ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு தடை.? லைகா நிறுவனம் மீது வழக்கு

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு தடை.? லைகா நிறுவனம் மீது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Case Filed in Madras High Court against Darbar releaseலைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பேட்ட படத்தை இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் மோசன் போஸ்டர், பாடல்கள், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தர்பார் படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், “2.0 படத்திற்காக லைகா நிறுவனம் ரூ.12 கோடியை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டிக்கு கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து ரூ.23.70 கோடி வழங்கும் வரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கிற்கு, ஜனவரி 2 ஆம் தேதி லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Case Filed in Madras High Court against Darbar release

‘பிழை’ உடன் தொடங்கும் தமிழ் சினிமாவின் 2020 புத்தாண்டு

‘பிழை’ உடன் தொடங்கும் தமிழ் சினிமாவின் 2020 புத்தாண்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eight movies were releasing on 1st week of 20202020 புத்தாண்டை வரவேற்க உலகமே காத்திருக்கிறது.

அதுபோல் சினிமா ரசிகர்கள் இந்த புத்தாண்டில் வெளியாகவுள்ள முதல் புதுப்படங்கள் வரவேற்க தயாராகி வருகின்றனர்.

புத்தாண்டில் முதல் படமாக 8 படங்கள் வரிசை கட்டி ரிலீசுக்கு நிற்கின்றன.

இதில் சுதீஷ், அமலாபால் நடித்த டப்பிங் படமாக பொய்யாட்டம் ரிலீசாகிறது.

மற்றொரு டப்பிங் கன்னட படமான அவனே ஸ்ரீமன் நாராயணா என்ற படம் தமிழில் வெளியாகிறது.

இத்துடன் சார்லி, மைம் கோபி, தாதா 87 டைரக்டர் மற்றும் திடீர் தளபதி சதீஷ் நடித்துள்ள பிழை படம் வெளியாகவுள்ளது.

மேலும் மாறன், தீஷா, தாரா நடித்துள்ள பச்சை விளக்கு படம் வெளியாகிறது.

இத்துடன் அய்யா உள்ளேன் அய்யா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, தொட்டு விடும் தூரம், ஆனந்த வீடு உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது.

Eight movies were releasing on 1st week of 2020

“இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

“இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathi raja at thamezharasan audio launchSNS MOVIES பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, T. சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்றும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் *இயக்குநர் பாபு யோகஸ்வரன்* பேசியதாவது,

“இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். அவர்கள் இந்த மேடையில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

இயக்குநர் *மோகன்ராஜா* பேசியதாவது,

“ரொம்ப உணர்ச்சிப் பூர்வமான அனுபவம். இந்த மேடையில் நான் நிற்க காரணம் என் மகன். அவன் இப்படத்தில் நடிகனாக அறிமுகமாகிறான். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பத்திரிகையாளர்கள். எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதுபோல் என் மகனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விஜய் ஆண்டனி வாடா போடா என்று பழகும் அளவிற்கு நட்பு உள்ளவன். விஜய் ஆண்டனி என் மகனை நடிக்க கூப்பிட்டார். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்றும் சொன்னார். இதைவிட என் மகனுக்கு பெரிய பெருமை இருக்க முடியாது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

நடிகர் *ரோபோ சஙகர்* பேசியதாவது,

“இந்த வருடத்தின் இது கடைசி ஞாயிறு. அப்படியான ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு கோவில் வளாகத்தில் வைத்து இசை வெளியீட்டு விழா நடத்துவது சிறப்பு. அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இன்றைய கதாநாயகர் இளையராஜா சார் தான். நான் நடித்துள்ள படத்திற்கு அவர் இசை அமைத்துள்ளார் என்பது எனக்குப் பெரிய பெருமை..விஜய் ஆண்டனி சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால் நடிப்பில் அசத்தி விடுவார். மோகன்ராஜா மகனுக்கு இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர். அவன் சிறப்பாக நடித்துள்ளான். இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் இயக்குநர் *சுரேஷ்காமாட்சி* பேசியதாவது,

“இளையராஜா அவர்களின் பாடல்களைப் பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தப்படத்திலும் எப்படியும் சிறப்பாக செய்திருப்பார். விஜய் ஆண்டனி ஒரு சுயம்பு வாக வளர்ந்து வருகிறார். அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளருக்கு வாழ்த்துகளையும் ..விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் *பெப்சி சிவா* பேசியதாவது

