வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை சொல்லியிருக்கோம் – முத்துக்குமார்

வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை சொல்லியிருக்கோம் – முத்துக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்செழியன் இயக்கத்தில் விதார்த் – ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு – துர்கா, இளவரசு, முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குய்கோ’.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் முத்துக்குமார் பேசியதாவது…

” சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு நிறைய கதை சொன்னாங்க. அருள்செழியன் சொன்ன கதை ரொம்பச் சுவாரசியமாக இருந்தது. எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய படம். எனக்கு, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கேரக்டர். வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை இதுல சொல்லியிருக்கார். இந்தப் படம் எந்தச் சூழ்நிலையிலும் பார்வையாளர்களை ஏமாத்தாது. நூறு சதவிகிதம் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கும்.” என்றார்.

கூடுதல் தகவல்…

பொதுவாக பல படங்களில் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் வலியை காட்டி இருப்பார்கள்.. ஆனால் வட்டிக்கு தான் பணம் வாங்குகிறோம் என்பது தெரிந்தும் தன்னுடைய தேவை முடிந்த பின் அவர்கள் மீது குறை கூறுவதும் கடனாளிகளின் வேலை.. நன்றி கெட்டவர்கள்..

‘குய்கோ’ படத்தில் கடன் கொடுத்தவர்கள் வலியை சொல்லி இருக்கிறார்கள் என்பதால் நிச்சயம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது இவரின் பேச்சு.. காத்திருப்போம்..

Actor Muthukumar acted as financier in Kuiko

யோகி பாபு கால்ஷீட்டுக்காக விதார்த்தை கஷ்டப்படுத்திட்டோம்.. – அருள் செழியன்

யோகி பாபு கால்ஷீட்டுக்காக விதார்த்தை கஷ்டப்படுத்திட்டோம்.. – அருள் செழியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்செழியன் இயக்கத்தில் விதார்த் – ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு – துர்கா, இளவரசு, முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குய்கோ’.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் அருள்செழியன் பேசியதாவது..

“ஜீ தமிழ்ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது, 3 ஸ்க்ரிப்ட் பெளண்ட் பண்ணேன். அதுல ஒன்னுதான் ஆண்டவன் கட்டளை.

மணிகண்டனோட ‘காக்கா முட்டை’ படம் பார்த்துவிட்டுப் பாராட்டுறதுக்காகக் கூப்பிட்டேன். அப்போ அவர் எனது ‘ஆண்டவன் கட்டளை’ கதையைக் கேட்டார். அவர் மூலமாக ஃப்ரீசர் பெட்டி கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, கடைசி விவசாயி தயாரிப்பாளர் சமீர் பரத் அழைத்தார். யோகிபாபுவுக்கு, ஆண்டவன் கட்டளை சமயத்திலேயே கதை சொல்லியிருந்தேன். கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகப் பண்ணியிருக்கார்.

விதார்த், மிகச் சிறந்த மனிதராக இருக்கிறார். யோகிபாபுவின் தேதி கிடைக்காததால், அவரது போர்ஷனை முதலில் முடிச்சோம். விதார்த்தைக் காக்க வைத்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம்.

இளவரசு அண்ணனிடம் கதை சொன்னேன். அடுத்த நாள் அவர் எனக்கு போன் செய்து, ‘மூன்று மணிக்கு முழிப்பு வந்தது, இந்தக் கதை பற்றித்தான் யோசிச்சிட்டிருந்தேன். ரொம்பப் பிரமாதமாக இருக்கு’ என்றார். 2019 இல் படம் தொடங்கி தாமதம் ஆன பொழுதெல்லாம் மிக உறுதுணையாக இருந்தார். ஆயிரம் சினிமாக்கு பைனான்ஸ் பண்ணவரிடம் கூட்டிட்டுப் போனார். தனிப்பட்ட முறையில் தொடர்ந்து அக்கறையோடு இந்தப் பட உருவாக்கத்திற்கு உதவி பண்ணார்.

வெறொரு படத்திற்காக அந்தோணிதாசன் இசையமைத்த, ‘ஏ! சிரிப்பழகி’ பாட்டை, ‘எனக்கு வேணும்’னு கேட்டு வாங்கினேன். ராஜேஷ் யாதவ் வேகமாக 35 நாளில் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கார். படத்தில் மோசமான கெட்ட பாத்திரங்களே இல்லை. ஏன் போலீஸை மட்டும் கெட்டவங்களா காட்டியிருக்கீங்க என சென்சாரில் கேட்டனர். 35 வருஷமா பத்திரிகையாளரா வேலை பார்த்தேன். நான் பார்த்த விஷயங்களைக் கொஞ்சம் நையாண்டியாக டீல் பண்ணேன் எனச் சொன்னேன்.”

