தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியானது.
இப்படம் இன்றுவரை வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வரலட்சுமியின் கேரவன் டிரைவர் திருட்டுத்தனமாக ‘விஐபி2’ படத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளதாவது..
இப்போது தான் எனது கேரவன் ஓட்டுநர் கள்ளத்தனமாக ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.
கோபம் வந்து திட்டித் தீர்த்தேன். சினிமாவினால் லாபம் அடைபவர்களே இப்படி நடந்து கொண்டால் மற்றவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். பைரசியை நிறுத்துங்கள்.
இவ்வாறு வரலெட்சுமி பதிவிட்டுள்ளார்.
varu sarathkumarVerified account @varusarath
Jus caught my caravan driver watchin VIP2 online..blasted him..if ppl who make a living from films do this,jus imagine the rest #Stoppiracy