அடுத்த பட பணிகளை தொடங்கினார் சௌந்தர்யா ரஜினி

அடுத்த பட பணிகளை தொடங்கினார் சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanthரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்துள்ள விஐபி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் சௌந்தர்யா ரஜினி.

இதில் விஐபி2 படம் அடுத்த ஜீலை மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று அறிவிக்கப்பட்ட படத்தின் பணிகளை தொடங்கிவிட்டாராம்.

புதுமுகங்கள் நடிக்கவுள்ளதால் அதற்கான தேர்வு பணிகளில் அவர் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் அப்பட அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். அந்த தகவல்கள் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினி; நீங்களும் நடிக்கனுமா?

சூர்யா படத்தில் நயன்தாரா பாடலை விக்னேஷ் சிவன் எழுதினாரா?

சூர்யா படத்தில் நயன்தாரா பாடலை விக்னேஷ் சிவன் எழுதினாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaவிக்னேஷ் சிவன் இயக்கம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

விரைவில் இப்பட போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் திருமணம் பற்றிய ஒரு பாடலை இயக்குனரே எழுதியிருக்கிறாராம்.

இதன் வரிகள் அவருடைய சொந்த வாழ்க்கை அனுபவத்தை பிரதிபலிப்பது போல உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நயன்தாரா சம்பந்தப்பட்ட நினைவுகளின் தாக்கம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் மோத தயாராகும் ஜிவி. பிரகாஷ்

சிவகார்த்திகேயனுடன் மோத தயாராகும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan GV Prakashமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதே நாளில் பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்துள்ள நாச்சியார் படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan and GV Prakash movie clash on Ayudha Pooja Holidays

ஸ்ரியா ரெட்டியின் அண்டாவுக்கு விஜய்சேதுபதி வாய்ஸ்

ஸ்ரியா ரெட்டியின் அண்டாவுக்கு விஜய்சேதுபதி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi given voice over to Anda character in Andava Kaanom movieஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’.

ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார்.

இப்ப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அண்டா வருகிறது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார்.

அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அத்தோடு ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினர்.

என் சினிமா கேரியரில் தெரிந்தோ, தெரியாமலோ ஆரம்பத்தில் இருந்தே சதீஷ்குமாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அவர் மாதிரி ஒரு படத்தை கொண்டு சேர்ப்பது என்பது யாராலும் முடியாது.

தேசிய விருதுக்கு படங்களை அனுப்பி, அவற்றிற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவது என்பது அவரால் மட்டும் தான் முடியும். அவரை பின்பற்றி தான் தர்மதுரை படத்துக்கு தேசிய விருது பெற்றோம்.

எதிர் அணியில் நான் இருந்தால் கூட என் நலனுக்காக யோசிப்பவர் தான் சதீஷ்குமார் என்றார் ஆர்கே சுரேஷ்.

சென்னைக்கு சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தை எடுத்தேன். அதை தணிக்கை குழுவில் கூட வரவேற்கவில்லை.

அந்த நேரத்தில் மிகவும் தைரியமாக அந்த படத்தை வாங்கி வெளியிட்டார். பணத்துக்காக அந்த படத்தை வெளியிடவில்லை, நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் வெளியிட்டார்.

நல்ல சினிமா கொடுக்க தமிழ் சினிமாவில் அவர் போல சிலர் தான் இருக்கிறார்கள், அவர் தொடர்ந்து படம் தயாரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார் இயக்குனர் யுரேகா.

ஸ்ரியா ரெட்டியை தமிழ் சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி என சொல்லலாம். இந்த மாதிரி படங்களை தைரியத்தோடு எடுக்க சதீஷ்குமாரால் தான் முடியும்.

யார் அதிக இயக்குனர்களை அறிமுகப்படுத்துவது என்ற போட்டி அவருக்கும் எனக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும் அதில் எனக்கு முன்னால் சென்று கொண்டேயிருக்கிறார் சதீஷ் என்றார் மனோபாலா.