குய்கோ எனும் தலைப்பு, ‘குடியிருந்த கோயில்’ என்பதன் சுருக்கமாகும். திரையரங்குகளில், நவம்பர் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Vidharth faced lot of struggles says Arul Chezhian

மைனாவுக்குப் பிறகு தோல்விதான்.. அப்போ என் குடும்பம் முடிவு பண்ணிச்சு.. – விதார்த்

மைனாவுக்குப் பிறகு தோல்விதான்.. அப்போ என் குடும்பம் முடிவு பண்ணிச்சு.. – விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்செழியன் இயக்கத்தில் விதார்த் – ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு – துர்கா, இளவரசு, முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குய்கோ’.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விதார்த் பேசியதாவது..

“இன்றைய நிகழ்வின் நாயகனான இசையமைப்பாளர் அந்தோணிதாசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்தப் படத்தின் ப்ரொடக்‌ஷன் தொடங்குவதற்கு முன்பே, இயக்குநர் அருள் செழியன் சொல்லி, அந்தோணிதாசன் படத்துக்கு மியூசிக் போட்டு, அந்தப் பாடலை நான் கேட்டு அவருக்குப் பேசினேன்.

இந்தப் படத்தில் இசை மிகப் பிரமாதமாக வந்திருக்கு. படத்தில், இந்தப் பாடல்களுக்கு, நான் ஆடணும்னு நினைச்சேன். ஆனா படத்துல எனக்கு அந்த வாய்ப்பு அமையல. இயக்குநர் அருள் செழியனை, எனக்கு காக்கா முட்டை மணிகண்டன் தான் அறிமுகப்படுத்தினாரு. அப்போ அவர், ‘என்கிட்ட ஒரு நல்ல கதை இருக்கு. படிக்கிறீங்களா?’ என ‘ஃப்ரீஸர் பாக்ஸ்’ கதையைக் கொடுத்தார். அந்தக் கதை எனக்கு முன்பே தெரியும்.

மைனா படத்திற்குப் பிறகு, எனக்குத் தோல்விப் படங்களாக அமைந்த போது, என் குடும்ப உறுப்பினர்கள் எனக்காக ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணாங்க. அப்போ இயக்குநர் மணிகண்டன் எனக்குச் சொன்ன கதைதான் இது. நான் இந்தக் கதையைத் தயாரிக்கலாம்னு இருந்தேன்.

அப்போ, ‘நீங்க வில்லேஜ் சப்ஜெக்டில் நடிச்சுட்டீங்க. எனக்கும் காக்கா முட்டை முடிஞ்சது. நாம வேற ஜானர்ல பண்ணலாம் என குற்றமே தண்டனை படம் பண்ணோம். மீண்டும், இந்தப் படம் திரும்பி என்னையே தேடி வந்தது. என் கேரக்டரில் ரமேஷ் திலக் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஒரு ஹீரோவாகப் போகலாம் என முடிவெடுத்ததால், நான் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன்.

ஆனா, நான் உள்ள வர்றதுக்கு நிஜமான காரணம் கதை தான். அவ்வளவு அழகான கதை. எப்படி ‘ஒரு கிடாரியின் கருணை மனு’ படம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதோ, அப்படியான ஒரு வாழ்வியல் சார்ந்த கதை. இந்தப் படத்தின் திரைக்கதையை மிகச் சுவாரசியமான ஒன்றாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் T. அருள் செழியன். அற்புதமான இந்த இயக்குநர் வெற்றி பெறனும். மக்களுக்கு இந்தப் படம் போய்ச் சேரனும்” என்றார்.

Kuiko movie should reach huge audience says Vidharth

காட்பாதர் விதார்த்.. ஞானி இளவரசு.. நார்மல் யோகிபாபு..; ‘குய்கோ’ துர்கா பேச்சு

காட்பாதர் விதார்த்.. ஞானி இளவரசு.. நார்மல் யோகிபாபு..; ‘குய்கோ’ துர்கா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் பேசியதாவது..

“மலைக்கிராமத்துக்கான கதை என்றதும், மனதில் ஏற்காடு, ஊட்டி போன்ற விஷுவல் கண் முன் தோன்றும். அவர் லோக்கேஷனை ஃபோட்டோஸாகக் காட்டினார்.

