விஐபி2 ரிலீஸில் மாற்றம்; ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

விஐபி2 ரிலீஸில் மாற்றம்; ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VIP2 movie release postponed from 28 July 2017சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

ஷான் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, கஜோல், விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில், இப்படத்தை தனுஷ் பிறந்தநாளான ஜீலை 28ஆம் தேதியில் வெளியிடவிருந்தனர்.

ஆனால், தற்போது இதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்பட்டாலும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை.

தனுஷ் பிறந்தநாளில் அவரின் புதிய படத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை அளிக்கும்.

VIP2 movie release postponed from 28 July 2017

ரஜினி-விஜய் மாஸ் அஜித்துக்கு இல்லையா? தெலுங்கு விவேகம் டிசைன் மாற்றம் ஏன்?

ரஜினி-விஜய் மாஸ் அஜித்துக்கு இல்லையா? தெலுங்கு விவேகம் டிசைன் மாற்றம் ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith starring Telugu Vivekam first look posterசத்யஜோதி தயாரித்து, சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படத்தின் தெலுங்கு போஸ்டர் மற்றும் டீசரை சற்றுமுன் சரியாக 12.00 மணிக்கு இன்று ஜீலை 20ஆம் தேதி வெளியிட்டனர்.

தெலுங்கிலும் இப்படத்திற்கு விவேகம் என்றே பெயரிட்டுள்ளனர்.

ஆனால் தமிழ் விவேகம் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் டிசைன்களில் அஜித் மட்டுமே அதில் இடம் பெற்றிருந்தார்.

அதற்கு முக்கிய காரணம் அஜித்துக்கு தமிழகத்தில் இருக்கும் மாஸ்தான் காரணம்.

ஆனால் தெலுங்கு விவேகம் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித்துடன் காஜல், விவேக் ஓபராய், அக்ஷராஹாசன் ஆகியோர் உள்ளனர்.

அப்படியென்றால், தெலுங்கில் அஜித்துக்கு அந்தளவு மாஸ் இல்லையா? என விவரமறிந்தவர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில் வெளியான காலா படத்தின் அனைத்து போஸ்டரிலும் எல்லா மொழியில் ரஜினி மட்டுமே இடம் பெற்றிருந்தார்.

அதுபோல் மெர்சல் (ADIRINDHI) படத்தின் தெலுங்கு போஸ்டரில் விஜய் மட்டுமே இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith starring Telugu Vivekam first look poster

தானா சேர்ந்த கூட்டம் பர்ஸ்ட் லுக் போட்டோ சூட் தகவல்கள்

தானா சேர்ந்த கூட்டம் பர்ஸ்ட் லுக் போட்டோ சூட் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thaana Serndha Kootam first look photo shoot updatesசூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டாலும், இதன் பர்ஸ்ட் லுக்கை சூர்யா பிறந்தநாளில் (ஜீலை 23) வெளியிட உள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போட்டோ சூட்டை சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா பட்டறையில் நேற்று நள்ளிரவில் நடத்தியுள்ளனர்.

இதில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் கலந்துக் கொண்டனர்.

எனவே பர்ஸ்ட் லுக்கில் இருவரும் ஜோடியாக இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Thaana Serndha Kootam first look photo shoot updates

ஊருக்கே தெரிஞ்ச ஊழலுக்கு ஆதாரம் வேணுமாமில்ல… கமல் பதிலடி

ஊருக்கே தெரிஞ்ச ஊழலுக்கு ஆதாரம் வேணுமாமில்ல… கமல் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal speechபிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சை தொடர்பான பேட்டியில் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டதை கமல் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக அமைச்சர்களும் பலரும் ஆதாரம் இருக்கா? நீங்க வரியை சரியாக கட்டியிருங்களா? அதை ஆய்வு செய்யட்டுமா? என மிரட்டல் பாணியில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘முடிவெடுத்தால் யாமே முதல்வர்’ உள்ளிட்ட கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதை அப்படியே இங்கே தருகிறோம்….

இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட.

ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஒலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.

ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்.

தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.

நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளவீசுபவர்கள்…. ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்…. என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும் சிரிப்பையும் வரவைக்கிறது.

ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம்… அமைச்சர் கட்டளை இது. ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றி ஓலம் அதற்குள் மறந்திருந்ததால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி?

இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக்கொண்ட படி ஆதாரங்களை மக்களே இணைய தளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோள்.

நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள். தற்கால அமைச்சர்களை விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சம் வரும்.

அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ… பொதுத்துதான் பார்க்கவேண்டும். இத்தனை லட்சம் பேரை கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை .
நிற்க….. செய்தி சரியாகப் புரியாதவங்களுக்கு…….

“ஊழல் இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல..? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சி போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க”

எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன்.

சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னை போல் வெகு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர்.

இது என் குரல் துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.

மக்கள் மந்தைகள் அல்லர்
மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள்.
விரைவில் அது கேட்கும். தெளிவாக

என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன். துறைசார்ந்த அமைச்சர்கள் முகவரிக்கான இணைப்பையும் அதனுடன் இணைத்துள்ளார்.

http://www.tn.gov.in/ministerslist

கமலின் இந்த உச்சக்கட்ட வார்த்தை போர்? இன்னும் எப்படியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ? தெரியவில்லை.

Kamalhassan statement about TN Minister corruption records

kamal letter

அரசியல் களம் காண விரைவில் ரஜினி-கமல் சந்திப்பு..?

அரசியல் களம் காண விரைவில் ரஜினி-கமல் சந்திப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and kamal haasanசில நாட்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்தபோது போர் வரும்போது அரசியல் களத்தில் சந்திப்போம் என்பது போல தன் அரசியல் வருகையை கூறி சென்றார் ரஜினிகாந்த்.

இவரைத் தொடர்ந்து ட்விட்டர் மற்றும் பிக்பாஸ் சர்ச்சைகளால், கமலும் தன் அரசியல் வருகை குறித்து சூசமாக தெரிவித்துள்ளார்.

புறப்படு தோழா, முடிவெடுத்தால் முதல்வர் என்ற தோனியில் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

இந்நிலையில் 40 ஆண்டுகால நெருங்கிய நண்பர்களாக இருக்கும் கமலும் ரஜினியும் விரைவில் இதுகுறித்து சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் செட் அமைந்துள்ள ஸ்டுடியோவில்தான், ரஜினி நடிக்கும் ‘காலா’ பட தாராவி செட்டும் போடப்பட்டுள்ளதாம்.

எனவே படப்பிடிப்புக்காக இருவரும் அங்கே வரும்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேச வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் 2.ஓ சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார்

மீண்டும் 2.ஓ சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthரஜினி நடிப்பில் ஷங்கர் பிரம்மாண்டமாக 3டியில் இயக்கியுள்ள படம் ‘2.0’.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது.

இதில் உள்ள ஒரு பாடல் ஒன்றை ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்க இருக்கிறார்களாம்.

தற்போது அப்பாடலில் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிரம்மாண்டமான அரங்கில் சுமார் 12 நாட்கள் இப்பாடலை படமாக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக எமி ஜாக்சன் சுமார் 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளாராம்.

பாஸ்கோ நடன இயக்குநராக பணிபுரிய உள்ள இப்பாடலுக்கு அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலின் இசையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows