காதலித்தோம்; ஊர் சுற்றினோம்.. மனம் திறக்கிறார் பிக்பாஸ் ரைசா

காதலித்தோம்; ஊர் சுற்றினோம்.. மனம் திறக்கிறார் பிக்பாஸ் ரைசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I have love experience says Bigg Boss fame Raizaகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக பேசப்பட்ட ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைஸா இருவரும் பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

ரைசா தன் திரையுலக அனுபவம் பற்றி கூறும்போது…

“என் ஊர் பெங்களூர். பி.காம் படிச்சிருக்கேன். மாடலிங் செஞ்சுட்டு இருக்கேன்.

‘பிக்பாஸ்’ ஷோ வித்தியாசமான ஷோ. அதான் கலந்துக்கிட்டேன்.

2011 வருசத்துல மிஸ் இந்தியா போட்டியில கலந்துக்கிட்டேன்.

காலேஜ் டைம்ல லவ் பண்ணியிருக்கேன். சினிமா பார்க்குன்னு ஊர் சுத்திருக்கேன்.

ஆனால் லவ் ப்ராப்ளம். பிரிஞ்சுட்டோம்.

என் பேமிலியில் யாரும் சினிமாவில் இல்லை. பெண்கள் தைரியமானவங்க எனக்கும் அந்த தைரியம் இருக்கு.

‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் சின்ன ரோல் செஞ்சிருந்தேன்.

இப்போ ‘பியார் பிரேமா காதல்’ படத்துல நடிச்சுட்டு இருக்கேன். ரிசல்ட் பாத்த பிறகுதான் ரசிகர்கள் என்னைய எப்படி ஏத்துகிறாங்க தெரியும்.?” என்றார்.

I have love experience says Bigg Boss fame Raiza

இது ஸ்டிரைக் அல்ல; சினிமா துறையை புதுப்பிக்கிறோம்… : விஷால்

இது ஸ்டிரைக் அல்ல; சினிமா துறையை புதுப்பிக்கிறோம்… : விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Its not Cinema Strike We are renovating Industry says Producers Council President Vishalகடந்த 3 வாரங்களாக எந்தவொரு புதிய தமிழ் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகள், சூட்டிங் எதுவும் நடத்தக் கூடாது என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

(சென்னையில் உள்ள தியேட்டர்களில் பழைய ஹிட்டான படங்களை திரையிட்டு ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.)

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் இந்த ஸ்டிரைக் குறித்து பேசியதாவது…

இப்போது நடக்கும் ஸ்டிரைக்கை வேலைநிறுத்தம் என்று சொல்வதை விட சினிமா துறையை புதுப்பிக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

திங்கட்கிழமை டைரக்டர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை கேமராமேன்களுடன் பேச்சு வார்த்தை.

அதன்பிறகு நடிகர் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்துவோம். எங்கள் பிரச்சினைகளை தியேட்டர் அதிபர்கள் புரிந்து கொள்ளும்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

சினிமாதுறை சார்ந்த அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும். இது ஈகோ வினாலோ, அவசரப்பட்டோ எடுத்த முடிவு அல்ல.

இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும்போது ஒரு கஷ்டம் வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் போது இன்னொரு கஷ்டம் இருக்கிறது. நாங்கள் கேட்பது அடிப்படை வி‌ஷயங்கள்.

டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்குங்கள் என்று சொல்லும்போது அதை அவர்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். ஒரு வண்டி வாங்குகிறோம் என்றால் 36 தவணை அல்லது 48 தவணை இருக்கும்.

48-வது தவணைக்கு பிறகு எனக்கு ஒரு தெளிவு வரும். வண்டி எனக்கு சொந்தம். 49-வது மாதம் நான் கட்டத் தேவையில்லை. ஆனால் சினிமாவில் என்னவென்றால் நாங்கள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். கட்டக்கூடாத கட்டணத்தை இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறோம்.

இன்னொன்று, மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். பாப்கார்ன் செலவிலும், உணவு பொருட்கள் செலவிலும் விஷால் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்றால் நான் அதற்கு வரவில்லை.

மக்கள் சந்தோ‌ஷமாக வந்து படம் பார்க்க வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அது ரொம்ப ஆடம்பரமான வி‌ஷயமாக தெரியும்போது அதை எப்படி முறைப்படுத்தி அவர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முயற்சி.

இதுதொடர்பாக நிறைய வி‌ஷயங்களை நாங்கள் பேசுகிறோம். ஆன்லைன் முன்பதிவுக்கு 1 டிக்கெட்டுக்கு கூடுதலாக 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். நான் குடும்பத்துடன் படம் பார்க்க செல்லும்போது 1 டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதல் என்பது எனக்கு அதிகமாக தெரிகிறது.

அதைத்தான் சொல்கிறோம். ஏன் 30 ரூபாய் போடுகிறீர்கள், 5 ரூபாய் போடுங்கள். 25 ரூபாயை சலுகையாக கொடுங்கள். அவர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். இதைத்தான் நாங்கள் விண்ணப்பமாக வைக்கிறோம். இது அவர்களுடன் சண்டை போடுவதற்காக அல்ல.

ஏனென்றால் தயாரிப்பாளர்களால் முடியாது. இதையெல்லாம் செய்யும் போதுதான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். இதுபோல கிடைக்கும் சேமிப்பை தயாரிப்பாளர் இன்னொரு படம் எடுக்கத்தான் பயன்படுத்துவார்.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நாம்தான் 2 முறை வரி செலுத்துகிறோம்.

