விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை சொல்லும் RRR..; தசரா பண்டிகைக்கு ரிலீஸ்.!

விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை சொல்லும் RRR..; தசரா பண்டிகைக்கு ரிலீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR Movieஇந்தியா முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான RRR, தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் அணிவகுக்கும் RRR, சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை கற்பனை கலந்து காட்சிப்படுத்துகிறது.

திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா…

“RRR-ன் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம்.

தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாடுவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

டி வி வி தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.

Director SS Rajamouli’s RRR set to release on October 13

‘குட்டிப்புலி’ சரவண சக்தி் இயக்கத்தில் இணையும் விமல் & தன்யா ஹோப்

‘குட்டிப்புலி’ சரவண சக்தி் இயக்கத்தில் இணையும் விமல் & தன்யா ஹோப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tanya Hope பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் MIK Productions No 1 இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

MIK production (P) Ltd நிறுவனம் சார்பாக P இளையராஜா தயாரிக்கும் இந்தப் புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி.

இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார்.

மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

பல வெற்றி படங்களில் தனது சிறந்த ஒளிப்பதிவை வழங்கிய வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு பெயர்பெற்ற கனல் கண்ணன் இப்படத்தின் பைட் கொரியாகிராபராக பங்கேற்கிறார்.

இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் firstlook போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

நடிகர்கள்

நாயகன் – விமல்

நாயகி – தன்யாஹோப்

மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது

தொழில்நுட்பகலைஞர்கள்

தயாரிப்பு: MIK Productions (P) Ltd
P. இளையராஜா

இயக்கம் : குட்டிப்புலி சரவண சக்தி

ஒளிப்பதிவு: வைட் ஆங்கிள் ரவிசங்கர்

எடிட்டர் : கோபி கிருஷ்ணா

ஸ்டண்ட்: கனல் கண்ணன்

ஆர்ட் டைரக்டர் : ஜெயகுமார்

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கர்ண ராஜா

புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ்: தர்மராஜ் மாணிக்கம்

மக்கள் தொடர்பு : P. தியாகராஜன்

Vemal and Tanya hope joins for new film

சரக்கடிக்கல.. அடிச்சா சிக்ஸ் பேக் வராது…; விஷ்ணு விஷால் நீண்ட விளக்கம்

சரக்கடிக்கல.. அடிச்சா சிக்ஸ் பேக் வராது…; விஷ்ணு விஷால் நீண்ட விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூரி-யின் நில விவகார மோசடியில் ஏற்கெனவே விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோரது பெயர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தற்போது விஷ்ணு விஷால் மற்றொரு பிரச்சினை சிக்கியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு…
விஷ்ணு விஷால் மீது அவர் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர். அதில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தினமும் இரவு மது குடித்துவிட்டு சத்தமாக பாட்டு வைத்து ஆட்டம் போடுவதாக கூறப்பட்டது.

இதனால் தங்களது தூக்கம் கெடுவதாகவும், ஏன் எனக் கேட்பவர்களை விஷ்ணு தகாத வார்த்தையில் பேசுவதாகவும் அதில் தெரிவித்திருந்தனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்…
” பல நாட்கள் மது அருந்தாமல் இருந்து கடுமையான டயட் இருந்தால் மட்டுமே சிக்ஸ் பேக் சாத்தியமாகும். தினமும் குடிப்பவர்களுக்கு உடனடியாக சிக்ஸ் பேக் வராது. இதுகூட தெரியாமல் சிலர் பிதற்றுகிறார்கள்”, என பதிவிட்டிருந்தார்.

இப்போது நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதில், தினமும் படப்பிடிப்பில் 300 பேர் உடன் பணியாற்றுவதால் பாதுகாப்பு கருதி என் வீட்டில் தங்காமல் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறேன். நான் தயாரிக்கும் எப்ஐஆர் படம் தொடர்பாக தினமும் நான் பலரை சந்திக்கிறேன். வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறேன். நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் நேற்று முதல் என் மீது சில குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

என்னை சந்திக்க வந்த எனது பணியாளர்கள், விருந்தினர்களிடம் வீட்டு உரிமையாளர் தான் தவறாக நடந்தார். எனது படத்தின் ஒளிப்பதிவாளரின் பிறந்தநாளை நான் வசிக்கும் பிளாட்டில் கொண்டாடினோம். இந்த பார்டியில் ஆல்கஹால் உபயோகித்தது உண்மை தான். மற்றபடி அங்கு எந்த தவறும் நடக்கவில்லை.

வீட்டு உரிமையாளர் தகாத வார்த்தைகளால் பேசினார். அதனால் நானும் கோபப்பட்டு அப்படி பேசினேன். போலீஸிற்கு தெரியும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று, அதனால் அவர்கள் சென்றுவிட்டனர்.

முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால் பொதுமக்கள் மற்றும் மீடியாக்களால் நான் அதிகம் விமர்சிக்கப்படுகிறேன்.

