சினிமா விமர்சகர்கள் மீது கொலவெறி தாக்குதல் நடத்தும் துல்கர் & பால்கி

சினிமா விமர்சகர்கள் மீது கொலவெறி தாக்குதல் நடத்தும் துல்கர் & பால்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமிதாப்பச்சன் தனுஷ் நடித்த ஷமிதாப் என்ற படத்தை என்ற ஹிந்தி படத்தை இயக்கியவர் பால்கி.

பாலகிருஷ்ணன் என்ற முழு பெயரை கொண்ட தமிழரான இவர் ஹிந்தி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘CHUP’.

இந்த படத்தில் துல்கர் சல்மான், சன்னி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் இந்த வாரம் செப்டம்பர் 23ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

அப்போது துல்கர் சல்மான் பேசியதாவது…

“அண்மைக்காலமாக சினிமா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

மோசமான விமர்சனங்களால் பெரிய பட்ஜெட் படங்கள் மோசமான தோல்வியை தழுவுகிறது.

எல்லோரையும் சகட்டுமேனிக்கு திட்டுகின்றனர். என் மீதும் பலர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

விமர்சனங்கள் தேவையானவை. அவை ஒன்றும் புதிதல்ல. ஆனால் வரம்பு மீறி செல்லும்போது கண்டிப்பது கடமை.

மேலும் ஒரு பிரபலத்தை தனிப்பட்ட முறையில் ட்ரோல் செய்வதையும் ஏற்க முடியாது.” என்றார் துல்கர்.

கூடுதல் தகவல்…

திரைப்படங்களை கேவலமாக விமர்சிக்கும் விமர்சகர்களை நாயகன் கொலை செய்வதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Dulquer Salmaan  & Balki’s  murderous attack on film critics

செம அப்டேட்: மீண்டும் இணையும் இயக்குனர் வசந்தபாலன் – நடிகர் பரத்

செம அப்டேட்: மீண்டும் இணையும் இயக்குனர் வசந்தபாலன் – நடிகர் பரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன்.

இவர் இயக்கிய ‘வெயில்’ படத்தில் பரத், பசுபதி, பிரியங்கா, பாவனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த 2006ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் மூலம் தான் இசை அமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ்.

இந்த நிலையில் தற்போது வசந்தபாலன் மற்றும் பரத் கூட்டணி மீண்டும் 17 வருடங்களுக்குப் பிறகு இணைய உள்ளது.

இவர்கள் இருவரும் இணைவது வெப் சீரிஸ் என கூறப்படுகிறது. எனவே விரைவில் இது பற்றிய அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

இவையில்லாமல் ‘அநீதி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார் வசந்தபாலன். இது விரைவில் வெளியாக உள்ளது.

வசந்தபாலன் - பரத்

Vasanthapalan & Bharat join new movie after 17 years

JUST IN நல்லா வச்சி செஞ்சிட்டாங்க.; VTK THANKS MEETல் சிம்பு பேச்சு (வீடியோ)

JUST IN நல்லா வச்சி செஞ்சிட்டாங்க.; VTK THANKS MEETல் சிம்பு பேச்சு (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘வெந்து தணிந்தது காடு’.

உடல் எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருந்த இந்த படத்தை கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருந்தார்.

சித்தி இத்னானி நாயகியாக நடிக்க ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஐசரி கணேசன் தயாரித்து இருந்தார்.

செப்டம்பர் 15ல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. .

இந்த நிலையில் VTK THANKS MEETல் சிலம்பரசன் பேசியதாவது…

நான் என்ன பேசுறதுன்னு தெரியல…

நல்லா வச்சி செஞ்சிட்டாங்க…

சிம்பு பேசிய பேச்சு முழு விவரம் இதோ…

Silambarasan speech at Vendhu Thanindhathu Kaadu thanks meet

நல்லா வச்சி செஞ்சிட்டாங்க.. – Simbu l Gautam Menon l STR l Vendhu Thanindhathu Kaadu Thanks meet ? filmistreet
https://youtu.be/lETonO1MRYM

JUST IN நெகட்டிவ் ரிவ்யூக்கு நன்றி – கௌதம் மேனன்.; VTK படம் ஹிட்டு இல்ல – ஐசரி கணேஷ்.. சிம்பு முன்னிலையில் பிரபலங்கள் பேச்சு

JUST IN நெகட்டிவ் ரிவ்யூக்கு நன்றி – கௌதம் மேனன்.; VTK படம் ஹிட்டு இல்ல – ஐசரி கணேஷ்.. சிம்பு முன்னிலையில் பிரபலங்கள் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘வெந்து தணிந்தது காடு’.

