ஐஸ்வர்யாராய் மகளுக்கு சூப்பர் ஸ்டார் எழுதிய உருக்கமான கடிதம்

ஐஸ்வர்யாராய் மகளுக்கு சூப்பர் ஸ்டார் எழுதிய உருக்கமான கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rais daughterரஜினிகாந்தை நாம் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தாலும், அவர் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது அமிதாப் பச்சனைதான்.

எழுவது வயதை கடந்தபோதும், இன்றும் செலக்டிவ்வான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து சினிமாவில் கோலோச்சி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய பேத்திகளான ஆராத்யா (ஐஸ்வர்யாராய் மகள்) மற்றும் நவ்யாவுக்கு ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதம் தன் இரு பேத்திகளுக்கு மட்டுமில்லை. இந்தக் கடிதம் எல்லா பேத்திகளுக்கும் உரியது என்று அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த கடிதத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் எழுதியுள்ளதாவது..

என் அன்புக்குரிய நவ்யா, ஆராத்யாவுக்கு,

நீங்கள் இருவரும் உங்களின் மென்மையான தோள்களில் நீண்ட பாரம்பரியத்தின் மரபைச் சுமக்கிறீர்கள்.
ஆராத்யா, ஹரிவன்ஷ் ராய் பச்சன் (அமிதாப்பின் அப்பா) மரபையும், நவ்யா ஹச்.பி.நந்தா (அமிதாப்பின் மருமகன்) மரபையும் சுமக்கும் பெருமை அது.

உங்கள் இருவரின் தாத்தாக்களும் உங்களுக்கு அவர்களின் குடும்பப் பெயர்களோடு புகழ், கெளரவம் மற்றும் அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் நந்தாவாக இருக்கலாம். பச்சனாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இருவரும் பெண்கள்!

நீங்கள் பெண்ணாக இருப்பதாலேயே, மக்கள் அவர்களின் சிந்தனையையும், எல்லையையும் உங்கள் மேல் திணிப்பார்கள்.

நீங்கள் எப்படி உடுத்த வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறுவார்கள்.

அவர்கள் கூறும் தீர்ப்பின் நிழலில் வாழாதீர்கள். உங்கள் சொந்த அறிவின் ஒளியில் உங்களுக்கான விருப்பங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் அணியும் ஸ்கர்ட்டின் நீளத்தை வைத்து உங்களின் குணத்தை மற்றவர்கள் நிர்ணயிக்க அனுமதிக்காதீர்கள்.

உங்களின் நண்பர்களை அவர்கள் தேர்ந்தெடுக்க அனுமதிக்காதீர்கள். நீங்களே முடிவு செய்யுங்கள்.

உங்களின் திருமணம் குறித்து உங்களுக்குப் பிடித்தால் அன்றி மற்ற காரணங்களுக்காக ஒத்துக்கொள்ளாதீர்கள்.

amitab

மக்கள் ஏதாவது பேசுவார்கள். சில மோசமான விஷயங்களைப் பற்றிக்கூட கூறுவார்கள். அதற்காக அவற்றை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாதீர்கள்.

அந்நாளின் முடிவில், உங்களின் செயல்களுக்காக விளைவுகளை நீங்கள் மட்டுமே சந்திக்கப் போகிறீர்கள். அதனால் மற்றவர்கள் உங்களின் செயல்களில் தலையிட அனுமதிக்காதீர்கள்.

நவ்யா – உனக்குக் கிடைத்திருக்கும் பெயரும், புகழும் நீ சந்திக்கப்போகிற கஷ்டங்களில் இருந்து ஒருபோதும் பாதுகாக்காது. ஏனென்றால் நீ ஒரு பெண்.

ஆராத்யா – இதை நீ பார்த்துப் புரிந்துகொள்ளும்போது, உன் அருகில் நான் இல்லாமல் போகலாம். ஆனால் இன்று நான் சொல்வது உனக்கு நிச்சயம் பயன்படும்.

இந்த உலகம் ஒரு பெண்ணுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்ற பெண்களால்தான் அதை மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

உங்களின் சொந்த எல்லைகளை வகுப்பதும், உங்களின் சொந்த விருப்பங்களைத் தேர்வு செய்வதும், மக்களின் அறிவுரைகளைத் தாண்டி எழுவதும் அத்தனை சுலபமில்லை. ஆனால் நீங்கள்… உங்களால் எல்லோருக்கும் ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ முடியும்.