அந்த வீடியோவில் வீட்டு உரிமையாளரிடம் நான் கோபப்பட்டு பேசும் வீடியோ தான் வந்தது. அவர் தவறான வார்த்தைகளை பேசியதால் தான் நான் அப்படி பேசினேன். எந்த ஒரு மனிதனும் கெட்ட வார்த்தையை சகித்து கொள்ள மாட்டான்.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நான் விளக்கம் கொடுப்பது கிடையாது. ஆனால் என்னை குடிகாரன், கூத்தாடி என்று தவறாக சித்தரிப்பதையும், நான் சார்ந்த சினிமா துறையை தவறாக காண்பிப்பதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது.

என் வீட்டு உரிமையாளர் எப்படி நடந்து கொண்டார் என்பதை என்னால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். என் அப்பா வயது உடைய ஒருவரையும், அவரது குடும்பத்தையும் தவறாக காண்பிக்க நான் விரும்பவில்லை.

நான் அவரின் மகனிடம் பேசிவிட்டேன். கடைசியாக, என் படப்பிடிப்பு முடிந்ததும், இந்த வீட்டை விட்டு காலி செய்யும் முடிவுக்கு வந்துவிட்டேன். நான் இப்படி செய்வதால் என்னை பலவீனமானவன் என்று நினைக்க வேண்டாம்.

தேவையற்ற விஷயங்களுக்காக நான் சண்டை போட விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகளுக்காக நான் நிறைய உழைக்க வேண்டி உள்ளது.

Vishnu Vishal statement about his apartment party issue

6 pack dont suddenly appear if you drink everyday..
You got to be on strict diet and off alcohol completely for a long time..
Some people dont understand the LOGIC…

அந்தாதுன் ரீமேக்… : தமிழில் பிரசாந்த்.. மலையாளத்தில் ப்ருத்விராஜ்… தெலுங்கில் நிதின்

அந்தாதுன் ரீமேக்… : தமிழில் பிரசாந்த்.. மலையாளத்தில் ப்ருத்விராஜ்… தெலுங்கில் நிதின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018ல் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட்டான இப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ள நிலையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

‘அந்தகன்’ என்று இப்படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்துள்ளனர்.

பிரசாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கிறார்.

ஜெ.ஜெ.பெஃட்ரிக் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

இந்த நிலையில் மலையாளத்திலும் இந்த படம் ரீமேக் செய்யப்படுகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார்.

ராதிகா ஆப்தே கேரக்டரில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கில் நிதின், தமன்னா நடிக்கின்றனர்.

Andhadhun 3 language remake updates

இமானுக்கு பிறந்த நாள் பரிசாக சூர்யா பட வாய்ப்பளித்த பாண்டிராஜ்

இமானுக்கு பிறந்த நாள் பரிசாக சூர்யா பட வாய்ப்பளித்த பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்குகிறார்.

சூர்யா நடிக்கும் 40-வது படமாக இது உருவாகுகிறது.

படத்தின் நாயகியாக டாக்டர் பட நாயகி பிரியங்கா நடிப்ப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கும் இந்த சூர்யா படத்திற்கு டி.இமான் இசையமைப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இதை ரீட்வீட் செய்துள்ள இயக்குனர் பாண்டிராஜ், ”இமானுடன் தொடர்ந்து 3-வது முறையாக பணிபுரிவது மகிழ்ச்சி. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Imman compose music for Suriya 40 directed by Pandiraj

நடிகை வெண்பா-வின் ஆசையை கமல்-ரஜினி நிறைவேற்றுவார்களா.?

நடிகை வெண்பா-வின் ஆசையை கமல்-ரஜினி நிறைவேற்றுவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venba‘கற்றது தமிழ்’, ‘சிவகாசி’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் வெண்பா.

மேலும் குழந்தை பருவத்தில் தனியார் டிவி..க்களில் விஜே-ஆக பணிபுரிந்துள்ளார்.

வளர்ந்து குமரியான பிறகு ஹீரோயின் வேடத்தில் மட்டுமே நடிப்பேன் என சவால் விட்டு நாயகியாக நடித்து வருகிறார்.

காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான அல்வா என்ற குறும்படத்திலும் நாயகியாகவே நடித்தார்.

விரைவில் வெளியாகவுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜிவி. பிரகாஷ் உடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவரை தொடர்பு கொண்டு பேசியபோது…

சிஸ்டர் கேரக்டர்களில் நடிக்க நிறைய சான்ஸ் வருகிறது. ஆனால் நடிக்கமாட்டேன்.

நிறைய டிவி சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

சீறு படத்தில் ஜீவாவின் தங்கையாக நடிக்க கேட்டனர். ஆனால் முடியாது என மறுத்துவிட்டேன்.

கமல் ரஜினி போன்ற சீனியர் நடிகர்களுக்கு மட்டும் மகளாக நடிக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்தார் வெண்பா.

வெண்பாவின் ஆசையை ரஜினி கமல் என யாராவது நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

I wish to act with Rajini and Kamal says Actress Venba

More Articles
Follows