தனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி

தனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush soundarya Rajini and kajol vip 2கலைப்புலி தாணு உடன் இணைந்து தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2.

சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சீன்ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனை தனுஷ் பிறந்தநாளான ஜீலையில் 28இல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்திற்காக ஒரு புரொமோசன் பாடல் ஒன்றை மும்பையில் படமாக்கவிருக்கிறார்களாம்.

அதில் தனுஷ் மற்றும் கஜோல் ஆட, டியோ பாஸ்கோ நடன அமைக்கிறார்.

Soundarya Rajini making promo song for Dhanushs VIP2

ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு; ஆச்சரியமளிக்கும் சுவாரஸ்ய தகவல்கள்

ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு; ஆச்சரியமளிக்கும் சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Surprise facts happening at Rajinikanth fans meetingகடந்த மே 15ஆம் தேதி முதல், தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்றுடன் நான்கு நாட்கள் ஆகியுள்ளது. அந்த சந்திப்பின் நடந்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே பதிவிடுகிறோம்.

எல்லா ரசிகர்களுக்கும் பார் கோடு கொண்ட அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காலை முதலே வந்துவிடுகின்றனர்.

ரசிகர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சேர்களில் மட்டுமே அவர்கள் அமர அனுமதிக்கப்படுகின்றனர்.

மண்டபத்திற்குள் வந்தபிறகு வெளியே செல்ல அனுமதியில்லை.

சில ரசிகர்கள் ரஜினியிடம் காதோரம் ரகசியம் சொல்கின்றனர்.

அதனை ஆர்வமுடன் கேட்டுக் கொள்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினியை பார்த்தும் அவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆர்ப்பரிக்கின்றனர்.

தலைவா வா, தலைமையேற்க வா.. வருங்கால முதல்வர் என்று கோஷமிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ரசிகருடன் ஒரு குழந்தை வர அனுமதி தரப்பட்டுள்ளது.

குழந்தைகளை ஆரத்தழுவி தன் மடியில் வைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

சில ரசிகர்கள் நின்றுக் கொண்டும், சில ரசிகர்கள் உட்கார்ந்துக் கொண்டும், சில ரசிகர்கள் ரஜினியை தொட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

சில ரசிகர்கள் தன்னுடன் கொண்டு வரும் மோதிரம், செயின், வாட்ச், ருத்ராட்சை மாலை ஆகியவற்றை ரஜினியிடம் கொடுத்து அணிவிக்க சொல்கின்றனர். அவரும் அசராமல் செய்து வருகிறார்.

ஒவ்வொரு ரசிகர்கள் மேடைக்கு வரும்போது அவர்களை இன்முகத்துடன் இருகரம் கூப்பி வரவேற்கிறார்.

சில ரசிகர்கள் ஆர்வமிகுதியால் ரஜினி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகின்றனர். காலில் விழக்கூடாது என முன்பே தெரிவித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

சந்திப்பின் போது அறுசுவை உணவுகள் தரப்படுகிறது.

 

rajini fans meet stills

‘என் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது; ஆனால்…’ ரஜினி ஓபன் டாக்

‘என் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது; ஆனால்…’ ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini fans meetingகடந்த நான்கு நாட்களாக தன் ரசிகர்களை ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார்.

இதற்காக மாவட்டதோறும் உள்ள நிர்வாகிகள் சென்னைக்கு வந்துள்ளனர்.

இன்று தஞ்சை, கடலுர் மாவட்ட ரசிகர்கள் வந்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து ரஜினி பேசியதாவது….

என் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதே தவிர அவர்களது உற்சாகம் அந்த துடிப்பு குறையவில்லை.

அவர்களை சந்தித்து வருவது இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

தீய பழக்கங்கள் இல்லாமல் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வளவு சீக்கிரம்இந்த சந்திப்பு முடிகிறதே என நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.

அடுத்த சந்திப்பு விரைவில் நடைபெறும். அதற்கான தேதியை பின்னர் அறிவிப்போம். என்று ரஜினிகாந்த பேசினார்.

அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

Superstar Rajinikanth open talk about his fans meeting

rajini fans baba symbol

அஜித் 58 படத்தின் அறிவிப்பு தேதி தகவல்கள்

அஜித் 58 படத்தின் அறிவிப்பு தேதி தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam Ajithஅஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி தென்னிந்தியளவில் மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது.

விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் முதல் வாரம் வெளியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை செப்டம்பரில் வெளியிடுவார்கள் என சொல்லப்படுகிறது.

அதுவும் நிச்சயமாக செப்டம்பரில் உள்ள 4 வியாழக்கிழமைகளில் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிகிறது.

இப்படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனுக்காக காத்திருக்கும் சூர்யா; ஏன் தெரியுமா..?

கமல்ஹாசனுக்காக காத்திருக்கும் சூர்யா; ஏன் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya is waiting for Kamalhassans Big Boss TV Showதன் படங்களில் வித்தியாசமான முயற்சிகளை சூர்யா மேற்கொள்ளும் போது எல்லாம் கமல்ஹாசனின் ஆலோசனை கேட்டு வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் தான் கமலின் நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாக தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சூர்யா.

அந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இது பற்றிய ஒரு முன்னோட்டத்தை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது.

இதனை கமலும் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அதனை பார்த்த சூர்யா, கமல் சார். உங்கள் நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற ஜீன் 18 முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.

அந்த நிகழ்ச்சிகான விதிமுறைகள் இதோ…

இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாள்கள் தங்க வேண்டும். போன், இணையம், கடிகாரம், நாளிதழ்கள் இப்படி எந்த தொலைத்தொடர்பு சாதனங்களும் அந்த வீட்டில் இருக்காது.
வீட்டின் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். யார் நூறு நாள்கள் தங்கி இந்தப் போட்டியில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தான் போட்டியின் கான்செப்ட்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணி

சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணி

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl
Suriya Sivakumar Retweeted Kamal Haasan

Wow!! So looking forward to the show sir..!!

விஜய் பாடிய ‘பைரவா’ பாட்டு படைத்த சாதனை

விஜய் பாடிய ‘பைரவா’ பாட்டு படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sung a song in Bairavaa made 100M views in Youtubeஒரு சில நடிகர்கள் மட்டுமே சினிமாவில் பாடல்களை பாடி வருகின்றனர்.

அதில் முக்கியமானவர் இளைய தளபதி விஜய்.

இவர் நடித்து இறுதியாக வெளியான படம் பைரவா.

பரதன் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற பாப்பா பாப்பா நான் உன் ஆளப்பா என்ற பாடலை விஜய் பாடியிருந்தார்.

வைரமுத்து இப்பாடலை எழுத விஜய்யுடன் பிரியதர்ஷினி இணைந்து பாடியிருந்தார்.

இந்த பாடலின் காட்சி வீடியோ கடந்த 2017 ஜனவரி மாதம் 17ஆம் தேதி லஹரி மியூசிக் நிறுவனத்தால் யூடிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது வரை இப்பாடலை 1 கோடி (100 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து இருக்கிறார்களாம்.

எனவே இதனை விஜய் ரசிகர்கள் #THALAPATHYVoiceHits100MViews என்ற ஹேஷ்டேக் கிரியேட் செய்து டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Vijay sung a song in Bairavaa made 100M views in Youtube

More Articles
Follows