இதைச் செய்யுங்கள். நான் அடைந்த உயரத்தைக் காட்டிலும் அதிகம் செல்லுங்கள். நான் அமிதாப் பச்சன் என்று அறிவதைவிட, உங்களின் தாத்தா என்று அறியப்படவே ஆசைப்படுகிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

என்றும் உங்கள் அன்புடன்,
தாத்தா, பாட்டி.

‘பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கவில்லை..’ பிரபல நடிகர் மறுப்பு

‘பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கவில்லை..’ பிரபல நடிகர் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa stillsபைரவா படத்தில் விஜய்யுடன் கீர்த்திசுரேஷ், அபர்ணா வினோத், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பரதன் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இதில் 3வது வில்லனாக பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதுகுறித்து அவர் கூறியதாவது….

“நான் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மற்றபடி நான் பைரவா படத்தில் நடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார் இந்த மருது வில்லன் ஆர்.கே.சுரேஷ்.

விஜய்-செல்வராகவன் சந்திப்பு; புதிய பட அறிவிப்பு எப்போது?

விஜய்-செல்வராகவன் சந்திப்பு; புதிய பட அறிவிப்பு எப்போது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and selvaraghavanவிஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பைரவா.

இப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் திருநாளில் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்ற கேள்வி பல நாட்களாக கோலிவுட்டில் வலம் வருகிறது.

விஜய் 61 படத்தை அட்லி இயக்க, சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என செய்திகளும் வந்தன.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் விஜய்யை நேரில் சந்தித்து பேசினாராம்.

அப்போது விஜய்கேற்ற வகையில் கதை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் கதையை கேட்ட விஜய் என்ன தெரிவித்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை.

ஒருவேளை கூட்டணி முடிவாகும் பட்சத்தில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

அஜித்துக்காக குரல் கொடுக்க காத்திருக்கும் தனுஷ்

அஜித்துக்காக குரல் கொடுக்க காத்திருக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and dhanushதனுஷ் நடிப்பில் விரைவில் தொடரி மற்றும் கொடி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

தற்போது தொடரி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்களது குரல் யாருக்கு பொருத்தமாக இருக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது, அஜித் அவர்களுக்கு எனது குரல் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் வெற்றிமாறன், செல்வராகவன் ஆகியோரின் இயக்கத்தில் இலவசமான நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் சினிமா ரசிகனின் பவரை சிவகார்த்திகேயன் எப்போது உணர்ந்தார்?

தமிழ் சினிமா ரசிகனின் பவரை சிவகார்த்திகேயன் எப்போது உணர்ந்தார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan stillsபொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயன் வாழ்வில் திருப்புமுனையை உண்டாக்கியது என்று சொன்னால் அது மிகையல்ல.

இப்படத்தை தொடர்ந்து இவரின் மார்கெட் வேல்யூ ஜெட் வேகத்தில் எகிற ஆரம்பித்தது.

இந்நிலையில் இன்று இப்படம் வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அவரை வாழ்த்தி நம் தளத்தில் “சிவகார்த்திகேயன் பவரை தமிழ் சினிமா உணர்ந்த தருணம் இது” என்று பதிவிட்டு இருந்தோம்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் நம் தளத்திற்கு பதிலளிக்கும்போது கூறியுள்ளதாவது..

“தமிழ் சினிமா ரசிகனின் பவரை நான் உணர்ந்த தருணம் என்றும் கூட சொல்லலாம்” என தெரிவித்துள்ளார்.

சிம்புவின் அடுத்த ஜோடி தமன்னா; மூன்றாவது ஜோடி யார்?

சிம்புவின் அடுத்த ஜோடி தமன்னா; மூன்றாவது ஜோடி யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Tamanna romance‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் மூன்று கெட்டப்பில் சிம்பு நடிக்க, ஒவ்வொரு கெட்டப்பின் சூட்டிங்கை முடித்து வருகிறார் இயக்குனர்.

மதுரை மைக்கேல் கெட்டப்புக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். இந்த கெட்டப்பின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

அடுத்த கெட்டப்புக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முமூன்றாவது கெட்டப்பின் ஜோடி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.

இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

More Articles
Follows