ஜேஎஸ்கே சாரின் கணிப்பு எப்போதும் தவறியதேயில்லை. கூட மேல கூட வச்சி பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகும் என அப்போதே சொன்னார். அது நடந்தது. சினிமா தெரிந்த ஒரு தயாரிப்பாளர் என்றார் இயக்குனர் பாலகிருஷ்ணன்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை நிறைய பேர் பார்த்தார்கள், நிறைய காட்சிகளை கட் செய்ய சொன்னார்கள். யாரும் படத்தை வாங்கவில்லை. படத்தை பார்த்த சதிஷ்குமார் சார் கட் எதுவும் செய்ய தேவையில்லை, அப்படியே ரிலீஸ் செய்யலாம்னு சொன்னார்.

அதோடு பொய்யாக 20 நிமிடம் கட் செய்து விட்டோம் என சொல்லி தான் படத்தை ரிலீஸ் செய்தார். அது சரியான விதத்தில் மக்களை சென்றடைந்தது. ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பது ஒரு இயக்குனருக்கு எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்பது இயக்குனர்களுக்கு மட்டுமே தெரியும் என உணர்வுப் பூர்வமாக பேசி விட்டு போனார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம், இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு திமிரு பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார்.

நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேரா ஷூட்டிங்க்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது என்றார் நாயகி ஸ்ரியா ரெட்டி.

எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டை வைத்து படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்து படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது பெரிய சாதனை.

அந்த வகையில் ஜேஎஸ்கே மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். ஒரு படத்தை எடுத்து விட்டு ரிலீஸுக்கு காத்திருக்கும் இயக்குனர்களுக்கு அதன் தயாரிப்பாளரோடு முரண் நிச்சயம் இருக்கும்.

ஆனாலும் ஜேஎஸ்கே சதீஷ்குமாருடன் அந்த முரண் நிச்சயம் எங்களில் யாருக்குமே இருக்காது. என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக சொல்லி நம்மை சமாதானப்படுத்தி விடுவார்.

தரமணி படத்துக்கு 14 கட் கொடுத்து யு/ஏ சான்றிதழ் கொடுக்க முன் வந்தனர் தணிக்கை குழுவினர். ஆனால் கட் வாங்காமல் ஏ சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்தார் சதீஷ். அவரை போல ஒரு தயாரிப்பாளரை பார்க்க முடியாது.

அண்டாவுக்கு பல உள் அர்த்தங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றார் இயக்குனர் ராம்.

இயக்குனர் வேல்மதி ஒரு கிராமத்தில் இருக்கும் 300 பேரை நடிக்க வைத்து எடுக்கப் போகிறேன் என சொன்னார். அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார் இயக்குனர்.

இந்த மாதிரி ஒரு கதை என்று சொன்னவுடன் முதலில் நாங்கள் நடிக்க கேட்டுப் போனது ஸ்ரியா ரெட்டியை தான். என் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு நிச்சயம் தேசிய விருது பட்டியலில் இந்த அண்டாவ காணோம் இடம் பிடிக்கும்.

இயக்குனர் ராமின் தரமணி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும். தலயோட நாங்களும் கெத்தா வரோம் எனப் பேசினார் தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார்.

இயக்குனர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கார்த்திக் ரிஷி, ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் வெங்கட் சுபா, ஜாஸ் சினிமாஸ் கண்ணன், தயாரிப்பாளர் லியோ விஷன் ராஜ்குமார், ஆல்பர்ட், நடிகர் இளையராஜா, வினோத், நடிகை நவீனா, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பாடலசிரியர் மதுரகவி, இயக்குனர் வேல்மதி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்.

Vijay sethupathi given voice over to Anda character in Andava Kaanom movie

shriya reddy lakshmi ramakrishnan

இளைஞர்களுக்காக கோவாவில் உருவான ‘இவளுக இம்சை தாங்க முடியல’

இளைஞர்களுக்காக கோவாவில் உருவான ‘இவளுக இம்சை தாங்க முடியல’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iimt 1சமூக ஊடகங்கள் மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா புறப்படுகிறான் நாயகன்.

அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும் நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது.

இப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல், ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இவர்களில் சக்திவேல் ‘கந்தகோட்டை’, ‘ஈகோ’ படங்களை இயக்கியவர், அவரிடம் பணிபுரிந்த வி.என். ராஜ சுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார் இவர் ‘நான் சிவனாகிறேன்’ படத்தில் நாயகனாக நடித்தவர்.

பாலாவின் இயக்கத்தில் ‘பரதேசி’படத்தில் அதர்வாவுடன் நடித்தவர். நாயகியாக சஹானா நடித்துள்ளார்.

விஜய் டிவியின் ‘ கனாக்காணும் காலங்கள்’ புகழ் சிவகாந்த் முழு நீள காமெடியனாக வந்து கலகலப்பூட்டிக் கலக்குகிறார்.

முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளது. கோவா நகரம் அதன் தெருக்கள், சாலைகள் என45 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

மற்ற எந்தப் படமும் காட்டாத கோவாவின் பல பகுதிகளில் சிரமப் பட்டுப் படப்பிடிப்பு நட்த்தியுள்ளனர்.

இப்படம் முழுக்க இளைஞர்களை மையப் படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் ஆதிக்கம் கொண்ட இப்படத்தில் வயதான பாத்திரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

இது ஒரு முழு நீள ட்ராவல் காமெடிப் படம்.

ஏ.வி. வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலேசியப் பாப் இசைக் கலைஞர் கேஷ் வில்லன்ஸ் இசையமைத்துள்ளார்.

எடிட்டிங் வெங்கட்ரமணன். இவர் ‘மிருதன் ‘படத்தின் எடிட்டர். நடனம் காதல் கந்தாஸ்.

படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. பாடல்களை விவேகா மற்றும் மணி வில்லன்ஸ் எழுதியுள்ளார்கள்.

பாடல்களை இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் உருவாக்கியுள்ளார்கள்.

தற்போது இறுதிக்கட்ட மெருகேற்றும் பணியில் இருக்கும் ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘ படம், ஜூலை இறுதியில் வெளியாக இருக்கிறது.

ரம்ஜான் தினமான நேற்று இப்படத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Ivaluga Imsai Thanga Mudiyala teaser and movie release updates

iimt 2

நேற்று விமானம்; இன்று ராட்சத பலூன்; பறக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி

நேற்று விமானம்; இன்று ராட்சத பலூன்; பறக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini akshya 2pointo balloonதமிழ் சினிமாவின் புகழை உலகளவில் கொண்டு சென்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இவர் நடித்த கபாலி படம் கடந்தாண்டு வெளியானபோது இந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு விமானத்தில் வரைந்து விளம்பரம் செய்திருந்தார் கலைப்புலி தாணு.

இந்நிலையில் அதனை மிஞ்சும் வகையில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் விளம்பரத்தை ராட்சத பலூனில் வரைந்து லாஸ் ஏஞ்சலஸ் ஹாலிவுட்டில் பறக்கவிட்டுள்ளனர் லைக்கா நிறுவனத்தினர்.

இதை லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளிலும் பறக்கவிடப் போகிறார்களாம்.

மேலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக்காற்று பலூனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.

நாடு முழுவதும் உள்ள பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் கூறியுள்ளதாவது…

இப்படத்தை நாங்கள் இந்தியத் தயாரிப்பாக பார்க்கவில்லை ஹாலிவுட் படமாக பார்க்கிறோம்.

எனவேதான் இந்த 100 அடி உயர வெப்பக் காற்று பலூனுக்கு 8 மாதங்கள் முன்பாக ஆர்டர் செய்துவிட்டோம்.” என்று தெரிவித்தார்.

2Point0 movie promotions on Hot Air Balloon at Hollywood

rajini kabali flight

More Articles
Follows