சினிமாவில் போட்டி அவசியமில்லை; தேவையும் இல்லை… தனுஷ்

சினிமாவில் போட்டி அவசியமில்லை; தேவையும் இல்லை… தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2 படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் புரொமோசன் பணிகளில் இப்படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதில் ஒரு பேட்டியில் தனுஷ் பேசியதாவது…

‘சினிமாவில் போட்டி அவசியமில்லை. தேவையும் இல்லை.

ஒரு படம் வெற்றிபெற்றால் நாம் அனைவருமே வெற்றி பெற்றவர்கள்தான்.

நான் என்னைத்தான் போட்டியாளராக நினைக்கிறேன்.

நாம் நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம்.

ஆனால் ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்னைப் பாதிக்காது என்று சொன்னால், நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தம்.

நாளை என்ன நடக்கும் என்பது பற்றி நினைக்க மாட்டேன். கடவுள் எனக்கு குறைவாகவோ கூடுதலாகவோ எதையும் கொடுத்துவிடவில்லை.

இப்போது நான் இருக்கும் இந்த நிலையே நிம்மதியாக இருக்கிறது.

இறந்த பின் நான் என்னுடன் எதையும் கொண்டு செல்ல போவது இல்லை’ என்றார்.

 

அரசியலில் வெற்றி பெற ரஜினி ஜாதகத்திற்கு ரசிகர்கள் யாகம்

அரசியலில் வெற்றி பெற ரஜினி ஜாதகத்திற்கு ரசிகர்கள் யாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini fans speechசில மாதங்களுக்கு தன் ரசிகர்களை சந்தித்த போது தன் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினிகாந்த் பேசினார்.

அதன்பின்னர் அவர் காலா சூட்டிங்கில் பிசியாகிவிட்டாலும், அவர் பத்த வைத்த அரசியல் பட்டாசு இன்னும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

அவரின் அரசியல் கட்சி அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் சரவணபொய்கையில், ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில், ரஜினி நீண்ட ஆயுள் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

மேலும் அரசியல் களத்தில் எதிரிகளை வென்று ரஜினிகாந்த் ஆட்சி நடத்த வேண்டும் என சிறப்பு யாகம் நடத்தினர்.

அப்போது ரஜினியின் ஜாதகத்தை ரசிகர்கள் பூஜையில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SuperStar fans made special pooja with Rajinis horoscope

rajini fans yaagam

ரஜினியை கிண்டலடித்த பார்த்திபன்; உதயநிதி-சூரியும் சேர்ந்து சிரித்தனர்

ரஜினியை கிண்டலடித்த பார்த்திபன்; உதயநிதி-சூரியும் சேர்ந்து சிரித்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PEMT stillsதன் படங்களில் மட்டுமல்ல பொது நிகழ்ச்சிகளிலும் நக்கலடித்து பேசுவதில் வல்லவர் பார்த்திபன்.

இவர் நடிப்பில் வருகிற 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் பொதுவாக எம்மனசு தங்கம்.

இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இதில் நடித்துள்ள உதயநிதி, சூரி, பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், இயக்குனர் தளபதி பிரபு ஆகியோர் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

அப்போது சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.

அப்போது ரஜினி மற்றும் கமல் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பார்த்திபன் பதிலளிக்கும்போது…

கமல் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்பதை கமலிடமே நேரடியாக கேட்கலாம்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கடவுளிடம் தான் கேட்க வேண்டும்.

ஆனால் எனக்கு கடவுள் பாஷை தெரியாது. ரஜினியை எப்போது அரசியலுக்கு அனுப்புவீர்கள் என கேட்க முடியாது. எனவே அதுபற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.” என்று கிண்டலாக பேசினார்.

அப்போது அருகிலிருந்த உதயநிதி மற்றும் சூரி ஆகியோர் சிரித்துக் கொண்டு இருந்தனர்.

பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தைலைப்பு ரஜினியின் பாடல் வரிகளிலிருந்து எடுக்கப்பட்டது என்பது இங்கே கவனித்தக்கது.

மதுரையில் கொடுத்த பேட்டியில் ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கும் முதல் ஆளாக நானிருப்பேன்.

ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்துதான் பணத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை. எனவே அவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்.” என்றார் பார்த்திபன்.

Parthiban made fun of Rajinis political entry and God decision

காவியன் படக்குழுவினரை பாராட்டிய சரத்குமார்

காவியன் படக்குழுவினரை பாராட்டிய சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar praises Kaaviyan motion posterசாரதி இயக்கத்தில் ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவிகுமார், ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காவியன்.

2M சினிமாஸ் K.V.சபரீஷ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.

முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இதை படமாக்கியுள்னர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சரத்குமார் பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினாராம்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

Sarathkumar praises Kaaviyan motion poster

kaaviyan first look poster

தன் ஷுவை கழட்டாத உதவியாளரை அறைந்த பாலகிருஷ்ணா

தன் ஷுவை கழட்டாத உதவியாளரை அறைந்த பாலகிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

balakrishna slapls his assistantதெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பாலகிருஷ்ணாவின் 102வது படத்தை இயக்குகிறார் கேஎஸ். ரவிக்குமார்.

இவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் அண்மையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள தன் மேக்கப் மேன் உடன் வந்தார் பாலகிருஷ்ணா.

அப்போது பூஜை இடத்திற்கு அருகில் செல்ல நினைத்த போது, தன் கால் ஷீவை கழட்ட விரும்பினார்.

ஆனால் தன் உதவியாளர் அவர் ஷீவை கழட்ட அருகில் வராதால் அவரை அழைத்து கழட்ட சொல்லி, கன்னத்தில் அறைந்தார்.

பின்னர் உதவியாளர் கழட்டிவிடவே, பூஜைக்கு சென்றார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானது.

பாலகிருஷ்ணாவின் இச்செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பே, சூட்டிங் தளத்தில் சக நடிகர்கள், நடிகைகளை கிண்டல் செய்வது, அவமரியாதையாக நடந்து கொள்வது என பல்வேறு சர்ச்சைகளில் பாலகிருஷ்ணா சிக்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Actor Nandamuri Balakrishna slaps assistant video goes viral

kr ravikumar balakrishna

விலை உயர்ந்த காரை வாங்கினார் விஜய்சேதுபதி

விலை உயர்ந்த காரை வாங்கினார் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiவருடத்திற்கு அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி ஹீரோ விஜய்சேதுபதி.

பல படங்களில் இவர் கமிட் ஆனாலும் தன் சம்பளத்தை இவர் கணிசமாகவே உயர்த்தி வருகிறார்.

இதனால் இவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் படப்பிடிப்புகளுக்கு சாதாரண கார்களில் வந்த விஜய்சேதுபதி தற்போது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ -7 வது சீரிஸ் வெள்ளை நிறக்காரை வாங்கி இருக்கிறாராம்.

இந்தக்காரின் மதிப்பு 1கோடி ரூபாய்க்கும் மேல் எனக் கூறப்படுகிறது.

Vijay Sethupathi bought new BMW 7 Series Car

More Articles
Follows