishal

ரஜினி ஒரு கோழை; அரசியலுக்கு வரமாட்டார்… – அன்புமணி (பாமக)

ரஜினி ஒரு கோழை; அரசியலுக்கு வரமாட்டார்… – அன்புமணி (பாமக)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini anbumani ramadossதமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை. எனவே போர் வரும்போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக கூறி சென்றார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து ரஜினியை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் தினம் தினம் வலம் வருகின்றன.

இந்நிலையில், பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடந்த தாமிரபரணி ஆறு பாதுகாப்பு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது… தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யாவிட்டால் அது சென்னை கூவம் ஆறு போல் ஆகிவிடும் என எச்சரித்தார்.

இதனையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியதாவது…

“எனது திருமணத்திற்கு முன்பே ரஜினி அரசியலுக்கு வருவார் என பேசப்பட்டது.

எனது பேரன் திருமணத்தின் போது கூட அவர் அரசியலுக்கு வரமாட்டார். அவர் தைரியமானவராக இருந்தால் உடனே வரவேண்டும்.

வருவேன், வருவேன் என மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கும் ரஜினி கோழைத்தனம் கொண்டவர்.” என்றார்.

ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை ரஜினி வலியுறுத்தினால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்பேன்.’ என குறிப்பிட்டார்.

Rajini dont have courage so he wont enter politics says Anbumani Ramadoss

More Articles
Follows