தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருட்டு விசிடியால் சினிமா அழிந்துவிடும் நிலையில் உள்ளது. இணையங்களில் புதிய படங்கள் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது. இந்த வார்த்தைகளை நாம் தினம் தினம் கேட்டு வருகிறோம்.
பாகுபலி 2 வெளியான நாள் அன்று கூட முதல் காட்சிக்கு முன்பே இணையங்களில் இப்படம் வெளியானது.
ஆனால் எத்தனை இடையூறுகள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.
இந்திய சினிமாவே இதன் வசூல் சாதனையை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது.
திருட்டு விசிடியில் வெளியிட்டவர்களே இதை கனவிலும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.
இந்நிலையில் பைரஸி குறித்து தன் அண்மை பேட்டியில் ராஜமௌலி கூறியுள்ளதாவது…
உலக சினிமாவுக்கே பைரஸிதான் பெரும் பிரச்சினை.
தியேட்டர் வெளியீட்டுக்கும், தொலைக்காட்சிக்கும் எனத் தனியாக வியாபாரம் செய்து வருகிறோம்.
ஆனால், இணையத்தில் வியாபாரம் செய்ய தவறிவிட்டோம்.
இதை பைரஸியில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தியேட்டர், டிவி, கம்ப்யூட்டரை போன்று சிலருக்கு மொபைல் போன்களில் படம் பார்ப்பது பிடித்துள்ளது.
எனவே அவர்களுக்கு ஏற்றவாறு, நல்ல தரத்தில் படத்தை கொடுத்து, பிரிண்ட் நன்றாக இருக்கும் வகையில் இணையத்தில் வெளியிட வேண்டும்.
அப்போது பணம் கொடுத்து அவர்களும் படம் பார்ப்பார்கள். பைரஸியை தேடிச் செல்ல மாட்டார்கள்” என்று யோசனை தெரிவித்துள்ளார் ராஜமெளலி.
Baahubali Director SS Rajamoulis idea to destroy Piracy