“பத்திரிகை நண்பர்களுக்கும் மேடையில் இருப்பவர்களுக்கும் முதல் நன்றி. நான் பெப்சி சிவா ஆக மாறுவதற்கு ஒத்துழைப்பு தந்த பத்திரிகை நண்பர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி.பாரதிராஜா எனக்கு எல்லா நேரத்திலும் உதவியாக இருப்பவர். பி.ஆர்.ஓ மெளனம் ரவி என் ஆத்மார்த்தமான நண்பர். அவர் மூலமாக எனக்கு நிறைய மீடியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தப்படத்தை என் மனைவி தான் தயாரிக்கிறார். அவர் சார்பாக மெளனம் ரவி அவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இந்தபடத்தின் பாடல்கள் இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு முழுவதும் பேசப்படும். அந்தளவிற்கு அவரின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விஜய் ஆண்டனி தான் என்னை தைரியப்படுத்தி இப்படத்தை தயாரிக்க வைத்தார். இந்த முழுப்படத்திலும் அவருடைய பங்களிப்பு மிக அதிகம். தயாரிப்பாளராக என் மனைவி உருவாகி இருந்தாலும் பைனான்ஸியர் உத்தவ், விஜய் ஆண்டனி இருவரும் ஆற்றிய பங்கு மிக அதிகம். இதனிடையே 2000 பேர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு தான் இந்த விழாவை துவங்கியுள்ளோம். இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி உள்பட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும். ஏன் என்றால் இந்தப்படத்தில் எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது” என்றார்

நடிகர் *ராதாரவி* பேசியதாவது,

“பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு ஒரு உன்னதமான மனிதர் என்றால் அது பொன்னார் மட்டும் தான். அவர் தான் என்னை இங்கு அழைத்து வந்தார். சொல்ல முடியாது அவரே பி.ஜே பி தலைவராக வந்தாலும் வருவார். சகோதரி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தது சந்தோஷம் என்றார். இந்திப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த மக்களை தமிழ்பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா. இவர் நல்லா என்னை கெடுத்துவிட்டார். அவர் எனக்கு இசை அமைத்த பூவே செம்பூவே என்ற பாடல் ரொம்ப பிரபலம். இயக்குநர் இமயத்திடம் நடிக்க நிறைய வாய்ப்பு கேட்டிருக்கேன். இப்ப அவர் நடிக்க வந்துட்டார். விஜய் ஆண்டனி நல்ல நண்பர். அவர் இப்படியான படங்கள் தான் செய்ய வேண்டும். நான் பிச்சைக்காரன் போன்ற படங்கள் தான் அவருக்கு செட் ஆகும். அப்படி வரிசையில் தமிழரசன் படமும் இருக்கும். இந்த விழாவை வாழ்த்துக்கூடிய ஒரு இடத்தில் வைத்திருக்கிறார்கள். நான் வெளிநாடு சென்ற போதும் என்னை ஒர்க் பெர்மிட் இல்லை என்று துரத்தி விட்டார்கள். அதைத் தான் இப்போது நம் நாட்டில் குடியுரிமைச் சட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கிருக்கவனை வெளியிலேப் போகச் சொன்னாதானய்யா பிரச்சனை. இது கூட தெரியவில்லை. நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் இப்படம். அதைத்தான் இந்தப்படம் சொல்கிறது. தயவுசெய்து இப்படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்” என்றார்

நடிகர் *விஜய் ஆண்டனி* பேசியதாவது,

“இன்னைக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டரா அகி, நடிகனாக இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் இளையராஜா. அவர் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அவர் ஒரு இசை அமைப்பாளருக்கு இசை அமைத்திருப்பது இதுதான். இந்தத் தயாரிப்பாளர் சிவா சாரைப் பார்க்க பயமாக இருக்கும். அவர் நிறைய செல்வு செய்யக்கூடியவர். நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். இந்தப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர். அவர் பெரிய இயக்குநராக வருவார். மோகன்ராஜா மகன் சிறப்பாக நடித்துள்ளான். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். பாருங்கள்”

