தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அருள்செழியன் இயக்கத்தில் விதார்த் – ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு – துர்கா, இளவரசு, முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குய்கோ’.
இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ரீபிரியங்கா பேசியதாவது…
“எங்க படத்தோட தலைப்பு மட்டும் வித்தியாசமானது இல்லை. எங்க டீமே வித்தியாசமானதுதான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கு.
ஒளிப்பதிவாளரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகக் காண்பிச்சிருக்கார். படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகுது. அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க.” என்றார்.
இசையமைப்பாளர் அந்தோணி தாசன் பேசியதாவது..
“என்னைப் பெத்தெடுத்த எங்கம்மாவுக்கு நன்றி. கோ.மு.-ல ஆரம்பிச்சு கோ.பி.-ல முடியுது. கொரோனாக்கு முன்னாடி தொடங்கி, கொரோனாக்குப் பின்னாடி வெளியாகப் போகுது. படம் தொடங்கி 5 வருஷமாகுது. கலச்சாரத் தூதுவனா, மக்களை சந்தோஷப்படுத்துற பணியை மண்ணுக்குப் போறவரை செய்வேன். நான் கரகாட்டக் கலைஞன் என்பதால் நடனமும் ஆடுவேன். படத்துல, பாடல்களுக்கு நானே ஆடுறேன் எனக் கேட்டுப் பார்த்தேன். இயக்குநர் ஒத்துக்கலை. அவரது அடுத்த படத்துல எனக்கு முக்கியமானதொரு கதாபாத்திரம் தருவாருன்னு நம்புறேன்.” என்றார்.
Kuiko not only title movie team too different says Sri Priyanka