‘கபாலி யோகி’யை சரோஜா பிரேக் செய்வாள்… தன்ஷிகா

‘கபாலி யோகி’யை சரோஜா பிரேக் செய்வாள்… தன்ஷிகா

Actress Dhansikaமீரா கதிரவன் தயாரித்து இயக்கியுள்ள விழித்திரு படம் மார்ச் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதில் விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா, வெங்கட்பிரபு நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசும்போது…

இப்படத்தில் நான் சரோஜா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன்.

இது கபாலி படத்தில் நான் நடித்த யோகி கேரக்டரை உடைக்கும்.

அந்தளவு இந்த கேரக்டர் பவர்புல். இயக்குனர் மீரா கதிரவனுக்கு நன்றி.” என்று பேசினார்

பட புரோமோஷனுக்கு அஜித் வரவேண்டும் – மீரா கதிரவன்

பட புரோமோஷனுக்கு அஜித் வரவேண்டும் – மீரா கதிரவன்

ajith and meera kathiravanஅவள் பெயர் தமிழரசி என்ற தரமான படத்தை இயக்கியவர் மீரா கதிரவன்.

இவர் தயாரித்து இயக்கியுள்ள விழித்திரு படம் மார்ச் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதில் விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா, வெங்கட்பிரபு நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பேசும்போது…

இந்த நிகழ்ச்சிக்கு விதார்த் வரவில்லை. முன்பு ஒருமுறை அஜித்தின் வீரம் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

நான் இப்போது தயாரிப்பாளர் ஆகிவிட்டதால் தயாரிப்பாளரின் வலி அதிகமாக தெரிகிறது.

அஜித்துக்கு இமேஜ் இருக்கலாம். ஆனால் அவரும் படத்தின் ப்ரோமோஷனுக்கு வரவேண்டும்.

ஒரு படம் 3 நாட்கள் மட்டுமே ஓடுகிறது. எனவே நடிகர்கள் பட விளம்பரத்திற்கு வரவேண்டும். என்று பேசினார்

ரஜினி இடத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு பாட்ஷா எச்சரிக்கை

ரஜினி இடத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு பாட்ஷா எச்சரிக்கை

Baashhaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 160 படங்களில் நடித்துவிட்டார்.

அவரின் 40 ஆண்டு கால சினிமா கேரியரில் எவராலும் மறக்க முடியாத படம் ‘பாட்ஷா’.

அதுபோன்ற படத்தை தன்னால் இனி தரமுடியாது என்று ரஜினியே அடிக்கடி கூறிவருகிறார்.

இப்படம் 22 வருடங்களுக்கு பிறகு தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஓரிரு தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது.

இதே படம் முதல் முறை வெளியான சமயத்தில் எப்படி ஒரு பரபரப்பு கொண்டாட்டம் இருந்தத்தோ, அதுபோல் தற்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஓப்பனிங் வசூலில் மற்ற புதிய படங்களுக்கு சவால் விட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் 110 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் ரூ.40,16,000 வசூல் செய்துள்ளதாம். இது கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகமே பார்த்த ஒரு திரைப்படம் பாட்ஷா.

22 வருடங்களுக்கு பின்பு வந்தும், இப்படி வசூல் வேட்டை செய்து வருவதால், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு இது பாட்ஷா தரும் எச்சரிக்கை பாடம் என கோலிவுட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘விஷாலே.. உன் விஷமத்தனத்தை நிறுத்து…’ தாணு ஆவேசம்

‘விஷாலே.. உன் விஷமத்தனத்தை நிறுத்து…’ தாணு ஆவேசம்

Vishal Producer Thanuதயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தற்போது தாணு இருக்கிறார்.

வருகிற தேர்தலில் அப்பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார்.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்புகளில் தயாரிப்பாளர்கள் குறித்து தரக்குறைவாக விஷால் பேசியதாகக் கூறி, இன்று நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டனர் தயாரிப்பாளர்கள்.

கலைப்புலி தாணு, ராதாகிருஷ்ணன், டி சிவா, ஜேஎஸ்கே, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது விஷாலின் நடவடிக்கைகள், பேச்சுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முன்னணி தயாரிப்பாளரும், இப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி தாணு, விஷால் இத்துடன் தனது விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

அவர் பேசுகையில், ‘தம்பி விஷால்…. தயாரிப்பாளர்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்… அவர்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

1200 உறுப்பினர்களுடன் மிக மரியாதைக்குரிய அமைப்பாக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்க நீ யார்? என்ன தகுதி இருக்கிறது?

உன்னால் உன் தந்தை தயாரிப்பாளர் ஜிகே ரெட்டிக்கே அவமானம். உன்னால் எத்தனை தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள்… நினைத்துப் பார்த்ததுண்டா?

யாரிடமும் கை நீட்டி நிற்காத செல்லமே தயாரிப்பாளர் உன்னால் பட்ட கஷ்டங்கள் நினைவில்லையா? மத கஜ ராஜா என்ற படத்தை எடுத்துவிட்டு நடுத் தெருவுக்கு வந்துவிட்ட ஜெமினி நிறுவனத்தை நினைத்துப் பார்…

இளையதளபதி என விஜய்க்குப் பட்டம் சூட்டினால், நீ புரட்சித் தளபதி என்று போட்டுக் கொள்கிறாய்… அவர் புலி என்று படமெடுத்தால், நீ பாயும் புலி என்று படமெடுக்கிறாய்.. அவ்வளவு விஷமத்தனம்… கெட்டம் எண்ணம்.