*வானதி ஸ்ரீனிவாசன்* பேசியதாவது,

“கலைத்துறைக்கும் பா.ஜ.க கட்சிக்கும் இப்போது நெருக்கம் அதிகமாகி வருகிறது. நிறைய சினிமா பிரபலங்கள் சமீபகாலமாக எங்களிடம் வருகிறார்கள். அதனால் தமிழகம். மாற்றத்திற்கான மாநிலமாக மாற இருக்கிறது. ஜி.எஸ்.டி விசயத்திற்கும் பைரஸி விசயத்திற்கும் உதவி கேட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பைரஸி என்பதை மக்கள் நினைத்தால் தான் தீர்வு காண முடியும். அடுத்தவர் உழைப்பை திருடக்கூடாது என்ற எண்ணம் வர வேண்டும். இது ராஜாக்கள் இருக்கின்ற மேடை. சின்ன வயதில் பார்த்த பிரமித்தவர்கள் இவர்கள். திறமையான கலைஞர்கள் பங்காற்றியுள்ள இப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் அடுத்த கட்டத்திற்கு செல்ல இறைவன் அனந்த பத்மநாபசாமி அருள் புரியட்டும்” என்றார்

இயக்குநர் *பாரதிராஜா* பேசியதாவது,

“பெயரிலே பொன்னை வைத்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், விஜய் ஆண்ட்னி, சிவா அனைவருக்கும் வணக்கம். சிவா நல்ல படம் எடுக்கணும். என்று நினைப்பவர். விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா..பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத் தான் இருப்பான். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்கள். இது நல்லபடம். சிவா மனசிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும்” என்றார்

முன்னாள் மத்திய அமைச்சர்.*பொன்.ராதாகிருஷ்ணன்* பேசியதாவது

“தமிழரசனின் வெற்றிக்காக உழைத்தவர்களை எதிர்காலத்தில் இதற்கு நிகரான ஒரு படம் என்பது போன்ற வாழ்த்துக்களைச் சொன்னவர்களை வணங்குகிறேன். பாரதிராஜா இளையராஜாப் பற்றி பேசும் போது இதற்கு மேல் யாராலும் இளையராஜாவை புகழ முடியாது என்று நினைத்தேன். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும். தயாரிப்பாளர் சிவா ஒரு வேலையை எடுத்தால் அதை மிகச்சிறப்பாக முடிக்கக் கூடியவர். அவருடைய துணைவியாரும் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். திரைத்துறையில் இருக்கும் சில பிரச்சனைகளை சிலர் குறிப்பிட்டார்கள். நிச்சயமாக இது குறித்து உரிய அமைச்சர்களிடம் பேசுவோம். அதன் மூலம் உங்களோட இருப்போம் என்று சொல்லிக்கொள்கிறேன்..எங்களோடு இணைந்து பயணிக்கும் திரையுலகினரை அன்போடு வரவேற்று வாழ்த்துகிறேன். இந்தப்படம் மிகச்சிறந்த திரைப்படம் என்ற உச்சத்தை தொட வேண்டும். என்று வாழ்த்துகிறேன். உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு. விஜய் ஆண்டனி எங்கள் ஊர்க்காரர். எங்கள் ஊர்க்காரரில் நடிகர்களில் யாரும் பெரிதாக வரவில்லை. விஜய் ஆண்டனி மிகப்பெரிய நடிகராக அடையாளம் காண வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்

சிபிராஜ்ஜின் “வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி !

சிபிராஜ்ஜின் “வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natty in walterஇந்திய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களாக கொண்டாடப்படுபவர்களில் ஒருவராக இருக்கும் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது நடிப்பாலும் புகழை குவித்து வருகிறார். “சதுரங்க வேட்டை” தொடங்கி வித்தியாசமான வேடங்களில் தனது சிறந்த நடிப்பை தந்து வரும் அவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் பெரிதும் ஈர்க்கும் நடிப்பை வழங்கியிருந்தார். தற்போது சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் “வால்டர்” படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இது குறித்து அறிமுக இயக்குநர்
U.அன்பு கூறியதாவது…

