கேன்சரால் தவசி அவதி..; ரஜினி நலம் விசாரிப்பு.. சிவகார்த்திகேயன் உதவி

கேன்சரால் தவசி அவதி..; ரஜினி நலம் விசாரிப்பு.. சிவகார்த்திகேயன் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thavasi actor cancer‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது. தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார் தவசி.

தற்போது இவரை புற்றுநோய் தாக்கியுள்ளது.

அண்மையில் வெளியான புகைப்படத்தல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.

மேலும் அவரின் சிகிச்சைக்கு போதிய பணமின்றி கஷ்டப்படுவதால் பண உதவியை நாடியிருக்கிறார்.

விஜய்சேதுபதி ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரம் பண உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது- தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் மூலம், அவர் இந்த உதவியை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை தொடர்ந்து தவசியை தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் விசாரித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Celebrities help to Tamil actor Thavasi

நயன்தாரா பிறந்தநாளில் காதலர் விக்னேஷ் சிவனின் ‘டீசர்’ ட்ரீட்

நயன்தாரா பிறந்தநாளில் காதலர் விக்னேஷ் சிவனின் ‘டீசர்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிஜத்தில் காதலர்களாக வலம் வரும் விக்னேஷ் சிவனும் நயன்தாரா மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

நெற்றிக்கண் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.

‘அவள்’ பட இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கி வருகிறார்.

அஜ்மல் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

கிரிஷ் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாளை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி காலை 9.03 மணிக்கு இப்பட டீசரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் விக்கி.

2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படத்தின் தழுவல் தான் ‘நெற்றிக்கண்’ என ஒரு தகவலும் கோலிவுட்டில் உலா வருகிறது.

Netrikkan teaser to release on Nayanthara birthday

netrikan nayanthara

கேங்ஸ்டர் படத்தில் பிரியா மணியுடன் இணையும் ‘தெய்வத்திருமகள்’

கேங்ஸ்டர் படத்தில் பிரியா மணியுடன் இணையும் ‘தெய்வத்திருமகள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priya mani sara arjun‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ ஆகிய படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த குழந்தை நட்சத்திரம் என நிரூபித்தார் பேபி சாரா.

அண்மையில் வெளியான ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படத்திலும் ஒரு எபிசோட்டில் நடித்திருத்தார்.

தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டதால் நாயகியாக களமிறங்கியுள்ளார்.

அருண் விஜய்யின் நடிப்பில் உருவாகும் ‘பாக்ஸர்’ படத்தை இயக்கி வருகிறார் விவேக்.

இந்த படத்தை தொடர்ந்து ‘கொடேஷன் கேங்’ என்கிற கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கவுள்ளார் விவேக்.

மும்பை மாநகரில் உள்ள நிழலுலகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையை இதில் படமாக்கவுள்ளனர்.

இந்த படத்தில் பிரியா மணி நாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையான மற்றொரு கேரக்டரில் சாரா அர்ஜுன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Priya Mani and Sara Arjun joins for a gangster film

கமல் கட்சி உறுப்பினரும் பாடலாசிரியருமான சினேகன் மீது 2 வழக்கு பதிவு

கமல் கட்சி உறுப்பினரும் பாடலாசிரியருமான சினேகன் மீது 2 வழக்கு பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

snehan mnmதமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்களில் பிரபலமானவர் சினேகன்.

இவர் அமீர் உடன் ‘யோகி’ படத்தில் நடிகராகவும், பாடகராகவும் அறிமுகமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின் தமிழக ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்தது.

அதன் பின்னர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

அங்கு அவருக்கு மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டார்.

இருபத்தி இரண்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று 5-ம் இடத்தில் இருந்தார் சினேகன்.

இந்த நிலையில் இவர் மீது ஒரு விபத்து வழக்கில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஊனையூர் அருகே உள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்பாண்டியன் (28).

அந்த நபர் ஓட்டி வந்த பைக் மீது பாடலாசிரியர் சினேகன் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் அருண் பாண்டியன் காயமடைந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமயம் போலீஸார், 2 பிரிவுகளின் கீழ் சினேகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Case filed against lyricist snehan

நாடகக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் இலவச சலுகை..; நடிகர் சங்கம் நன்றி.!

நாடகக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் இலவச சலுகை..; நடிகர் சங்கம் நன்றி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

drama artistsஓர் இடத்துக்குச் சென்று நாடகம் நடத்த வேண்டும் என்றால், அனைத்து உபகரணங்களையும் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் எடுத்துச் செல்ல வேண்டும்.

