தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டாப் ஹீரோக்களின் படங்கள் தயாராகும்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கையோ டீசரையோ அந்த ஹீரோவின் பிறந்த நாளில் வெளியிடுவார்கள்.
இது அவர்களது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும் என்பதால், இதை சில தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
அண்மையில் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று விவேகம் படத்தின் செகண்ட் லுக் வெளியானது.
அதுபோல் விஜய் பிறந்தநாளில் (ஜீன் 22ஆம் தேதி) தளபதி 61 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து வருகிற ஜீலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளில் விஐபி 2 படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் வருகிற மே 19ஆம் தேதி நடிகரும் தயாரிப்பாளருமான ஆர். கே. சுரேஷ் தன் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
அன்றைய தினத்தில் அவர் நடித்துள்ள வேட்டை நாய் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் பாலா வெளியிடுகிறார்.
‘மன்னாரு’ பட இயக்குனர் ஜெய்சங்கர் இயக்கும் இப்படத்தில் சுபிக்ஷா நாயகியாக நடித்து வருகிறார்.
Vettai Naai first look will be released by Bala on RK Suresh Birthday