உடல் எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருந்த இந்த படத்தை கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருந்தார்.

சித்தி இத்னானி நாயகியாக நடிக்க ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஐசரி கணேசன் தயாரித்து இருந்தார்.

செப்டம்பர் 15ல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. முதல் நாளில் ரூ.11 கோடி வசூலை ஈட்டியதாகவும் 2வது நாளில் ரூ.8 கோடி வசூலித்துள்ளதாகவும் செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் கௌதம் மேனன் பேசியதாவது…

சிம்புவின் கடின உழைப்புக்கு நன்றி. இந்த படத்திற்கு நைட் நல்லா தூங்கிட்டு வாங்கன்னு சொன்னது தப்பா போச்சு.

நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்தவங்களுக்கு நன்றி.”

கௌதம் மேனன்

ஐசரி கணேஷ் பேசியதாவது…

இந்த படம் ஹிட்டு இல்ல.. பம்மர் ஹிட்டு.. செம கலெக்சன்.. இந்த படத்திற்கு சிம்புவுக்கு தேசிய விருது கிடைக்கும்..

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 நிச்சயமாக வரும். அதற்காக எழுத்தாளர் ஜெயமோகன் & இயக்குனர் கௌதம் மேனன் உழைத்து வருகின்றனர்.

ஐசரி கணேஷ்

Gautam and Ishari Ganesh talks at VTK Thanks Giving Meet

பிரிக்க நினைத்தால் செருப்பால் அடிப்பேன் – டென்ஷனில் நடிகர் மயில்சாமி

பிரிக்க நினைத்தால் செருப்பால் அடிப்பேன் – டென்ஷனில் நடிகர் மயில்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குணச்சித்திர வேடம் காமெடி வேடம் என எதுவானாலும் ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் மயில்சாமி.

கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். தனியாகவும் காமெடி செய்துள்ளார்.

இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்…

“இந்து, முஸ்லீம், கிறிஸ்து என மதங்களை பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. மூன்று பேரும் சேர்ந்து இருப்பது தான் இந்தியா.

உங்கள் ஓட்டுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். ஆனால் மக்கள்்ஏமாற மாட்டார்கள். திருப்பி பதிலடி கொடுப்பார்கள். மதங்களால் மனிதர்களைப் பிரிக்க நினைத்தால் செருப்பால் அடிப்பேன்.” என்றார்.

Actor Mayilsamy angry speech about Religious Politics

சத்யசிவா – சசிகுமார் கூட்டணியில் ‘நான் மிருகமாய் மாற’ ரிலீஸ் அப்டேட்

சத்யசிவா – சசிகுமார் கூட்டணியில் ‘நான் மிருகமாய் மாற’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த படத்திற்கு ‘காமன் மேன்’ என்று முதலில் பெயரிட்டு இருந்தனர்.

பின்னர் அந்த தலைப்பை மாற்றி தற்போது ‘நான் மிருகமாய் மாற’ என தலைப்பு வைத்துள்ளனர்.

சாமானியன் ஒருவன் அவனின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்தி் இந்த படத்தை இயக்கியுள்ளார் சத்ய சிவா.

இந்த படம் ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் அக்டோபரில் வெளியாகும் என தேதியை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளனர்.

Sasikumar starrer CommonMan is now Naan Mirugamaai Maara

Chendur Film International T. D.Rajha presents, Sathyashivaa Directorial, M. Sasikumar starrer “#CommonMan” is now #NaanMirugamaaiMaara. An action-packed story releasing this October 2022.

https://youtu.be/DdcTBX1fQ14

A @GhibranOfficial Musical

@SasikumarDir @Sathyasivadir

@vikranth_offl @HariPrriya6 @RajaBhatta123 @srikanth_nb @ChendurFilm @td_rajha @dir_rvs @RIAZtheboss @TalkiesMetro @thinkmusicindia

More Articles
Follows