“வால்டர்” படத்தின் வெகு முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குநர் கௌதம் மேனனை அணுகியது அனைவரும் அறிந்ததே. அவரும் இந்த கதாப்பாத்திரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. அதன் பிறகு பல நடிகர்களை இக்கதாப்பாதிரத்திற்கு பரிசீலித்தோம். இறுதியாக “நம்ம வீட்டு பிள்ளை” படத்திற்கு பிறகு நடிகர் நட்டி அவர்களை இக்கதாப்பாத்திரத்திற்கு அணுகினோம். குவியும் வாய்ப்புகளில் நல்லதை மட்டுமே செய்வேன் எனும் கொள்கையில் அவர் இருந்தார். கதையை முழுதாக கேட்ட பின்பே இப்படத்தில் நடிப்பதை பற்றி பேச முடியும் என்றார். கதை கேட்டதன் முடிவில் படத்தின் மீதும் அவரது பாத்திரம் மீதும் அவருக்கு பெரும் நம்பிக்கை வந்து உடனடியாக நடிக்க ஒத்துக்கொண்டார். அவரது பாத்திரம் சம்பந்தமான காட்சிகளை 15 நாட்கள் முன்னதாக தொடங்கி கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளோம்.

நட்டி வில்லன் பாத்திரத்தில் நடிப்பதாக பரவிய செய்திகள் குறித்து கூறிய இயக்குநர்…

அவரது பாத்திரம் முழுக்க வில்லன் என சொல்லமுடியாது. ஆனாலும் படத்தில் அவர் நேர்மறையானவரா அல்லது எதிரமறையானவரா என இறுதி வரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாப்பாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும் என்றார்.

சிபிராஜ் குறித்து கூறும்போது …
அவரது திறமை குறித்து புதுமுகமான நான் கூறி தெரியவேண்டியதில்லை. மொத்த சினிமா உலகமும் அறியும். அவரது திறமை குறித்து கூற வேண்டுமெனில் வெறும் முகப்பூச்சு செய்து கேமாரா முன் நிற்பவரல்ல அவர். அவரது தொழில்நுட்ப அறிவும், கதாப்பாத்திரத்தை அவர் கையாளும் விதமும், திரைப்படம் பற்றிய அவரது தெளிவும் அளப்பரியது. அவர் “வால்டர்” படத்தின் காவலன் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றார்.

ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்கும் வால்டர் படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படப்புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க சமுத்திரகனி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை – தர்மா பிரகாஷ்

ஒளிப்பதிவு – ராசாமதி

படத்தொகுப்பு – S. இளையராஜா

பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி

கலை இயக்கம் – A.R. மோகன்

நடனம் – தாஸ்தா

சண்டைப்பயிற்சி இயக்கம் – விக்கி

தயாரிப்பு மேற்பார்வை – K மனோஜ் குமார்

புகைப்படம் – தேனி முருகன்

டிசைன்ஸ் – J சபீர்

தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை’

தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh in Vanmuraiஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’.இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கிறது.

கதை நாயகனாக ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார். பிரதான நாயகியாக அர்ஷிதா ஸ்ரீதர் நடிக்க , வினோத்,நேகா சக்சேனா, சார்மிளா
மற்றும் நடிகர்கள் அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்கியிருப்பவர் மஞ்சித் திவாகர் இவர் கேரள வரவு.தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன்,கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா, சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜாக்கி ஜான்சன்,புகைப்படக் கலைஞர் அஜீஸ்,என இயக்குநருடன் இணைந்த திறமைக்கரங்களின் கூட்டு முயற்சியில் ‘வன்முறை’ படம் உருவாகியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும் கொடுமைகளும் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் உண்மைகள் வெளியே தெரியாமலேயே புதைக்கப்படுகின்றன.

கண்முன்னே பொள்ளாச்சியில் நடந்த தொடர் கொடூரங்கள் அச்சமூட்டும் சம்பவங்களாக கண்முன் நிழலாடுகின்றன .
தெலுங்கானாவில் நடைபெற்ற கொடுமையும் மக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது .பொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் உருவாகி உள்ளது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் எச்சரிக்கையூட்டும் வகையிலும் ‘வன்முறை’ படம் உருவாகியுள்ளது .

