மலையாள சினிமாவிலும் கால் பதிக்கும் தனுஷ்

மலையாள சினிமாவிலும் கால் பதிக்கும் தனுஷ்

tovino thomasதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வெற்றி பவனி வருகிறார் தனுஷ்.

கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது மல்லுவுட் என்று அழைக்கப்படும் மலையாள சினிமாவிலும் நுழைகிறார்.

டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க நேஹா ஐயர் என்பவர் நாயகியாக நடிக்க உள்ள படத்தை தயாரிக்கிறாராம் தனுஷ்.

இப்படத்தை டாமினிக் அருண் என்பவர் இயக்குகிறார்.

வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

Dhanush to enter the Malayalam film industry

ரசிகர் தந்த அன்பு பரிசு; சூர்யாவுக்கு விஜய் நன்றி

ரசிகர் தந்த அன்பு பரிசு; சூர்யாவுக்கு விஜய் நன்றி

vijay and suriyaஓரிரு மாதங்களுக்கு முன், சிங்கம்3 படத்தின் விளம்பரத்திற்காக சூர்யா கேரளா சென்றிருந்தார்.

அப்போது சூர்யாவை ஒரு விஜய் ரசிகர் சந்தித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான இவர், தான் வரைந்த ஓர் ஓவியத்தை விஜய்யிடம் கொடுக்குமாறு சூர்யாவிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் சூர்யாவின் 2D என்டர்டெயிண்மெண்ட் நிறுவன இயக்குனர் ராஜ்சேகரபாண்டியன் அவர்கள் விஜய்யை சந்தித்து அந்த ஓவியத்தை கொடுத்துள்ளார்.

அந்த பரிசைப் பெற்றுக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றிகளை தெரிவித்தாராம்.

Vijay thanks Suriya for giving his fans art gift

‘காற்று வெளியிடை’ பாடல்கள், சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்

‘காற்று வெளியிடை’ பாடல்கள், சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்

Kaatru Veliyidaiமணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் காற்று வெளியிடை.

அதிதீ ராவ் ஹெய்தரி நாயகியாக நடிக்க, டெல்லி கணேஷ், ஆர் ஜே பாலாஜி, விபின் சர்மா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கார்த்தி பைலட்டாகவும், அதிதீ ராவ் ஹெய்தரி டாக்டராகவும் நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை மணிரத்னம் தயாரித்திருக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சென்சாரில், யு சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் தெலுங்கில் ‘செலியா’ என்ற பெயரில் வெளியாகிறது.

இப்படத்தின் இசையை வருகிற மார்ச் 20ஆம் தேதியும், படத்தை ஏப்ரல் 7ஆம் தேதியும் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Kaatru Veliyidai censored with U and movie release on 7th April 2017

‘தெறி’யை நெருங்கும் ‘விவேகம்’; தளபதியை முந்துவாரா தல.?

‘தெறி’யை நெருங்கும் ‘விவேகம்’; தளபதியை முந்துவாரா தல.?

Vijay Ajith Theri Vivegamமுன்பெல்லாம் ஒரு படத்தின் வசூலை மற்றொரு படத்துடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள்.

நாளடைவில் இது மாறி மாறி ட்ரைலர் ஹிட்டு, லைக்ஸ் உடன் ஒப்பிட்டார்கள்.

தற்போது பர்ஸ்ட் லுக்குடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வந்த விவேகம் பர்ஸ்ட் லுக்கை 20.5 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளார்களாம்.

ஆனால், விஜய்யின் தெறி பர்ஸ்ட் லுக்கை 21.9 ஆயிரம் பேர் ஷேர் செய்திருந்தனர்.

இனி வரும் நாட்களில் தளபதியை தல முந்துவாரா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Vedhalam first look poster beat Theri record

‘பாகுபலி’ அலையில் காணாமல் போன கபாலி-தங்கல்-சுல்தான்

‘பாகுபலி’ அலையில் காணாமல் போன கபாலி-தங்கல்-சுல்தான்

Kabali Baahubaliபாகுபலி 2 படத்தின் ட்ரைலர் நேற்று முன் தினம் 4 மொழிகளில் வெளியானது.

மிகப்பிரம்மாண்டமாக உருவான ட்ரைலர் அனைவருக்கும் பிடித்திருந்தது.

இதனால் அனைத்து தரப்பு மக்களும் இதனை கண்டுகளித்து இணையத்தை ஸதம்பிக்க வைத்தனர்.

ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மேலும் குறைந்த மணி நேரங்களில் 5 லட்சம் லைக்ஸுகளை பெற்று உலக சாதனை செய்துள்ளது.

இதன் மூலம் கபாலி, தங்கல், சுல்தான் ஆகிய அனைத்து பட சாதனைகளையும் பாகுபலி-2 முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Baahubali trailer break records of Kabali Dangal Sultan

சசிகுமார்-முத்தையா கூட்டணியில் ஹன்சிகா.?

சசிகுமார்-முத்தையா கூட்டணியில் ஹன்சிகா.?

sasi kumar Hansikaகொம்பன், மருது படங்களை தொடர்ந்து முத்தையா தன் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இப்படத்தில் இவரின் ‘குட்டிப்புலி’ நாயகன் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

பொறி வீரன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு நாயகி தேடும் படலம் நடைபெற்றது.

இந்நிலையில் இதில் ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இப்படத்தையும் வழக்கம் போல கிராமத்து பின்னணியில் படமாக்கவிருக்கிறார் இயக்குனர் முத்தையா.

‘கம்பெனி புரடொக்ஷன்ஸ் சார்பில் சசிகுமாரே இப்படத்தை தயாரிக்கிறாராம்.

Hansika to Pair up with Sasikumar for Pori Veeran

More Articles
Follows