விஜய் & தனுஷ் பட நடிகர் பிளோரண்ட் பெரேரா கொரோனாவினால் மரணம்

Florent Pereiraவிஜய்யின் ‘புதிய கீதை’ பட மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிளோரண்ட் பெரேரா.

இவர் ’கயல்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து மக்களிடம் பிரபலமானார்.

அப்படத்தை தொடர்ந்து ‘ராஜா மந்திரி’, ‘தொடரி’, ‘சத்ரியன்’, ‘தரமணி’, ‘கொடிவீரன்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் பல வருடங்களாக ஊடகத்துறையிலும் பணியாற்றி வந்துள்ளார் பெரேரா.

கலைஞர் தொலைக்காட்சியின் பொது மேலாளராக தற்போது பணியாற்றி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில், பிரபல குணச்சித்திர நடிகரும் கலைஞர் தொலைக்காட்சியின் பொது மேலாளருமான பிளோரண்ட் பெரேரா (Florent Pereira) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil actor Florent Pereira dies due to Corona

Overall Rating : Not available

Latest Post