விஐபி2 படத்திற்கு அதிகாலை காட்சிகள் ரத்து; காரணம் யார்.?

விஐபி2 படத்திற்கு அதிகாலை காட்சிகள் ரத்து; காரணம் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VIP2 movie early morning shows cancelledசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், விவேக், சமுத்திரக்கனி, கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

இப்படம் நாளை அகிலமெங்கும் வெளியாகிறது.

தனுஷ்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல்கள்படி அதிகாலை 5 மணிக்கு உள்ள காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னையை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

தமிழகமெங்கும் காலை 8 மணிக்குதான் முதல் காட்சி தொடங்கப்பட உள்ளது.

எனவே அதிகாலை காட்சி வேண்டாம் என தயாரிப்பாளர் தரப்பில் கேட்கப்பட்டது.

அதன்படி அதிகாலை காட்சியை ரத்து செய்துவிட்டோம்” என்றார்.

VIP2 movie early morning shows cancelled

 

 

முரசொலி பவளவிழாவில் கமல்-ரஜினி பங்கேற்றனர்

முரசொலி பவளவிழாவில் கமல்-ரஜினி பங்கேற்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal participated in Murasoli platinum jubilee celebrationsமுரசொலி நாளிதழின் பவளவிழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் முக. ஸ்டாலின் அழைத்திருந்தார்.

இதற்கான அழைப்பிதழில் நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் பெயர் இடம் பெற்றிருந்தது.

அதன்படி இன்று முரசொலி நாளிதழின் 75வது ஆண்டு விழா (பவளவிழா) சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

வைரமுத்து, ஸ்டாலின், கமல் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்திருக்க, ரஜினி பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருக்கிறார்.

இந்த விழாவில் ரஜினி பேசுவாரா? எனத் தெரியவில்லை.

Rajini Kamal participated in Murasoli platinum jubilee celebrations

பைசா நாயகி ஆராவின் அடுத்த படம் குரு உச்சத்துல இருக்காரு

பைசா நாயகி ஆராவின் அடுத்த படம் குரு உச்சத்துல இருக்காரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paisa fame Aaara next movie Guru Utchathula Irukaruதான் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஊர் பஞ்சாயத்து தலைவர் என்பதற்காக, தன் காதலியை பார்க்க தோணும்போதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தை பெரியதாக்கி, அதையே பஞ்சாயத்தாக கூட்டி, கலாட்டா செய்யும் கதாபாத்திரத்தில் குரு ஜீவா அறிமுகமாகும் படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’.

இப்படத்தில் கதாநாயகியாக ‘பைசா’ பட நாயகி ஆரா நடித்துள்ளார். மேலும், ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ஸ்ரீரஞ்சனி, மனோ, நமோ நாராயணன் ஆகியோர்கள் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.தண்டபாணி. இப்படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பில் எம்.தனசண்முகமணி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது. ஒரு முக்கிய காட்சியை படமாக்கும் போது, மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ அருகில் உள்ள அருவியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

லொக்கேஷன் பார்க்கும் போது அருவியில் வந்த தண்ணீர் படப்பிடிப்பின் போது அருவியில் தண்ணீர் வராததால், 70 லாரிகளில் தண்ணீர் வர வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அந்த அருவியில் நீர் வருவதை கண்டு, அங்குள்ள யானை ஒன்று தாகத்தை தீர்க்க அப்பகுதிக்கு வந்துள்ளது. யானையை பார்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர் மிரண்டிருக்கின்றனர்.

ஆனால், அந்த யானையோ படக்குழுவினரை தொந்தரவு செய்யாமல் நீரை குடித்து விட்டு சென்றது. அதன் பின் தக்க பாதுகாப்புடன் மீதிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

Paisa fame Aaara next movie Guru Utchathula Irukaru

Paisa fame Aaara next movie Guru Utchathula Irukaru

நாகார்ஜுனாவின் பிரமாண்ட நாயகன் படத்தில் ஆண்டாள் கேரக்டரில் அனுஷ்கா

நாகார்ஜுனாவின் பிரமாண்ட நாயகன் படத்தில் ஆண்டாள் கேரக்டரில் அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nagarjuna Anushka teams up for Brahmanda Nayaganபிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி ‘பிரமாண்ட நாயகன்.’

ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டது.

ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச்சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் எனலாம்.

இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 60 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளவரும் ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ்.

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

‘பாகுபலி’க்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார்.

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம், ராமா என்பவர் ஹாத்திராம் பாபாவாக மாறியது எப்படி, பாலாஜி என்று பெயர் வரக்காரணம், திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும் பல சந்தேக வினாக்களுக்கு ஏற்ற விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக அமைத்து தெளிவு படுத்தியுள்ளனர்.

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படம். விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

வசனம் பாடல்களை D. S. பாலகன் எழுதியுள்ளார். J. K. பாரவி கதை எழுத
கோபால்ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன் , எஸ்.பி.பி. சரண் , டாக்டர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம் , வி.வி. பிரசன்னா , ஜானகி ஐயர் , முகேஷ் , ஹேமாம்பிகா . பிரியா , ராஜேஷ் , கவிதா கோபி எனப் பலரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

தமிழகத் திரைகளில் இந்தப் ‘ பிரமாண்ட நாயகன் ‘ காட்சி அமைப்பின் விஸ்வரூப தரிசனம் தரும் விதத்தில் வெளியாகவுள்ளது.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் உலகமெங்கும் திரையிட இப்படத்தை ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்கள் s.துரைமுருகனும், B.நாகராஜனும் திட்டமிட்டுள்ளனர்.

Nagarjuna Anushka teams up for Brahmanda Nayagan

Nagarjuna Anushka teams up for Brahmanda Nayagan

விஜய்சேதுபதி இடத்தில் சிவகார்த்திகேயன்; விக்னேஷ்சிவன் புதுஐடியா

விஜய்சேதுபதி இடத்தில் சிவகார்த்திகேயன்; விக்னேஷ்சிவன் புதுஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and sivakarthikeyanவிக்னேஷ் சிவன் தற்போது சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தை தொடங்கினார் இவர்.

இதில் விஜய்சேதுபதியுடன் த்ரிஷா, நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது.

தற்போது அந்த கதையில் சிறிய மாற்றங்களைச் செய்துதான் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கவிருக்கிறாரம்.

ஞானவேல்ராஜா தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

தனுஷின் அடுத்த ஆசைகளையும் நிறைவேற்றுவாரா ரஜினி..?

தனுஷின் அடுத்த ஆசைகளையும் நிறைவேற்றுவாரா ரஜினி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and rajiniரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்கும் காலா படத்தை தயாரித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

அதில் காலா சூட்டிங் 60% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படம் அடுத்த 2018ஆம் ஆண்டு 2.0 படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளியாகும்.

மேலும், ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என தன் ஆசையை தெரிவித்துள்ளார் தனுஷ்.

மேலும் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ரஜினி படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கனவோடு பலர் காத்திருக்க, தனுஷ்க்கு அந்த வாய்ப்பை வழங்கினார் ரஜினி.

தன் மருமகன் தனுஷின் அடுத்தடுத்த ஆசைகளை ரஜினி நிறைவேற்றுவாரா? என்பதை பார்ப்போம்.

More Articles
Follows