அதை 30 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்துக்கு கொண்டு வந்தார்கள். அதுவே இப்போது எங்களால் முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

ஜி.எஸ்.டி. உள்பட அனைத்து வரிகளையும் மக்கள் மீது திணிக்கும்போது டிக்கெட் விலை அதிகரிக்கிறது. அது பெரிய படங்களுக்கு தாங்குகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தாங்கவில்லை.

டிக்கெட் விற்பனை கம்ப்யூட்டர் மயமானால்தான் எத்தனைபேர் பார்த்துள்ளனர். என்பது எனக்கு தெரியவரும். தியேட்டர் அதிபர்கள் அந்த கணக்கை கொடுத்தால்தான் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க முடியும்.

இது ஈகோ சண்டை அல்ல. எங்களால் முடியவில்லை. இதை சரி கட்டிய பிறகுதான் தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு படம் எடுப்பதிலோ, வெளியிடுவதிலோ நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று நம்புகிறேன்.” இவ்வாறு விஷால் பேசினார்.

Its not Cinema Strike We are renovating Industry says Producers Council President Vishal

ப்ரிதிவிராஜின் ரணம் படத்தில் தாமோதர் கேரக்டரில் ரஹ்மான்

ப்ரிதிவிராஜின் ரணம் படத்தில் தாமோதர் கேரக்டரில் ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rahman Heavy Downpour Of Praises For Damodar’s Law Of Survivalநடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர்போனவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த “ துருவங்கள் பதினாறு “ திரைப்படம் தமிழ், மலையாளம் என நல்ல வெற்றியை பெற்றது. தற்போது அவர் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள “ ரணம் “ திரைப்படத்தில் நடித்துள்ளார். ப்ரிதிவிராஜும், ரஹ்மானும் நடித்துள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ரணம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் Trending – ஆனது குறிப்பிடத்தக்கது.

ரணம் திரைப்படத்தில் ரஹ்மான் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரணம் திரைப்படத்திலிருந்து ரஹ்மான் நடிப்பில் “ தாமோதரின் Law of Survival “ என்ற டீசர் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ரஹ்மான் மிகவும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் தோன்றி தனது கதாபாத்திரத்தை பற்றி கூறுவது இந்த டீசர் அமைந்துள்ளது.

இஷா தல்வார் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார்.

Actor Rahman Heavy Downpour Of Praises For Damodar’s Law Of Survival

கமலை சந்தித்தது ஏன்? ரஜினியை சந்திப்பீர்களா..? விஷால் விளக்கம்

கமலை சந்தித்தது ஏன்? ரஜினியை சந்திப்பீர்களா..? விஷால் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and kamal haasanவேலை நிறுத்த போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் விஷால் அவர்கள் கமல்‘ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.

அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஷால் கூறியதாவது…

சினிமா உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கமல்ஹாசன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் பக்க பலமாக இருந்துள்ளார்.

இப்போது ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் என்ன நடக்கிறது என்பதை கமலிடம் சொல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு.

சினிமாதுறை பிரச்சினைகளை நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையிலும் கமலிடம் சென்று சொல்வது எனது கடமை.

எதற்காக ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம். எந்தெந்த வி‌ஷயங்களுக்காக போராடுகிறோம் என்பதை விலாவாரியாக அவரிடம் தெரிவித்தேன்.

அவரது ஆதரவு வேண்டும் என்ற அடிப்படையில் நான் இதை சொல்லவில்லை. இதுபோன்ற நேரங்களில் அவருடைய ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும்.

இதுவரை ரஜினி அவர்களை சந்திக்கவில்லை. கண்டிப்பாக அவருக்கும் தகவல் தெரியப்படுத்துவோம்.” இவ்வாறு விஷால் கூறினார்.

மிஷ்கின்-சாந்தனு-பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் ஆஸ்கர் நாயகன்..?

மிஷ்கின்-சாந்தனு-பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் ஆஸ்கர் நாயகன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskin and shanthanuதுப்பறிவாளன்’ படத்தை இயக்கிய மிஷ்கின் தற்போது சூப்பர் டீலக்ஸ், ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து சாந்தனுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

நாயகிகளாக நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் படத்திற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சூட்டிங் மே மாதம் துவங்கவுள்ளது.

காலா ரிலீசுக்காக காத்திருக்கும் விஸ்வரூபம்-2

காலா ரிலீசுக்காக காத்திருக்கும் விஸ்வரூபம்-2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala and viswaroopam 2கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம்’ படம் மாபெரும் வெற்றியடைய ‘விஸ்வரூபம்-2’ படத்தை உருவாக்கினார் கமல்ஹாசன்.

இதில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சென்சாரில் விஸ்வரூபம்-2 படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனை முன்னட்டு அடுத்த ஏப்ரல் மாதம் இதன் பாடல்கள் வெளியிட உள்ளனர்.

ரஜினி நடித்த ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. எனவே அந்த படத்துக்கு பிறகு விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக்கால் ஒருவேளை காலா தாமதமானால் விஸ்வரூபம் 2 படமும் தள்ளிப் போகும் எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ‌ஷங்கர் டைரக்‌ஷனில் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவுள்ளார் உலகநாயகன்.

More Articles
Follows