கண்ணியமான மனிதர் நாசர் அவர்களே… இந்த விஷால் மீது நடவடிக்கை எடுங்கள். அல்லது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இந்தத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்படும் நாளன்று தெரியும், இந்த விஷாலின் லட்சணம் என்ன என்பது.

அவருக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நப்பாசை. மக்கள் உங்களை ஓட ஓட விரட்டியடிப்பாரகள்,” என்றார்.

பிரகாஷ் ராஜ் பற்றிக் கூறுகையில், “தயாரிப்பாளர்களைப் பற்றிப் பேசும் தகுதியே இல்லாதவர் பிரகாஷ்ராஜ். இவரால் எத்தனை தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஒரு லிஸ்டே போடலாம்.

தெலுங்கில் எத்தனை முறை இவருக்கு தடைப் போட்டிருக்கிறார்கள்? தமிழ் பேசிவிட்டால், தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை கண்டபடி பேச உரிமை வந்துவிடுமா? இவருக்கு பிரச்சினை என்று வந்தபோது அதைத் தீர்க்க முன்வந்தது இதே தயாரிப்பாளர் சங்கம்தான்” என்றார்.

‘ஞானவேல் ராஜாவால் சூர்யா-கார்த்திக்கு அவமானம்’… தாணு

‘ஞானவேல் ராஜாவால் சூர்யா-கார்த்திக்கு அவமானம்’… தாணு

kalaipuli thanuதமிழகத்தில் நெடுவாசல் போராட்டம் தீவிரமடைந்துள்ள வேளையில், சினிமாவிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

ஒருபக்கம், சுசித்ராவின் ட்விட்டர் பரபரப்பு. மறுபக்கம் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்.

தற்போது சங்கத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று நடிகர் சங்கம் முன்பு தாணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது தாணு பேசும்போது ஞானவேல் ராஜாவை கடுமையாக தாக்கினார். அவர் பேசியதாவது…

“இந்த இரண்டு ஆண்டு நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து எப்போது நடந்தது என்று ஞானவேல் ராஜாவால் கூற முடியுமா?

இவரால் சிவகுமார் குடும்பத்துக்கே அவமானம். சிங்கம் 3 படத்தை எத்தனை முறை தள்ளிப்போட்டு மற்ற தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடித்தார்?

கொம்பன் படத்தை வெளியிட முடியாமல் இதே ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அழுதாரே…

அப்போது துணைநின்று பிரச்சினையைத் தீர்த்து படம் வெளியிட உதவியது இதே தயாரிப்பாளர் சங்கம்தானே… அது கட்டப்பஞ்சாயத்தா?

அந்தப் படத்துக்காக அரசியல் தலைவர்களிடமெல்லாம் பேசி, சுமூகமாக படத்தை வெளியிட்டது இதே தயாரிப்பாளர்கள் தானே அவர்களைப் பற்றிப் பேச ஞானவேல் ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்றார்.

Gnanavel Raja insults Sivakumar family says Producer Thanu

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷாலின் வாக்குறுதிகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷாலின் வாக்குறுதிகள்

Vishal teams Producer Council Election Manifestoதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இம்முறை தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் விஷால் அணியினர் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு….

 • வெளியிட முடியாமல் இருக்கும் படங்களை வெளியிடவும், அனைத்து படங்களுக்கும் சாட்டிலைட் உரிமம் மூலமாக லாபம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.
 • அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வந்து சேர வேண்டிய கேபிள் TV வருமானத்தை சரி செய்து, மாதா மாதம் அனைத்து தயாரிப்பாளர்கள் பயன்படும் வகையில் வருமானம் ஈட்டித் தரப்படும்.
 • பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாங்க மானியத்தை மாநில அரசுடன் நட்புறவுடன் பேசி தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய மானியத்தை பெற்றுத்தரப்படும்.
 • சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து பிரச்சினைகளும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்.
 • நலிந்த தயாரிப்பாளர்கள்’ என்ற வார்த்தை தயாரிப்பாளர் சங்க வரலாற்றில் இருந்து அகற்றப்படும்.
 • அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வீட்டு மனை வழங்கப்படும். இதற்கான நிதி சங்க வைப்பு நிதியில் இருந்து எடுக்காமல் புதிய வருவாய் மூலமாகவே நிறை வேற்றப்படும்.
 • யார் எந்த அணி என்ற பாரபட்சம் இல்லாமல், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன் தொகைரூ.5,000/- ல் இருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தப்படும்.
 • தீபாவளி பரிசு ரூ.10,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்.
 • பொங்கல் பரிசு ரூ.5,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்.
 • சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி நிறுவனர்களில் இலவச கல்வி பெற வழிவகை செய்யப்படும்.
 • முந்தைய நிர்வாகிகளைப்போல் சுயநல நோக்கோடும், தொலைநோக்குப் பார்வை அற்றவர்களாகவும் செயல்பட மாட்டோம்.
 • ஒரு வருடத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் இல்லையேல், அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்து விடுவோம்.

 

More Articles
Follows