கேரளாவிலிருந்து தமிழகம் வரும் இளம்பெண்ணுக்கு ஒரு கொடுமை நேர்கிறது .அது பற்றி விசாரிக்கும் கடமையும் பொறுப்பும் நிறைந்த போலீஸ் அதிகாரியாக வரும் ஆர்.கே .சுரேஷ் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச்செல்கிறார் அவற்றைப் பற்றி ஆராய்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களின்ஆரம்பம் எங்கே இருக்கிறது என்று அறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் பொறுப்பான கடமைகளும் படம் பார்ப்பவரை படபடக்க வைக்கும் .படத்தில் வில்லனாக வரும் வினோத் கிருஷ்ணனின் கொடூர செயல்கள் பதறவைக்கும். அவரைப் போன்ற கொடூர ஆண்கள்
சமூகத்தில் பெண்ணை ஒரு நுகர் பொருளாகக் கருதும் மனப்பான்மை கவலைப்பட வைக்கும்.

தமிழில் படம் இயக்குவது பற்றி கேரள இயக்குநர் மஞ்சித் திவாகர் கூறும்போது,
“தமிழகத்தில் அறிமுகமாவதில் நான் பெருமைப்படுகிறேன். புதிய முயற்சிகள் அனைத்திற்கும் கைகொடுக்கும் ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள் .இங்கே தமிழர்கள் ஆள் யார் என்று பார்ப்பதில்லை திறமையை மட்டுமே பார்க்கிறார்கள். எனவேதான் நம்பிக்கையுடன் இங்கே தமிழ்ப்படம் இயக்க வந்திருக்கிறேன். இது பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும்.” என்கிறார்.

படத்தை பார்த்த தணிக்கைத் துறையினர் “இது எல்லாருக்குமான படம். முக்கியமாக பெண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் உருவாகியுள்ள படம் ” என்று பாராட்டி உள்ளனர். மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

‘வன்முறை’ ஜனவரி மூன்றாம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

தலைவர் படத்திற்கும் தல ஃபார்முலா..? சிவா மீது சீறும் ரஜினி ரசிகர்கள்

தலைவர் படத்திற்கும் தல ஃபார்முலா..? சிவா மீது சீறும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans request to Director Siva in Thalaivar 168 titleசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 168 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் இதன் சூட்டிங் ஸ்பாட்டில் தேசிய விருது பெற்றமைக்காக கீர்த்தி சுரேஷ்க்கு கேக் ஊட்டி பாராட்டு தெரிவித்திருந்தார் ரஜினி.

இப்பட சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இது கிராமத்து கதை என்பதால் மதுரை மாநகரம் போல செட் போட்டு எடுத்து வருகிறார்களாம்.

இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.

பெரும்பாலும் ரஜினி பட சூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே அப்பட தலைப்பை அறிவிப்பது வழக்கம்.

ஆனால் அஜித், விஜய் படங்கள் அப்படியில்லை. சூட்டிங் பாதி முடிந்த பின்புதான் அதன் தலைப்பை ஏதோ பெரிய விஷயம் போல பில்டப் கொடுப்பார்கள்.

இதுவரை தளபதி 64 படத்தலைப்பை அறிவிக்கவில்லை.

அஜித்தின் அடுத்த பட தலைப்பு வலிமை என அறிவித்துவிட்டார்கள். ஆனால் அந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

ஆனால் இதற்கு முன் அஜித்தின் வீரம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை சிவா தான் இயக்கினார். அவர் பாதி சூட்டிங்கை முடித்த பின்பு தான் தலைப்பை அறிவித்தார். அவர்தான் இப்போது ரஜினி படத்தை இயக்கி வருகிறார்.

எனவே தலைவர் படத்திற்கு தல பார்முலா தேவையில்லை. படத்தலைப்பை விரைவில் அறிவியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுவும் படத்தலைப்பு ரஜினியின் கேரக்டர் பெயராக இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரும்பாலும் ரஜினி கேரக்டர்கள் பெயரில் அதாவது… பாட்ஷா, கபாலி, காலா, பேட்ட என படத்தலைப்புகள் வைக்கப்பட்டது. ஆனால் விரைவில் வெளியாகவுள்ள தர்பார் என்ற தலைப்பு ரஜினியின் கேரக்டர் பெயர் இல்லை.

அதில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Rajini fans request to Director Siva in Thalaivar 168 title

More Articles
Follows