காலா படத்தில் ஒரிஜினல் ரஜினியாக அரவிந்த் ஆகாஷ்

காலா படத்தில் ஒரிஜினல் ரஜினியாக அரவிந்த் ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kaala aravind akashரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் சூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.

ரஜினி தற்போது ஓய்வுக்காக சென்னை வந்துள்ள நிலையில், அவர் இல்லாத மற்ற காட்சிகளை அங்கே படம் பிடித்து வருகிறார் இயக்குனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் அரவிந்த் ஆகாஷ்.

இப்படத்தில் இவரது கேரக்டரின் பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் ஆகும்.

இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஒரிஜினல் பெயர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதுகுறித்து அரவிந்த் ஆகாஷ் கூறும்போது…

“தலைவரின் இயற்பெயரில் நான் நடிப்பதை விட வேறு என்ன வேண்டும். மகிழ்ச்சியாக உள்ளது.

ஆனால் இதுவரை சூட்டிங் ஸ்பாட்டில் நான் ரஜினியை சந்திக்கவில்லை. கடவுளை காண கொஞ்சம் காத்திருக்கத் தானே வேண்டும்.” என்றார்.

இவர் வெங்கட் பிரபுவின் சென்னை 28, குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai 28 fame Aravind Aakash plays Shivaji Rao Gaekwad in Kaala

விஐபி2 பாடல்கள்; தனுஷ்-சௌந்தர்யா ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்

விஐபி2 பாடல்கள்; தனுஷ்-சௌந்தர்யா ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush soundarya kajolகோச்சடையான் என்ற தன் முதல் படத்திலேயே தன் தந்தையும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தை இயக்கியவர் சௌந்தர்யா.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் ஷாரூக்கான் கலந்து கொள்ள நடைபெற்றது.

தற்போது தன் 2வது படமான வேலையில்லா பட்டதாரி படத்தில் தன் அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷை இயக்கியுள்ளார்.

இதன் டீசர் அண்மையில் வெளியானது. இப்படம் அடுத்த ஜீலை மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

ஆனால் இதற்கான விழாவை சென்னையில் நடத்தாமல் மும்பையில் நடத்தவிருக்கிறார்களாம்.

இதனால் தனுஷ் மற்றும் சௌந்தர்யா ஆகியோரின் இருதரப்பு ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இப்படத்தில் கஜோல் முக்கிய வேடம் ஏற்றுள்ளதால் இந்த மும்பை விழா ஏற்பாடு என சொல்லப்படுகிறது.

இவ்விழாவில் அமிதாப்பச்சன் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு தனுஷின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

VIP2 audio launch Dhanush and Soundarya Rajini fans disappointed

சிம்புவா இது..? எப்படியிருந்த இவர் இப்படி ஆயிட்டாரே.?

சிம்புவா இது..? எப்படியிருந்த இவர் இப்படி ஆயிட்டாரே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

strசிறுவயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு என்ற எஸ்டிஆர்.

நடனத்தில் இவருக்குகென்று ஒரு தனி ஸ்டைல் உள்ளது. இவர் உடம்மை வளைத்து வளைத்து ஆடுவதில் வல்லவன்.

ஆனால் தற்போது நடித்து வரும் AAA படத்தில் உள்ள மதுர மைக்கேல் கேரக்டருக்காக தன் உடல் எடையை 90 கிலோவுக்கு மேல் ஏற்றியிருந்தார்.

அப்போது தாடி வைத்து காணப்பட்டார்.

ஆனால் சமீபகாலமாக தாடி, மீசையில்லாமல் வருகிறார்.

அப்போது அவரை கானும்போது இன்னும் குண்டாக தெரிகிறார்.

என்னப்பா? எப்படி இருந்த இப்படி ஆயிட்டோரே என்று சில நலம் விரும்பிகள் சிம்பு மீது கவலைப்படுகிறார்கள்.

கூடிய சீக்கிரமே மீண்டும் பழைய ஸ்லிம் சிம்புவாக மாறிவருவார் என நம்புவோம்.

மீம்ஸ் போட்டு TROLL செய்பவர்களுக்கு சிம்புவின் சூப்பர் அட்வைஸ்

மீம்ஸ் போட்டு TROLL செய்பவர்களுக்கு சிம்புவின் சூப்பர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu STRமுதன்முறையாக சிம்பு நடித்து இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

AAA என்று சுருக்கமாக அழைக்கப்படும் இதன் முதல் பாகம் மட்டும் வருகிற ஜீன் 23ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில் இணையத்தில் மீம்ஸ் போட்டு Troll செய்பவர்களுக்கு தன் கருத்தை தெரிவித்தார் சிம்பு.

“ஒரு விஷயம் செய்றீங்கன்னா அருமையா நல்லா செய்யுங்க.

படத்த பார்த்துட்டு உடனே ஏதாச்சும் செய்யனும் பண்ணாதீங்க. நல்லா யோசிச்சு டிஸ்கஸ் பண்ணி இரண்டு நாள் கழிச்சி கூட TROLL பன்னுங்க.

சிலதை பார்த்த கொஞ்சம் கூட இன்ஸ்ட்ரே இல்ல. சிரிப்பு கூட வரல” என்று TROLL செய்பவர்களுக்கு பதிலடியாக தெரிவித்து இருந்தார் இந்த அடங்காதவன் சிம்பு.

Simbu advice to Trollers and Memes Creators

எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை… – விஜய்சேதுபதி

எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை… – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi open talks about Trisha and his 96 movie‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரேம் குமார் இயக்கும் ’96’ என்ற படத்தில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தை நந்தகோபால் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது…

நயன்தாரா, தமன்னாவுடன் நடித்துவிட்டேன். இப்போது த்ரிஷாவுடனும் நடிக்கிறேன்.

இவர்களுடன் நடிப்பேன் என நினைக்கவில்லை. தற்போது சந்தோஷமாக இருக்கிறது.

“1996-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பற்றிய கதைதான் இது.
அதனால்தான் அந்த வருடத்தை தலைப்பாக வைத்திருக்கிறோம்.

அப்போது 39 வயதாகும் நீங்கள் ஸ்கூல் படிக்கும் பையனாக நடிப்பது சவாலாக இருக்காதா? என்றனர்.

அதற்கு பதிலளிக்கும் போது அவர் கூறியது…

“ஸ்கூல் கேரக்டர் படத்தில் கொஞ்சம் நேரம்தான் வரும்.

அதிலிருக்கும் சவால்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு நடிகனாக எனது வேலையை செய்கிறேன்.

கதைக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதுதான் நடிகனின் வேலை. வேறு எதையும் நான் எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்தார்.

Vijay Sethupathi open talks about Trisha and his 96 movie

சிங்கம் புரொடியூசர்; சிறுத்தை டைரக்டர்… கலக்கும் சிவகார்த்திகேயன்

சிங்கம் புரொடியூசர்; சிறுத்தை டைரக்டர்… கலக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan dubbingவேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு, பொன்ராம் இயக்கும் படத்தில் நாளை முதல் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையில் முன்பே ஒப்புக்கொண்டப்படி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை சிறுத்தை வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவா இயக்கவிருக்கிறாராம்.

தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

சூர்யா நடித்த சிங்கம், கார்த்தி நடித்த சிறுத்தை உள்ளிட்ட படங்களை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sivakarthikeyan likely to join soon with Director Siva and Producer Gnanvel Raja

More Articles
Follows