இதற்கும் டிக்கெட் எடுத்துத் தான், கொண்டு செல்ல வேண்டிய சூழலில் இருந்தார்கள் நாடகக் கலைஞர்கள். அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில், இந்த பயணத்துக்கு ஒரு பகுதி செலவிட வேண்டியதிருந்தது.

இந்தக் கட்டணத்தை இலவசமாக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருந்தது.

தற்போது, கொரோனா காலத்தில் நாடகக் கலைஞர்களின் நிலை மிகவும் பரிதாபக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சமயத்தில், நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

இந்த அறிவிப்பு என்பது நாடக நடிகர்களுக்கு மிகப்பெரிய பேரூதவி ஆகும்.

இந்த அரசாணையை பிறப்பித்த தமிழக அரசுக்கு, நடிகர் – நடிகைகள் சமூகம் சார்பில் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இந்த ஆணை நாடக நடிகர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Transport charges free for drama artists in TN

எம்ஜிஆர்-சிவாஜிக்கே சவால் விட்ட ஜெமினி கணேசன்.; காதல் மன்னனின் 100வது பிறந்தநாள் பதிவு

எம்ஜிஆர்-சிவாஜிக்கே சவால் விட்ட ஜெமினி கணேசன்.; காதல் மன்னனின் 100வது பிறந்தநாள் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gemini ganesanதமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் உச்சத்தில் இருந்த போதே அவர்களுக்கு இணையாக ரசிகர்களை ஈர்த்தவர் ஜெமினி கணேசன்.

அப்பாவியான முகம் கொண்டிருந்தாலும் இவர் முதலில் நாயகனாக நடிக்கவில்லையாம். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசனுக்கும் காதல் பாடல்கள் பெருமளவு கை கொடுத்தது.

பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஏ.எம் .ராஜன் ஆகியோர் குரல்கள் ஜெமினி கணேசனின் காதல் பாடல்களுக்கு கை கொடுத்தன.

ஜெமினி கணேசன் பற்றிய சிறு துளி தகவல்கள் இதோ…

இவர் 17.11.1920-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் கணபதி சுப்பிரமணியன் சர்மா. பின்னர் அது ராமசாமி கணேசன் என்று மாறியது. நாளடையில் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயரே நிலையானது.

இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி ஸ்டுடியோவில் இவருக்கு கிடைத்த வேலை கேஸ்டிங் டைரக்டர். அதாவது சினிமாவில் நடிக்க வரும் புதுமுகங்களின் திறமைகளை பரிசோதித்து குறிப்பு எழுதித் தரும் நபர்தான் இவர்.

* அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவர்களின் முக்கியமானவர் சிவாஜி கணேசன், எஸ். வி.ரங்காராவ், சாவித்திரி ஆகியோரும் அடங்குவர்.

சிவாஜிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு “இந்த பையனின் கண்ணும், முகமும் அபாரம். நிச்சயம் ஒரு நல்ல நடிகராக இவர் விளங்குவார் என கம்பெனியில் குறிப்பு எழுதியுள்ளார். சிவாஜி கணேசனே இதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறாராம்.

தமிழில் மட்டும் 97 படங்களில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் “மிஸ் மாலினி’ (1947). கடைசி படம் கமலின் “அவ்வை சண்முகி'(1996).

“வல்லவனுக்கு வல்லவன்’. படத்தில் ஜெமினி கணேசன் வில்லனாக நடித்துள்ளார். ஹீரோவாக நடித்த முதல் படம் 1953-ஆம் ஆண்டு வெளியான “பெண்’.

“வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் ஆக்சனில் அசத்தியிருக்கிறார்.

இவர் தயாரித்த ஒரே படம் “நான் அவனில்லை’.

நிறைய காதல் படங்களில் நடித்து காதல் மன்னன் என்ற பெயரையும் ரசிகர்களிடையே பெற்றார். தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன் பட்டம் பெற்றவர் இவரே.

1953ல் “மனம்போல மாங்கல்யம்’. என்ற படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். இந்த படத்தில் தன்னுடன் நடித்த, நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்திரியை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்.

சாவித்திரிக்கு திருமணம் செய்வதற்கு முன்பே இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதை அறிந்தே இவரை சாவித்ரி காதலித்து திருமணம் செய்தார்.

சினிமாவை போல நிஜ வாழ்க்கையிலும் நிறைய பெண்களை காதலித்தார். சிலரை திருமணம் செய்துள்ளார்.

இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை பெற்றிருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது 85-வது வயதில் உயிரிழந்தார்.

ஜெமினி கணேசனுக்கு இந்திய அரசு தபால் தலையும் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அதனை ஜெமினி கணேசனின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் பெற்றுக் கொண்டனர்.

Remembering late actor Gemini Ganesan on his birth anniversary

More Articles
Follows