தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அருள்செழியன் இயக்கத்தில் விதார்த் – ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு – துர்கா, இளவரசு, முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குய்கோ’.
இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் இளவரசு பேசியதாவது…
“இளம் பத்திரிகையாளர்களுக்கு சினிமா கனவு இருந்தா சீக்கிரம் சினிமாக்கு வந்துடுங்க. காத்திருக்காதீங்க. இப்பவே வந்து சினிமாவுல முட்டுங்க, மோதுங்க. பத்திரிகை துறை உங்க நேரத்தையும் உழைப்பையும் உறிந்துவிடும்.
நல்லவேளையா அருள்செழியன் இப்பயாவது வந்துட்டார். படம் கிடைச்சிடுச்சு, செல்லப்பிள்ளை யோகிபாபு, ஃபெர்பார்ம் பண்ற ஹீரோ விதார்த், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் உள்ள வந்துட்டாங்க.
ஆனா முதல் நாள் ஷூட்டிங்கில், அறுபது சீனில் எதை முதல் ஷாட்டாக வைப்பீங்க? அகிரா குரோசாவோவாக இருந்தாலும், இந்தப் பிரச்சனை வரும். அதைச் சமாளிக்க, அசோசியேட் இயக்குநர், கேமராமேன் என இருவரின் தயவு அவசியம் தேவை. அப்படியொரு டீம் அருள் செழிலனுக்கு அமைஞ்சது. அதைத் தாண்டி, இந்தப் படத்துல என்ன சிறப்பு? மலையாளப்படத்துல தான் நூல் பிடித்தாற்போல் சுவார்சியம் குறையாமல் டக்கு டக்குன்னு திரைக்கதை அமைச்சுட்டே போவாங்க.
சினிமாவுல, கதையை விட திரைக்கதை தான் ரொம்ப முக்கியம். அது சில ஸ்க்ரிப்ட்க்கு அமையும். இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு. அவர் கதையில், ஃப்ரீசர் பெட்டிக்கு ஒரு எமோஷன் வச்சு அருமையான திரைக்கதையாக அமைச்சிருக்கார்.
பெண்கள் பொதுவாகத் தன்னை அழகாகக் காண்பிச்சுக்க நினைப்பாங்க. இந்தப் படத்துல, கதாநாயகி ஸ்ரீபிரியங்கா எண்ணெய் ஒழுகும் முகத்தோடு நின்னுட்டிருந்தாங்க. நான் போய், ‘டச் அப் பண்ணிக்கோம்மா’ எனச் சொன்னேன். ‘இல்ல சார், கதைக்கு இப்படித்தான் இருக்கணும்’ எனச் சொன்னாங்க.
கன்டினியுட்டி மிஸ் ஆகிடக்கூடாதுன்னு சிச்சுவேஷனுக்கு ஏற்ற முகத்துடன் இருக்கணும் என ஒரு கதாநாயகி படத்தோடு இன்வால்வ் ஆகி நடிச்சது ஆச்சரியமாக இருந்தது.
விதார்த்திற்கு அவரது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை. விமல், விதார்த், விஜய் சேதுபதி ஆகியோர் ஹீரோவின் நண்வர்களாக நடிச்சு இப்போ ஹீரோவாகி இருக்காங்க. விதார்த் சினிமாவுல சாதிச்சது தெரியும்.
ஆனா அவர் பாரதம் நாடகத்துல, துச்சாதனாக துயில் உறியுற காட்சி நடிச்சுட்டு, ஸ்க்ரீனுக்குப் பின்னாடி போறப்ப அவர் மேல தண்ணி ஊத்தினா, பொஸ்ஸ்ன்னு ஆவி போகும். பொசுக்குன்னு தண்ணி ஊத்தினா ஆவி பறக்கும். ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரமாகவே மாறுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமே இல்லை.
அவர் இன்னும் பெரிய உயரத்துக்குப் போகணும். இது ஓட வேண்டிய படம். படத்தை இன்னும் கொஞ்சம் விளம்பரத்தைத் தயாரிப்பு நிறுவனம் அதிகப்படுத்தலாம்.” என்றார்.
ilavarasu advice to all cinema reporters