இந்தக் கதை உருவான இடத்துல ஒரு வருடம் பயணித்து, ஒவ்வொரு சீசனும் எப்படி இருக்கும் எனச் சொன்னார். அழகிய கிராமம் எனச் சொல்வது சுலபம். ஆனா அதைக் காட்சிப்படுத்துவது சவாலா இருக்கும். லோக்கேஷனைப் பார்த்துடலாம் எனக் கேட்டேன்.

அந்தக் கிராமத்தில் மொத்தம் 40 வீடுதான் இருந்தது. அந்த ஊரில் இறங்கியதும் சிக்னல் கட்டாகிடுச்சு. அந்த ஊர் முழுவதும் பூந்தோட்டமாக இருந்தது. அந்த ஊர்ல பூக்களைப் பயிரிட்டுக் கொண்டிருந்தார்கள். நல்ல பசுமையான லோக்கேஷனாகப் பார்த்து வச்சுட்டு வந்தோம். ஆனா படம் தள்ளிப் போய் மே மாசத்து வெயிலில் ஷூட்டிங் போகும்படி இருந்தது. ‘வேலூரில் மே மாசம் ஷூட்டிங்கா?’ என பயமுறுத்தினாங்க. எல்லோரும் பயமுறுத்தின மாதிரி மலை எங்களை பயமுறுத்தலை.

ஆனா மலையில் இருந்து இறங்கிய ரெண்டு நாளும் வெயில் நல்லா காட்டிடுச்சு. ஒரு பாடல் படப்பிடிப்புக்காகப் பார்த்த இடத்தில் வனத்துறையின் அனுமதி இல்லாததால், வேற லோக்கேஷன் பார்த்தோம். அணைக்கட்டு முருகர் கோயில் பக்கத்தில் இருக்கும் மலையில் ஷூட்டிங் போனோம். அதனால் வேலூரை ஸ்விட்சர்லாந்து மாதிரி காட்ட முடிஞ்சது.”

யோகிபாபுவிற்கு ஜோடியாக ஜோடியாக நடித்திருக்கும் துர்கா பேசியதாவது..

“விதார்த் சார் என் காட்ஃபாதர். இதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நானும் இளவரசு சாரும், ஒருநாள் ஷூட்டிங் முடித்துவிட்டு காஃபி குடித்துக் கொண்டே பேசினோம். அவர் பேசினாரு, பேசினாரு, அவ்ளோ ஞானத்தை எங்க ஒளிச்சு வச்சார் எனத் தோணுமளவுக்குப் பேசினார்.

யோகிபாபு சாரு, நார்மலா நாம எல்லாரும் ஸ்க்ரீன்ல பார்க்கிற மாதிரி தான் இருப்பார். சிரிச்சுட்டே, சிரிக்க வச்சுட்டே இருப்பார்.”

kuiko Actress Durga says Vidharth is my godfather

BREAKING சூப்பர் ஸ்டார் சிம்பு படம்..- 15 மணிநேர கோர்ட் கெடு.; ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸாகுமா.?

BREAKING சூப்பர் ஸ்டார் சிம்பு படம்..- 15 மணிநேர கோர்ட் கெடு.; ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸாகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இந்த படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

என்னதான் விக்ரம் பெரிய நடிகர் என்றாலும் பல பிரச்சினைகளைகளால் இந்த படம்
ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்த நிலையில் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னரும் முடங்கியது.

ஒரு வழியாக இந்த ஆண்டு 2023 நவம்பர் 24ஆம் தேதி நாளை வெளியாகும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் பிரச்சனை கிளம்பியது.

அதன் விவரம் வருமாறு…

ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும்..

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.

சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு, ரூ. 2.40 கோடியை பெற்ற கௌதம் மேனன் படத்தை முடிக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா

பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல். பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

Dhruva Natchathiram release court order statement news

ரன்பீர் & ராஷ்மிகாவின் ‘அனிமல்’ டிரைலர் வெளியானது

ரன்பீர் & ராஷ்மிகாவின் ‘அனிமல்’ டிரைலர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தற்போது ‘அனிமல்’ என்ற திரைப்படத்தில் இயக்குகிறார்.

இதில் ரன்பீர் கபூர் கதாநாயனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

அனிமல்

‘அனிமல்’ படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘அனிமல்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, ‘அனிமல்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ANIMAL – TAMIL OFFICIAL TRAILER

Ranbir Kapoor and Rashmika Mandanna Starring ‘Animal’ trailer released

More Articles
Follows